தமிழ்நாடு செய்திகள்

மாணவர்களுக்கு தமிழக அரசு துரோகம் இழைத்துவிட்டது!

நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெறுவதில் தோல்வியடைந்த தமிழக அரசு மாணவர்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்திருப்பதாகப் பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெறும் மசோதாவுக்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறத் தமிழக ஆட்சியாளர்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்விலிருந்து விலக்கு அளித்தல், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் ஆகிய கோரிக்கைகளைக் குடியரசுத் தலைவர் தேர்தலின்போது வலியுறுத்தவும் […]

டிடிவி தினகரன் நியமனம் செல்லாது!

டிடிவி தினகரன் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக அம்மா அணி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீண்டும் கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வரும் டிடிவி தினகரன் சமீபத்தில் அதிமுக அம்மா அணியில் 67 கட்சிப் பதவிகளுக்கு புதிதாக நியமனங்களை மேற்கொண்டார். இந்த நியமனம் முதலமைச்சர் எடப்பாடிபழனிச்சாமி அணியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. டிடிவி தினகரன் மீண்டும் கட்சி பணிகளில் ஈடுபடுவதற்கு […]

மூக்குப்பொடி சாமியாரிடம் ஆசிர்வாதம் வாங்கிய தினகரன்

அதிமுகவை வலுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக டிடிவி தினகரன் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இன்று திருவண்ணாமலையிலுள்ள மூக்குப்பொடி சாமியார் என்பவரிடம் டிடிவி தினகரன் ஆசிர்வாதம் வாங்கியது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, டிடிவி தினகரனின் அறிவிப்புகள் எதுவும் அதிமுக அம்மா அணியினரை கட்டுப்படுத்தாது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுகவில் உச்சக்கட்ட உட்கட்சிப் பூசல்

அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தில் நடைபெற்றுவருவது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “டிடிவி தினகரனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது அதிமுகவின் உட்கட்சி பூசல். அவரை நீக்குவதும், சேர்ப்பதும் அவர்கள் உரிமை” என்று தெரிவித்தார். இதுதொடர்பாக பேசிய விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், “அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது” என்றார். தினகரனின் நியமனம் செல்லாது என இபிஎஸ் அணியினர் […]

பிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடவடிக்கை எடுக்க யாருக்கு உரிமை ?

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது என மத்திய அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் ஆபாசமாக இருப்பதாகக் கூறி அதனை தடை செய்ய சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் […]

நம்பிக்கையில்லா தீர்மானம்: ஸ்டாலின் மிரட்டல்

தேவைப்பட்டால், தமிழக அரசுக்கு எதிராக, மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்,” என, தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார். தி.மு.க. மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில், நேற்று நடந்தது. கூட்டம் முடிந்ததும், ஸ்டாலின் அளித்த பேட்டி: முதல்வர் பழனிசாமி அணி, பன்னீர்செல்வம் அணி, தினகரன் அணி என, அ.தி.மு.க., பிரிந்ததிலிருந்து, தமிழகத்தில், அசாதாரண சூழல் நிலவுகிறது. இப்படிப்பட்ட நிலையில், தமிழக மக்கள் பல்வேறு துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் தொடர்ந்து […]

அணிகள் இணையுமா: பன்னீர்செல்வம் பேட்டி

அ.தி.மு.க அணிகள் இணைப்பு பேச்சு குறித்து, அதிகாரபூர்வமாக எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை,” என, முன்னாள் முதல்வர், பன்னீர்செல்வம் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில், நேற்று அவர் கூறியதாவது: ஆறு மாதங்களுக்கு முன், நாங்கள் தர்ம யுத்தத்தை துவக்கினோம். அப்போது கூறப்பட்ட கருத்துக்களை, தீர்மான மாக கொண்டு வந்துள்ளனர். பாதிவந்துள்ளனர்; மீதி வரட்டும்; அதன்பின், எங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கிறோம். எங்களின் முந்தைய நிலைப்பாட்டில், எந்த மாற்றமும் இல்லை. இதுவரை பேச்சு […]

19 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா முடிவு ?

தினகரன் அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், 19 பேர், தங்களது பதவியை, ஓரிரு நாட்களில், ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் பழனிசாமி அணியினர், தினகரனுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், எந்த வகையில் ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்பது குறித்து, தினகரன் ஆதரவாளர்கள் ஆலோசித்து வருகின்றனர். அதில் முக்கியமாக, தினகரனால் பதவி பெற்ற, 19 எம்.எல்.ஏ.க்கள், தங்களுடைய பதவியை ராஜினாமா செய்வது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. ராஜினாமா முடிவு எடுக்கும்பட்சத்தில், பழனிசாமி […]

முதல்வருக்கு அமோக வரவேற்பு: தினகரன் அணி அதிர்ச்சி

விழுப்புரம் சென்ற, முதல்வர் பழனிசாமிக்கு, வழிநெடுகிலும், கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தது, தினகரன் அணியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கமல்ஹாசனின் அரசு மீதான ஊழல் குறித்த விமர்சனத்தை நான் வரவேற்கிறேன்

அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் தனது படங்களுக்கு வரிவிலக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.