டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசியா) டி.வி. நரேந்திரனின் கடந்த நிதி ஆண்டு சம்பளம் ரூ.8.17 கோடியாக இருக்கிறது.
தமிழ்நாடு செய்திகள்
டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு போனில் மிரட்டல்: அய்யாக்கண்ணு பேட்டி
போராட்டத்தை கைவிடாவிட்டால் டெல்லியில் இரவு தூங்கும் போது லாரியை ஏற்றி கொலை செய்து விடுவோம் என்று தமிழக விவசாயிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த தமிழக விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் […]
என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட முயற்சி: வேல்முருகன் உள்பட 1000 பேர் கைது
26 நாட்கள் வேலை வழங்க வலியுறுத்தி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 1,000 பேரை போலீசார் கைது செய்தனர். நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். சுரங்கம் 1-ஏ பகுதியில் வேலை பார்க்கும் ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நாட்களை 26-ல் இருந்து 19 நாட்களாக என்.எல்.சி. நிர்வாகம் குறைத்தது. இதனை […]
ஈழத்தமிழர்களுக்கு அரசியல் தீர்வு நிச்சயம் தேவை.மு.க.ஸ்டாலின்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் துணை உயர் ஆணையர் கேட் கில்மோருக்கு, மு.க.ஸ்டாலின் நேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:– தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 35–வது கூட்டத்தில் தி.மு.க. முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, தி.மு.க. செய்தி தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் பங்கேற்று ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனித உரிமைகள் குறித்து உரையாற்றுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். என்றாலும், தமிழகத்தில் உள்ள […]
அதிமுக இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்குழு கலைக்கப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் .
சென்னை,திருவேற்காட்டில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: அதிமுக இரு அணிகள் இணைப்பிற்கான பேச்சுவார்த்தை குழு இன்றோடு கலைக்கப்படுகிறது. அணிகள் இணைப்பு தேவை இல்லை என மக்கள் விரும்புகின்றனர். இவ்வாறு அவர் பேசினார். முன்னாள் முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் இவ்வாறு கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போயஸ் கார்டன் இல்லத்தை கைப்பற்ற தீபா திட்டம்; நாஞ்சில் சம்பத்.
சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்றது குறித்து நாஞ்சில் சம்பத் நிருபர்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்த போதும், அ.தி.மு.க. பொது செயலாளராக இருந்த போதும் தீபாவை போயஸ் கார்டனில் அனுமதிக்கவில்லை. அண்ணன் மகள் என்ற உரிமையில் அந்த வீட்டை கைப்பற்ற தீபா திட்டமிடுகிறார். தீபா குடியிருக்கும் வீடே ஜெயலலிதாவின் பெயரில்தான் இருக்கிறது. தீபா இப்படி ஒரு தீமை செய்வார் என்பதை முன்கூட்டியே […]
என்னை கொல்ல சதித்திட்டம் நடந்து கொண்டிருக்கிறது தீபா குற்றச்சாட்டு .
என்னை கொல்ல சதித்திட்டம் நடந்து கொண்டிருக்கிறது என்று தீபா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 நாட்களாக எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. என்னை கொல்ல சதித்திட்டம் நடந்து கொண்டிருக்கிறது. போயஸ் தோட்ட இல்லத்தில் போதிய பாதுகாப்பு இல்லை. தனியாக வருமாறு தீபக் அழைத்தார் தனியாக வர மாட்டேன் என்று மறுத்தேன். தீபக் அழைத்ததாலேயே போயஸ் தோட்ட இல்லம் சென்றேன். வேதா இல்லம் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஆனால் இதுபோல […]
மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் அ.தி.மு.க. அரசை விமர்சிக்க எதிர்க்கட்சிகளுக்கு தகுதி இல்லை – அமைச்சர்கள் பரபரப்பு பேச்சு
மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் அ.தி.மு.க. அரசு மீது குறைசொல்ல எதிர்க்கட்சிகளுக்கு தகுதி இல்லை என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார். மதுரை கலெக்டர் அலு வலகத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. தொழிலாளர் நலத்துறை செயலாளர் அமுதா தலைமை தாங்கினார். கலெக்டர் வீரராகவராவ் வரவேற்றார். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், நிலோபர் கபில் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அமைச்சர் […]
காவிரியாற்றில் அமைக்க உள்ள 6 பிரம்மாண்ட கிணறுகள் அமைக்க கர்நாடக அரசு திட்டம்: முத்தரசன் பேட்டி
கர்நாடக அரசு காவிரியாற்றில் அமைக்க உள்ள 6 பிரம்மாண்ட கிணறுகள் குறித்து தமிழக அரசு ஆய்வு நடத்தி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் என்று முத்தரசன் கூறினார். கர்நாடக அரசு காவிரியாற்றில் அமைக்க உள்ள 6 பிரம்மாண்ட கிணறுகள் குறித்து தமிழக அரசு ஆய்வு நடத்தி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் புதுக்கோட்டையில் அளித்த […]
அ.தி.மு.க. அம்மா அணியுடன் இணைவதா? வேண்டாமா? – ஓ.பன்னீர் செல்வம் இன்று இறுதிகட்ட ஆலோசனை
அ.தி.மு.க. அம்மா அணியுடன் இணைவதா? வேண்டாமா? என்று ஓ.பன்னீர்செல்வம் இன்று இறுதிகட்ட ஆலோசனை நடத்திவருகிறார். மாலையில் இறுதிமுடிவு தொடர்பான அறிவிப்பை ஓ.பன்னீர் செல்வம் வெளியிடுகிறார். அ.தி.மு.க. அம்மா அணியுடன் இணைவதா? வேண்டாமா? என்று ஓ.பன்னீர்செல்வம் இன்று இறுதிகட்ட ஆலோசனை நடத்துகிறார். பிளவுபட்டு கிடக்கும் அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் தனித்தனியாக கூடி ஆலோசனை நடத்தி […]





