உலக செய்திகள்

ஆஸ்கார் விருது வழங்கும் விழா

ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் தவறான திரைப்படம் விருதுக்கு அறிவிக்கப்பட்டதால் குழப்பம்

ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் தவறான திரைப்படம் விருதுக்கு அறிவிக்கப்பட்டதால் குழப்பம் சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் தவறான திரைப்படம் விருதுக்கு அறிவிக்கப்பட்டதால் ஆஸ்கார் விருது வழங்கும் விழா கேலிக்கூத்தாக முடிவடைந்தது. திரைத்துறையில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செலஸ் நகரில் நடைபெற்றது. 89-ஆவது ஆஸ்கார் விருது விழாவான இதில் 24 பிரிவுகளில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. ”லா […]

கிம் ஜாங்-நம்

கிம் ஜாங்-நம் , நரம்பு மண்டலத்தைத் தாக்கும் வீரியம் மிக்க ரசாயனம் கொடுக்கப்பட்டதால் தான் உயிரிழந்தார் – புதிய தகவல்

கிம் ஜாங்-நம் , நரம்பு மண்டலத்தைத் தாக்கும் வீரியம் மிக்க ரசாயனம் கொடுக்கப்பட்டதால் தான் உயிரிழந்தார் – புதிய தகவல் வடகொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங்-நம், மிகுந்த நச்சுத்தன்மை கொண்ட வி.எக்ஸ் என்ற நரம்பு மண்டலத்தைத் தாக்கும் வீரியம் மிக்க ரசாயனம் கொடுக்கப்பட்டதால்தான் உயிரிழந்திருக்கிறார் என மலேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியம் சதாசிவம் தெரிவித்திருக்கிறார். அந்த ரசாயனம் வீரியம் மிக்கதாக இருந்ததால், எந்த ஒரு எதிர்வினை மருந்தும் […]

ஐ.நா நோக்கிய மனிதநேய ஈருருளி

ஐ.நா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் ஆரம்பம்

ஐ.நா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் ஆரம்பம் ஐக்கிய நாடுகள் நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் ஐரோப்பிய நேரத்தின் படி நேற்றைய தினம் மதியம் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் இருந்து ஆரம்பித்துள்ளது. ஐக்கிய நாடுகள் நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும், ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் இருந்து ஐக்கிய நாடுகள் நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் ஆரம்பித்தது. பெல்ஜியம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒழுங்கமைப்பில் பெல்ஜியம் வாழ் தமிழ் […]

லாகூர் பிரதான மார்க்கெட்டில் குண்டுவெடிப்பு

லாகூர் பிரதான மார்க்கெட்டில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு 8 பேர் பலி – 20 பேர் காயம்

லாகூர் பிரதான மார்க்கெட்டில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு 8 பேர் பலி – 20 பேர் காயம் பாகிஸ்தானின் லாகூர் நகரில் இன்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் தீவிரவாதி ஹபீஸ் சயீதுக்கு எதிராக, அந்நாட்டு அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஹபீஸ் சயீதுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் அரசு மீது தீவிரவாதிகள் கடும் கோபத்தில் உள்ளனர். இந்த […]

கிம் ஜாங் நம் கொலை தொடர்பாக

கிம் ஜாங் நம் கொலை தொடர்பாக ஹையான் க்வாங் சாங் உட்பட மேலும் 3 பேரிடம் விசாரணை

கிம் ஜாங் நம் கொலை தொடர்பாக ஹையான் க்வாங் சாங் உட்பட மேலும் 3 பேரிடம் விசாரணை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அண்ணன் கிம் ஜாங் நம். கடந்த 13-ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் உயிரிழந்தார். குடும்ப சண்டை காரணமாக, கிம் ஜாங் உன் உத்தரவின் பேரில் கிம் ஜாங் நம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக வடகொரியாவைச் சேர்ந்த […]

அமெரிக்காவில் சட்டவிரோதமாக

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார் 3 லட்சம் இந்தியர்கள் உட்பட 1.1 கோடி வெளிநாட்டினரை வெளியேற்ற திட்டம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார் 3 லட்சம் இந்தியர்கள் உட்பட 1.1 கோடி வெளிநாட்டினரை வெளியேற்ற திட்டம் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார் 3 லட்சம் இந்தியர்கள் உட்பட 1.1 கோடி வெளிநாட்டினரை வெளியேற்றுவது தொடர்பாக அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பல்வேறு அதிரடி நட வடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் சட்டவிரோத […]

பூமியின் அளவை

பூமியின் அளவை கொண்ட ஏழு கிரகங்களை வானியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

பூமியின் அளவை கொண்ட ஏழு கிரகங்களை வானியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு ஒரு நட்சத்திரத்தை சுற்றிக்கொண்டிருக்கும் பூமியின் அளவை கொண்ட ஏழு கிரகங்களை வானியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அக்கிரகங்களில் உள்ள பிற பண்புகளை பொறுத்து அவைகளின் மேற்பரப்பில் திரவ நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், ஏழு கிரகங்களில் மூன்றில் மட்டுமே, வழக்கமாக வாழக்கூடிய மண்டலங்களுக்குள் வருகின்றன. அதில்தான் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகக் கருதப்படுகிறது. பூமியிலிருந்து 40 […]

ஹாங்காங்கில் சிறை

ஹாங்காங்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஏழு போலீஸாருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான போலீஸ் அதிகாரிகள் ஆதரவு பேரணி

ஹாங்காங்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஏழு போலீஸாருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான போலீஸ் அதிகாரிகள் ஆதரவு பேரணி ஹாங்காங்கில் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட ஏழு போலீஸாருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான போலீஸ் அதிகாரிகள் ஆதரவு பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். 2014 ஆம் ஆண்டில் ஜனநாயக ஆதரவு போராட்டங்களின் போது கைவிலங்கிடப்பட ஆர்ப்பாட்டக்காரரை அடித்ததற்காக கடந்த வாரம் ஏழு போலீஸாருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை பல அதிகாரிகள் […]

ஒபாமா அதிபராக

ஒபாமா அதிபராக இருந்த போது திருநங்கை மாணவர்களுக்கு தரப்பட்ட வழிகாட்டல்கள் டிரம்ப் நிர்வாகத்தால் ரத்து

ஒபாமா அதிபராக இருந்த போது திருநங்கை மாணவர்களுக்கு தரப்பட்ட வழிகாட்டல்கள் டிரம்ப் நிர்வாகத்தால் ரத்து அமெரிக்காவில் திருநங்கை மாணவர்களுக்கு ஆதரவாக ஒபாமா அதிபராக இருந்த போது தரப்பட்ட வழிகாட்டல்கள் டிரம்ப் நிர்வாகத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஒபாமா அதிபராக இருந்த போது, திருநங்கை மாணவர்கள் தங்கள் பாலின அடையாளத்தை கொண்டு கழிவறைகளை பயன்படுத்த அனுமதிக்குமாறு அரசு பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இந்த வழிகாட்டல் அரசு தேவையற்ற […]

பாகிஸ்தானில் கோர்ட்டு

பாகிஸ்தானில் கோர்ட்டு அருகில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் – 7 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் கோர்ட்டு அருகில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் – 7 பேர் உயிரிழப்பு பாகிஸ்தானில் கோர்ட்டு அருகில் தீவிரவாதிகள் இன்று நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர், 14 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் அதிகம் உள்ள மாகாணம் கைபர் பாக்துன்க்வா மாகாணம். இங்கு அடிக்கடி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவித்துவருகின்றனர். இந்நிலையில், தாங்கி நகரில் உள்ள செசன்ஸ் கோர்ட்டில் இன்று காலை […]