கிம் ஜாங்-நம் கொலை வழக்கில் இரு பெண்கள் மீதும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங்கின் அண்ணன் கிம் ஜாங்-நம் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இரு பெண்கள் மீதும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங்கின் அண்ணன் கிம் ஜாங்-நம். இவர் கடந்த 13-ந்தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மர்மமான முறையில் திடீரென மரணம் அடைந்தார். விமான நிலையத்தில் அமர்ந்திருந்த […]
உலக செய்திகள்
வங்காளதேசத்தில் ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த 5 பேருக்கு மரண தண்டனை
வங்காளதேசத்தில் ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த 5 பேருக்கு மரண தண்டனை வங்காளதேசத்தில் ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வங்காளதேசம் நாட்டில் ராங்பூர் நகரில் கடந்த 2015-ம் ஆண்டில் ஜப்பானைச் சேர்ந்த குனியோ ஹோஷி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தப் படுகொலை தொடர்பாக ஜே.எம்.பி (ஜமாதுல் […]
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்த நபரை ஆஸ்திரேலிய போலீசார் கைது
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்த நபரை ஆஸ்திரேலிய போலீசார் கைது ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஏவுகணை தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளித்த நபரை ஆஸ்திரேலிய போலீசார் இன்று கைது செய்தனர். சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், தற்போது ஏவுகணை தொழில் நுட்பத்தில் மிகவும் முன்னேறி வருகின்றனர். இந்நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஏவுகணை தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளித்ததாக அடையாளம் தெரியாத நபர் ஒருவரை […]
எகிப்து பாராளுமன்றத்தை தரக்குறைவாக விமர்சனம் – எகிப்து எம்.பி., பதவி நீக்கம்
எகிப்து பாராளுமன்றத்தை தரக்குறைவாக விமர்சனம் – எகிப்து எம்.பி., பதவி நீக்கம் எகிப்து பாராளுமன்றத்தை தரக்குறைவாக விமர்சித்து வெளிநாட்டு ஊடகங்களுக்கு பேட்டியளித்த குற்றத்திற்காக எம்.பி. பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எகிப்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர், முஹம்மது அன்வர் அல் சடத். எகிப்து முன்னாள் அதிபர் அன்வர் அல் சடத்தின் மருமகனான இவர், எகிப்து பாராளுமன்றத்தை வெளிநாட்டு அமைப்புகளுக்கு இணையாக ஒப்பிட்டு சிறுமைப்படுத்தும் விதமாக தொடர்ந்து கருத்து வெளியிட்டு வந்துள்ளார். […]
இங்கிலாந்து அரண்மனையில் நடந்த கலாச்சார விழா
இங்கிலாந்து அரண்மனையில் நடந்த கலாச்சார விழா இங்கிலாந்து பக்கிங்காம் அரண்மனையில் நடந்த கலாச்சார விழாவின் போது இங்கிலாந்து ராணி எலிசபெத், பரதநாட்டியத்துக்கு அபிநயம் பிடித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இந்தியா – இங்கிலாந்து இடையேயான 2017 கலாச்சார ஆண்டு வரவேற்பு விழா லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மைனையில் நடைபெற்றது. இக்கலாச்சார விழாவை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் மத்திய நிதியமைச்சர் அருண் […]
சிரியாவுக்கு எதிராக இன்று ஐ.நா சபை நிறைவேற்றவுள்ள தீர்மானத்திற்கு ரஷியா எதிர்ப்பு
சிரியாவுக்கு எதிராக இன்று ஐ.நா சபை நிறைவேற்றவுள்ள தீர்மானத்திற்கு ரஷியா எதிர்ப்பு சிரியாவுக்கு எதிராக இன்று ஐ.நா சபை நிறைவேற்றவுள்ள தீர்மானத்திற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளது. சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது. மிதவாத கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்காவும், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ரஷியாவும் ஆதரவு அளித்து வந்தன.இந்த சண்டையில் […]
அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக தனது பேராசிரியர் பேசியதை வீடியோ எடுத்து மிரட்டிய மாணவன் சஸ்பெண்ட்
அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக தனது பேராசிரியர் பேசியதை வீடியோ எடுத்து மிரட்டிய மாணவன் சஸ்பெண்ட் அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிராக தனது பேராசிரியர் பேசியதை வீடியோ எடுத்து மிரட்டிய மாணவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டான். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிராக தனது பெண் பேராசிரியர் பேசியதை ஒரு மாணவன் வீடியோ எடுத்துள்ளான். உளவியல் பேராசிரியரான ஒல்கா பெர்ஸ் டிரம்ப் மேலாதிக்க மனப்பான்மையுடன் […]
சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்கான ஆஸ்கார் விருது “தி ஜங்கிள் புக்”
சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்கான ஆஸ்கார் விருது “தி ஜங்கிள் புக்” 89-வது ஆஸ்கார் விருது வழங்கு விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்கான ஆஸ்கார் விருது தி ஜங்கிள் புக் படத்துக்கு கிடைத்துள்ளது. அதேபோல், சிறந்த அனிமேஷன் விருது ஜூடோபியா படத்துக்கு கிடைத்துள்ளது. தி லையன் கிங் படத்தில் நடித்த சிறுவர் நட்சத்திரம் சுன்னி பவர் ஆஸ்கர் விருதினை தட்டிச் சென்றுள்ளார். […]
நேபாளத்தில் 4.6 என்ற ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம்
நேபாளத்தில் 4.6 என்ற ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் காத்மாண்டு பள்ளத்தாக்கு பகுதியில் காலை 9.22 மணிக்கு முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய நில அதிர்வு மையத்தின் தகவலின் படி இது ரிக்டர் அளவு கோலில் 4.6 ஆக பதிவாகி இருந்தது. அதைத் தொடர்ந்து 10.06 மணிக்கு மேற்கு நேபாளின் ஸ்வன்ரா பகுதிக்கு அருகில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகி […]
இந்தோனேசியாவில் அரசு அலுவலகங்கள் மற்றும் டி.வி.நிலையத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர்
இந்தோனேசியாவில் அரசு அலுவலகங்கள் மற்றும் டி.வி.நிலையத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர் இந்தோனேசியாவின் ஜாவா தீவில் பாண்டங் நகரம் உள்ளது. இங்கு அரசு அலுவலகங்கள் உள்ளன. இங்குள்ள ஒரு பூங்காவில் இன்று திடீரென குக்கர் குண்டு வெடித்தது. இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. இந்த நிலையில் திடீரென மர்மநபர்கள் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் அங்கிருந்த அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து அவற்றை கைப்பற்றினர். உள்ளே இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்ததும் […]





