முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பதவியில் இருந்து இறக்கி, தான் அந்த பதவியில் அமர வேண்டும் என்பதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரனை சந்தித்து பேசினார் என தங்க தமிழ்ச்செல்வன் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஓ.பி.எஸ்- மற்றும் தனக்கும் நெருக்கமான ஒரு நபர் மூலம் சந்திப்பு நடந்தது. அவர் முதல்வர் ஆக வேண்டும் என விரும்பினார் என தினகரனும் ரகசியத்தை உடைத்து பேட்டி கொடுக்க தற்போது இந்த விவகாரம் […]
தமிழ்நாடு செய்திகள்
மழை எல்லாம் ஒரு காரணமா? தேர்தலை சந்திக்க பயப்படும் அதிமுக!
தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்காதது குறித்து பின்வருமாறு பேசினார். தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய 2 தொகுதிகளில் மழை காரணமாக இடைத்தேர்தல் அறிவிக்க வேண்டாம் என தமிழக தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியிருப்பதால் அங்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என தெரிவித்தார். தமிழக தேர்தல் அதிகாரியின் இந்த முடிவை முதல்வர் அறியாமல் இருக்கமாட்டார். இதன் மூலம், ஆளும் தரப்பினருக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதில் […]
அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு ஊழல் குறித்து பேசுவதா? ஸ்டாலின் கேள்வி
துணை வேந்தர் நியமனத்தில் கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியிருப்பதாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கும் கவர்னரே துணைவேந்தர் விவகாரத்தில் ஊழல் என்று பேசுவது ஆச்சரியம் அளிப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ஆளுநர், ஊழல் குறித்து மேடையில் பேசுவது […]
இந்துக்கள் தான் அதை செய்ய வேண்டும்: அறநிலைத்துறையை வம்பிழுத்த எச்.ராஜா!!
எச்.ராஜா சர்ச்சையான கருத்துக்களை பேசுவதை ஃபுல் டைம் ஜாப்பாகவே செய்து வருகிறார். பின்னர் பேசியது நான் இல்லை என் அட்மின் என்றும், அது எடிட் செய்யப்பட்டது எனவும் கோக்குமாக்கு பண்ணிவருகிறார். சமீபத்தில் அறநிலைத்துறை அதிகாரிகள் குறித்தும், அவர்களின் குடும்பத்தார் குறித்தும் அவதூறாக பேசியதற்காக, ஹெச்.ராஜாவை கைது செய்யக்கோரி அறநிலைத்துறை அதிகாரிகள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா அதிரடியாக சிலைகளை கைப்பற்றும் பொன்.மாணிக்கவேலுக்கு என் வாழ்த்துக்கள். சிலை […]
மீண்டும் மருத்துவமனையில் விஜயகாந்த்
சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஜயகாந்த், கருணாநிதியின் மறைவிற்கு பின் திரும்பி வந்தார். விமான நிலையத்திலிருந்து நேரிடையாக கருணாநிதியின் சமாதிக்கு சென்ற அவர் நடக்க முடியாமல், சுற்றி நடப்பதை உணரமுடியாமல் நின்ற விதம் அந்த வீடியோவை பார்த்த பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. வீடு திரும்பிய விஜயகாந்திற்கு கடந்த ஆகஸ்ட்30 ந்தேதி மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்நிலையில் தற்பொழுது […]
டிரெண்டுக்காக அரசியல் பேசும் விஜய் – அதிமுக அமைச்சர் பதிலடி
சமீபகாலமாக விஜய் அரசியல் சார்ந்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய விஜய் தனது அரசியல் பிரவேசத்திகு அடிபோட்டார். இந்த படத்தில் நான் முதல்வராக நடிக்கவில்லை, ஒருவேளை நான் முதல்வரானால், ஊழலை ஒழிக்க முயற்சி செய்வேன், ஆனால் அது முடியுமா? என்று தெரியவில்லை என்று கூறினார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய வருவாய்த் […]
ஹெச் ராஜா வீடியோ வெளிநாட்டில் எடிட் செய்யப்பட்டது: எஸ் வி சேகர்
பெண் பத்திரிக்கையாளரகளைப் பற்றி தவறானக் கருத்துகளைப் பகிர்ந்ததற்காக சர்ச்சையில் சிக்கினார் நடிகர் எஸ் வி சேகர். இதனையடுத்து அவரைக் கைது செய்யப் போலீஸ் தனிப்படை அமைத்துள்ளதாகவும் அதனால் அவர் தலைமறைவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. கடந்த சில காலங்களாக ஊடகங்களில் தலை காட்டாமல் இருந்த எஸ் வி சேகர் தற்போது மீண்டும் பழைய மாதிரி வெளியில் நடமாடத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் இன்று சென்னை அடையாறில் உள்ள நடிகர் சிவாஜி கணேசனின் […]
எச் ராஜாவை கைது செய்யமுடியாது: காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் விளக்கம்
எச் ராஜா, விநாயக சதுர்த்தியின் போது ஊர்வலம் செல்ல நீதிமன்றம் விதித்த தடைக்கெதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு காவல்துறையையும் நீதிமன்றத்தையும் அவமதிக்கும் வகையில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். இது தொடர்பாக அவரைக் கைது செய்யக்கோரி பலதரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வந்தன. பல்வேறு அரசியல் தலைவர்களும் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து ராஜா மீது வழக்குப் பதிவு செய்தது. இருப்பினும் ராஜா இன்னும் […]
பிரியா பவானிசங்கருக்கு நித்தியானந்தா ஆதரவாளர்கள் மிரட்டல்
பிரபல சாமியார் நித்தியானந்தா போல டப்மேஷ் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகை பிரியா பவானிசங்கருக்கு நித்தியானந்தா ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரபல சாமியார் நித்தியானந்தாவுக்கு பெங்களூரு அருகே ஆசிரமம் உள்ளது. இவரது சமீபகால ஆங்கில பேச்சை சமூக வலைதளங்களில் சிலர் கிண்டல் செய்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகை பிரியா பவானிசங்கர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நித்தியானந்தா போல டப்மேஷ் செய்து அதனை பகிர்ந்தார். இந்த வீடியோவுக்கு நித்தியானந்தா ஆதரவாளர்கள், […]
தலையை சுத்தி மூக்கை தொட்டு ஆதார் கட்டாயம் – கஸ்தூரி கிண்டல்
ஆதார் அட்டை குறித்து இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆதார் கார்டு செல்லும். ஆனால், கட்டாயமில்லை என அவர்கள் தீர்ப்பு வழங்கினர். அதாவது, அதிகப்படியாக பண வர்த்தனை செய்பவரை கவனிப்பதற்காக பயன்படுத்தப்படும் பேன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். ஆனால், வங்கிக் கணக்கு, தொலைப்பேசி சிம் கார்டு, கேஸ் இணைப்பு, நீட் தேர்வு ஆகிய விவகாரங்களுக்கு ஆதார் கட்டாயமில்லை எனவும், ஆதாரை காரணம் காட்டி மக்களின் அடிப்படை […]





