கீர்த்திக்கு வலை வீசும் தயாரிப்பாளர்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
கீர்த்திக்கு வலை வீசும் தயாரிப்பாளர்

ஹீரோயின்கள் கோடிகளில் சம்பளம் தொட்டிருக்கின்றனர். அந்த பட்டியலில் விரைவில் கீர்த்தி சுரேஷ் சேர உள்ளார். தமிழில் தானா சேர்ந்த கூட்டம், சண்டகோழி 2 உள்பட மூன்று படங்களிலும், தெலுங்கில் பவன் கல்யாணுடன் ஒரு படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தெலுங்கு பட தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் தனது மகன் சாய் ஸ்ரீனிவாஸை வைத்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க கீர்த்தியிடம் கேட்டிருக்கிறார்.

மகனுக்காக பெரிய ஹீரோயின்களை அவர்கள் கேட்கும் சம்பளத்தைவிட அதிக சம்பளம் கொடுத்து உடனடியாக கால்ஷீட் பெறுவது இவரது டெக்னிக். சமந்தா 1 கோடி சம்பளம் பெற்றபோது ஒன்றே முக்கால் கோடி கொடுத்து கால்ஷீட் பெற்றார். அதேபோல் ரகுல் ப்ரீத் சிங்கிற்கும் வழக்கமாக அவர் வாங்கும் சம்பளத்தைவிட அதிக சம்பளம் பேசி கால்ஷீட் பெற்றார். தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. பயோபதி ஸ்ரீனு இயக்குகிறார்.

இதையடுத்து சாய் ஸ்ரீனிவாஸ் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க கீர்த்தியிடம் கால்ஷீட் கேட்டு வருகிறார் தயாரிப்பாளர். ஏற்கனவே அவர் தான் நடிக்கும் படங்களுக்கு கால்ஷீட் தந்துவிட்டதால் சாயுடன் நடிக்க கால்ஷீட் இல்லை என்று மறுத்தார். ஆனால் இதுவரை கீர்த்தி வாங்கிய சம்பளத்தைவிட கூடுதல் சம்பளம் தருவதாக பெருந்தொகை ஒன்றை தயாரிப்பாளர் குறிப்பிட்டார். இது கீர்த்தியை யோசிக்க வைத்திருக்கிறது. அதிக சம்பளத்துக்காக தனது கால்ஷீட்டை அட்ஜெஸ்ட் செய்து தருவார் என்று பட தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

Visit Our Sites:

Tamilnewsstar.com

Tamilaruvi.news

Tamilaruvi.tv

Tamilaruvimedia.com

Tamil24news7.com

Tamilpriyam.com