இந்தோனேசியாவில் உள்ள ஒரு பெட்ரோல் கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்தால் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தோனேசியா நாட்டின் உள்ள சுமத்ரா தீவின் அருகில் உள்ள பகுதிகளில் பெட்ரோல் ஊற்றுகள் அதிகமாக உள்ளன. அங்குள்ள மக்கள் பெட்ரோல் கிணறுகளை திருட்டுத்தனமாக பயன்படுத்தி பெட்ரோல் எடுத்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள பசி புட்டி என்ற கிராமத்தில் பெட்ரோல் கிணறு ஒன்று சுமார் 250 […]
உலக செய்திகள்
இங்கிலாந்து இளவரசருக்கு 3வது குழந்தை: மகிழ்ச்சியில் மன்னர் பரம்பரை
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்–டயானா தம்பதியரின் மூத்த மகனும் இளவரசருமான வில்லியம்ஸ் அவர்களுக்கு ஏற்கனவே 4 வயது ஜார்ஜ் மற்றும் 3 வயது சார்லோட் ஆகிய 2 குழந்தைகள் உள்ள நிலையில், இன்று அவருக்கு 3வது குழந்தை பிறந்துள்ளது. வில்லியம்ஸ் அவர்களின் மனைவி கேதே மிடில்டன் இன்று அழகான ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். வில்லியம்ஸ்-கேதே தம்பதிக்கு 3வது குழந்தை பிறந்த இந்த தகவலை இங்கிலாந்து அரண்மனை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும் […]
புதரில் சிக்கிய குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்!
ஆஸ்திரேலியாவில் காட்டுப்பகுதியில் இருக்கும் புதரில் சிக்கிய 3 வயது குழந்தையை இரவு முழுவதும் நாய் பாதுகாத்த சம்பவம் பெரும் வியப்பை வைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தை சேர்ந்த ஆரோரா என்ற 3வயது குழந்தை வீட்டை விட்டு வெளியேறி சுமார் 2 கி.மீ தூரம் வரை சென்றுள்ளார். அப்போது காட்டுப்பகுதியில் உள்ள புதரில் சிக்கிக்கொண்டார். அவரது வீட்டில் வளரும் மாக்ஸ் என்ற நாய் குழந்தையுடன் உடன்சென்றுள்ளது. குழந்தையை காணாமல் போனதை கண்டு […]
வேற்றுகிரகவாசி போல் மாறிய வாலிபர்
அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பல அபாய நடைமுறைகளை பின்பற்றி வேற்றுக்கிரகவாசிகளைப் போல் தன்னை மாற்றிகொண்டு வாழ்ந்து வருகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த வின்னி ஒ (22) 110 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை செய்து தன்னை வேற்றுக்கிரகவாசியை போல் மாற்றிக்கொள்ள முயன்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் முழுமையான வேற்றுக்கிரகவாசியாக மாற அசைப்பட்டு அவரது பிறப்புறுப்பையும் நீக்கியுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தன்னுடைய 17 வயதில் இருந்தே இந்த முயற்சியை துவங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் […]
ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி இந்தியா 10 தங்க பதக்கங்களை வென்றது
தெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகள்; 10 தங்க பதக்கங்களை வென்றது இந்தியா நேபாள நாட்டில் தெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 21ந்தேதி தொடங்கின. இதில், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், பூடான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகள் விளையாடின. இந்த நிலையில், இந்திய வீரர், வீராங்கனைகள் மொத்தம் 10 தங்க பதக்கங்களை கைப்பற்றி உள்ளனர். அவற்றில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 7 தங்கம் மற்றும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் […]
நிகரகுவாவில் போராட்டத்தின்போது பத்திரிகையாளர் சுட்டுக்கொலை
மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவில், ஓய்வூதிய சீர்திருத்தம் காரணமாக அரசாங்கத்துக்கு எதிராக கடந்த சில தினங்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டங்களில் வன்முறை மூண்டது. போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதல்களில் பலர் பலியாகி உள்ளனர். சுமார் 25 பேர் பலியாகி உள்ளதாக உள்ளூர் மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. இந்த நிலையில், அங்கு தெற்கு கரீப்பியன் கடற்கரை பகுதியில் ஏஞ்சல் கஹோனா என்ற பத்திரிகையாளர் செய்தி சேகரிப்பில் […]
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு
இஸ்ரேல் – பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையிலான காஸாமுனை எல்லைப்பகுதியில் இஸ்ரேலியப் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். 1967-ம் ஆண்டுவரை ஜோர்டான் வசமிருந்த கிழக்கு ஜெருசலேம் நகரை கைப்பற்றிய இஸ்ரேல் அரசு கடந்த 1980-ம் ஆண்டில் இந்நகரை தங்கள் நாட்டுடன் இணைத்து கொண்டது. ஜெருசலேம் நகரில் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் நிறைந்துள்ளதால் மூன்று மதத்தினரும் இந்நகரை தங்களுக்கே உரிமையாக்கி கொள்ள முயன்று […]
ஏமனில் சவுதி கூட்டுப்படையினரின் விமான தாக்குதலில் 20 அப்பாவி பொதுமக்கள் பலி
ஏமன் நாட்டின் டைஸ் பகுதியில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய விமானத் தாக்குதலில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பலப்பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்கள் வைத்து அந்த பகுதிகைளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர். சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான […]
ஜெர்மனி பயணத்தை முடித்துகொண்டு இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி
ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி அந்நாட்டின் வேந்தர் ஏஞ்சலா மெர்கெலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி முடித்த பின்னர் இந்தியாவுக்கு புறப்பட்டார். காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு லண்டன் பங்கிங்காம் அரண்மனையில் நேற்று தொடங்கியது. பிரிட்டன் ராணி எலிசபெத் மாநாட்டை தொடங்கி வைத்தார். காமன்வெல்த் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள 53 நாடுகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் பிரதமர் மோடி மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாட்டில் 91 […]
சுவீடன் நாட்டிலிருந்து பிரிட்டன் சென்றார் பிரதமர் மோடி
5 நாள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி சுவீடன் பயணத்தை முடித்துகொண்டு பிரிட்டன் வந்தடைந்தார். பிரதமர் நரேந்திர மோடி தனது 5 நாள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக நேற்று முன்தினம் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் போய்ச் சேர்ந்தார். அவரை அந்த நாட்டின் பிரதமர் ஸ்டீபன் லோப்வென், விமான நிலையத்துக்கு சென்று நேரில் வரவேற்றார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, சுவீடன் நாட்டின் மன்னர் 16-ம் காரல் […]





