தமிழ்நாடு செய்திகள்

ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் 50 இடங்களில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் ரூ.4.5 கோடி ரொக்கபணம் பறிமுதல்

50 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.4.50 கோடி வீட்டில் ரொக்கபணம் பறிமுதல் செய்யபட்டு உள்ளது. ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் அ.தி.மு.க. 3 அணிகளாக களம் காண்கிறது. ஓ.பி.எஸ். ஆதரவாளர்களும், சசிகலா ஆதரவாளர்களும் தேர்தல் களத்தில் எதிரும்புதிருமாக மோதி வருகிறார்கள். தேர்தல் பணிக்காக வெளியூர்களில் இருந்து சென்னை வந்துள்ள அ.தி.மு.க.வினர் எழும்பூர் கென்னத் லேனில் உள்ள நியூ லட்சுமி லாட்ஜில் தங்கியுள்ள னர். இன்று காலையில் வரு மான வரித்துறை அதிகாரி […]

மக்களின் எழுச்சி மிகு ஆதரவால் எனது வெற்றி நிச்சயிக்கப்பட்டது – டி.டி.வி.தினகரன்

மக்களின் எழுச்சி மிகு ஆதரவால் எனது வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகி விட்டது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க.(அம்மா) கட்சி சார்பில் போட்டியிடும் டி.டி.வி.தினகரன், தண்டையார்பேட்டை போலீஸ் நிலையம் அருகே உள்ள பிரணவ ஜோதி சக்தி விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு, தனது பிரசாரத்தை தொடங்கினார். அப்போது டி.டி.வி.தினகரனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த […]

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் மண்ணின் மைந்தன் அண்ணன் மதுசூதனனை வெற்றி பெற செய்யுங்கள்: முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பி.எஸ்.

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் மண்ணின் மைந்தனான அண்ணன் மதுசூதனனை ஆதரித்து வெற்றி பெற செய்யுங்கள் என்று ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓபன்னீர்செல்வம் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளராக கழக அவைத் தலைவர் இ.மதுசூதனன் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து இரட்டை மின் விளக்கு கம்பம் சின்னத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறார். பிரசாரத்தின்போது உங்கள் வீட்டு […]

நீதியை மட்டுமல்ல நியதியையும் உணர்த்திய நீதிபதி இந்திராபானர்ஜி

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான இந்திராபானர்ஜி தாமாக முன்வந்து நான் தமிழை கத்துக்கப்போறேன் என்று புதுமையாய் கூறி இருப்பதற்கு வாழ்த்துக்கள். பாரதி கண்ட உண்மையான புதுமைப்பெண்ணுக்கு இலக்கணம் இது தான். நாம் அனைவரும் இந்தியர்கள். இந்தியர்கள் அனைவரும் என் உடன்பிறந்த சகோதரர்கள் என்று பள்ளி மைதானத்தில் தேசிய கொடியின் கீழ் நின்று உரக்க சொல்லும் போது மெய்சிலிர்க்கத்தான் செய்யும். ஆனால் அந்த சகோதரர்கள் நேருக்கு நேர் சந்தித்தால் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள […]

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளரை ஆதரித்து தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பிரசாரம்

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் என்.மருதுகணேசை ஆதரித்து 42,47வது வட்டம் சந்திப்பு, கொருக்குப்பேட்டை, மன்னப்ப முதலி தெருவில் நேற்று மாலை 7 மணி அளவில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் இரா.மனோகர் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் […]

ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் 10 பெண்கள் உதவியுடன் இரவு பரபரப்பாக நடந்த பண சப்ளை

ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று முன்தினம் இரவு பணப்பட்டுவாடா எப்படி நடந்தது என்பது பற்றி சில புதிய தகவல்கள் கிடைத்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று முன்தினம் இரவு பணப்பட்டுவாடா எப்படி நடந்தது என்பது பற்றி சில புதிய தகவல்கள் கிடைத்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் ஒரு குறிப்பிட்ட கட்சியின் வெளியூர் நிர்வாகிகள் ஒவ்வொரு தெருவிலும் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். 50 வாக்காளர்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். […]

மத்திய-மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வறட்சி நிவாரண நிதியை உடனே வழங்க கோரியும் காங்கிரசார் இன்று தமிழ் நாடு முழுவதும் 234 தொகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வறட்சி நிவாரண நிதியை உடனே வழங்க கோரியும் காங்கிரசார் இன்று தமிழ் நாடு முழுவதும் 234 தொகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் ஆர்ப்பாட்டம் […]

அம்மாவின் சாதனைகளை சொல்லி நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஓட்டுவேட்டை

ஆர்.கே.நகர் தொகுதியில் நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கொருக்குப்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டினார். நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கொருக்குப்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டினார். மறைந்த முதல்வர் அம்மாவின் சாதனை திட்டங்களை எடுத்து கூறிய அவர் அந்த திட்டங்கள் மட்டுமல்ல, மேலும் பல வளர்ச்சி பணிகளும் தொடர வேண்டுமானால் டி.டி.வி. தினகரனுக்கு தொப்பி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். பெண்கள், […]

ஆளும் கட்சி தோல்வியை சந்திக்கும் என்பதால் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராக இல்லை – மு.க.ஸ்டாலின்

ஆளும் கட்சி தோல்வியை சந்திக்கும் என்பதால் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராக இல்லை என்று மு.க.ஸ்டாலின் கூறினார். தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை விமான நிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- மே மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாவிட்டால் தேர்தல் ஆணையம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க […]

கடன்களை தள்ளுபடி செய்ய 3 மாத கால அவகாசம் – விவசாயிகள் வங்கிகளுக்கு சென்று தொந்தரவு செய்யக் கூடாது: நீதிபதிகள் அறிவுறுத்தல்

கடன்களை தள்ளுபடி செய்ய 3 மாத கால அவகாசம் உள்ளதால் விவசாயிகள் வங்கிகளுக்கு சென்று தொந்தரவு செய்யக் கூடாது என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய சிறு-குறு கடன்களை ரத்து செய்து கடந்த ஆண்டு ஜூன் 28-ந்தேதி தமிழ் நாடு கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அர சாணை வெளியிட்டது. அந்த அரசாணையில், ஒரு ஏக்கர் முதல் 5 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருக் […]