அடுத்த ஆறு மாதங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்!” : துரைமுருகன் நம்பிக்கை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதி என்றும், அடுத்த ஆறு மாதங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து, தண்டையார்பேட்டை திமுக தேர்தல் பணிமனையில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய […]
தமிழ்நாடு செய்திகள்
100 தாமரை மொட்டுகளே…: தமிழிசை நம்பிக்கை
100 தாமரை மொட்டுகளே…: தமிழிசை நம்பிக்கை தற்போது வெற்றி பெறும் கங்கையால், தமிழகத்தில் 100 தாமரைகள் மலரும் என பா.ஜ.க, தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க, சார்பில் கங்கை அமரன் போட்டியிடுகிறார். இவர் பா.ஜ.க, தலைவர் தமிழிசையுடன் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது தமிழிசை கூறியதாவது: தொகுதியில் பணப்பட்டுவாடா : தற்போது வெற்றி பெறும் கங்கையால் தமிழகத்தில் 100 […]
ஓ.பி.எஸ்.சை மீண்டும் முதல்வராக்குவோம்: மதுசூதனன் உறுதி
ஓ.பி.எஸ்.சை மீண்டும் முதல்வராக்குவோம்: மதுசூதனன் உறுதி ஓ.பி.எஸ்.,சை மீண்டும் தமிழக முதல்வராக்குவோம் என ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மதுசூதனன் கூறினார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மதுசூதனன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தண்டையார்ப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில்தேர்தல் அதிகாரி பிரவீன் நாயரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். மதுசூதனனுடன், நத்தம் விஸ்வநாதன், செம்மலை மா.பா., கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் உடன் சென்றனர். குடும்ப ஆட்சி: பின்னர் மதுசூதனன் கூறியதாவது: எம்.ஜி.ஆர்., ஆசி […]
ஜெயலலிதா நினைவிடத்தில் தீபா வேட்புமனுவை வைத்து அஞ்சலி
ஜெயலலிதா நினைவிடத்தில் தீபா வேட்புமனுவை வைத்து அஞ்சலி ஆர்.கே.நகரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள தீபா, மெரினாவில் ஜெயலலிதா சமாதியின் மேல் வேட்புமனுவை வைத்து அஞ்சலி செலுத்தினார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறவிருக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். இந்நிலையில்ஆர்.கே.நகரில்’ பேரவை சார்பில் போட்டியிடும் தீபா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளனர். சசிகலா அணி வேட்பாளராக […]
சபாநாயகர் மீது தி.மு.க கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
சபாநாயகர் மீது தி.மு.க கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி! சபாநாயகர் தனபால் மீது திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம், குரல் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து எண்ணிக் கணிக்கும் முறையில் நடைபெற்ற வாக்கெடுப்பிலும் தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 18ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை, ரகசிய வாக்கெடுப்பாக நடத்தகோரி அன்றைய தினம் திமுக சட்டமன்ற […]
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க உறவினர்கள் கோரிக்கை
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க உறவினர்கள் கோரிக்கை இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட எட்டு மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் கடலில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, எட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். இதனையடுத்து சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கைது […]
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது ஜெயலலிதா மரணம் அடைந்ததால் அ.தி.மு.க. இரண்டாக உடைந்து சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியாகவும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு ஏப்ரல் 12–ந் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகிறார்கள். இதனால் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும்? என்ற கேள்வி […]
தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக 2.096 கோடி வழங்க பரிந்துரை!
தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக 2,096 கோடி வழங்க பரிந்துரை! தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக 2,096 கோடி ரூபாய் நிதி வழங்க மத்திய குழு பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த 141 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கடும் வறட்சி நிலவிவருவதால் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மத்திய குழு ஆய்வு […]
கருணை இல்லாத கர்நாடகா !! தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாதென சித்தராமையா திட்டவட்டம்
கருணை இல்லாத கர்நாடகா !! தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாதென சித்தராமையா திட்டவட்டம் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிட தங்களிடம் தண்ணீர் இல்லை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா தெரிவித்துள்ளார். காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஜூலை 11ம் தேதி வரை நாள்தோறும் விநாடிக்கு 2000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை […]
உச்சங்கிளையில் ஊசலாடும் உட்கட்சி பிரிவுகள் !! சின்னம் யாருக்கு… விசாரணையில் இழுபறி
உச்சங்கிளையில் ஊசலாடும் உட்கட்சி பிரிவுகள் !! சின்னம் யாருக்கு… விசாரணையில் இழுபறி இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சசிகலா, பன்னீர்செல்வம் தலைமையில் இரு அணிகளாக பிரிந்துள்ளன. அதிமுக-வின் அதிகாரப்பூர்வ சின்னமாக இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றும் முயற்சியில் இரு அணிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதிமுகவின் இருதரப்பும் தங்களுக்கே இரட்டை இலைச்சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று […]





