தமிழ்நாடு செய்திகள்

2ஜி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி வழக்கில் கனிமொழி, ஆர்.ராசா ஆகியோரை விடுவித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சியின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் ரூ.1,76,000 கோடி அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது என கணக்கு தனிக்கை குழு குற்றம்சாட்டியது. இதில் முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2011 […]

ஆர்.கே.நகரில் 7.32 சதவீத வாக்குகள் பதிவு…

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால், தொகுதி முழுவதிலும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 258 வாக்குச்சாவடி மையங்களில் 1600 மின்னணு வாக்கு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், வாக்களித்தவர்களுக்கு எந்த சின்னத்தில் வாக்களித்தோம் என்ற ரசீது கொடுக்கும் மிஷினும் தயாராகவுள்ளதாகவும் கூறப்படுகிறது இன்று […]

ஆர்.கே நகரில் வாக்குப்பதிவு தொடங்கியது

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு சற்று நேரத்திற்கு முன் தொடங்கியது. இதனையடுத்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவத்தினர்களுடன் போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 59 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்காக 50 இடங்களில் 258 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 950 துணை ராணுவப் படையினர் மற்றும் 3300 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாக்குப்பதிவின்போது எந்தவித முறைகேடும் நடந்துவிடக்கூடாது என்பதை கணக்கில் கொண்டும், அமைதியாக […]

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : நேரடி ஒளிபரப்பு

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது. இதனையடுத்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவத்தினர்களுடன் போலீசாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குப்பதிவின்போது எந்தவித முறைகேடும் நடந்துவிடக்கூடாது என்பதை கணக்கில் கொண்டும், அமைதியாக தேர்தலை நடத்தும் வகையிலும் வாகுப்பதிவை தேர்தல் ஆணைய இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வாக்குப்பதிவின் போது தகராறு செய்பவர்கள், வாக்களிப்பவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பவர்கள் உடனடியாக கைது […]

சனிப்பெயர்ச்சி விழாவில் புனித நீராடின

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள சனிபகவான் தலமான தர்பாரண்யேஸ்வரசுவாமி கோவில் நேற்று முன்தினம் சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி கோவில் தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அங்குள்ள நளதீர்த்தத்தில் புனித நீராடினர். பின்னர் நீண்ட வரிசையில் நின்று சனிபகவானை தரிசனம் செய்தனர். ஒரேநேரத்தில் 10 ஆயிரம் பக்தர்கள் புனிதநீராடும் வகையில் குளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு […]

ஜெ.வின் வீடியோ போயஸ் கார்டனில் எடுக்கப்பட்டதா?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட வீடியோவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் தற்போது வெளியிட்டுள்ளார். 20 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் ஜெயலலிதா நைட்டி அணிந்த நிலையில், பழச்சாறு பருகியபடி தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறார். ஜெ.வின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், முதன் முதலாக தினகரன் தரப்பில் இருந்து இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு […]

அம்மா சாப்பிட்டார் னு சொன்னாங்களே! அது இது தானா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பு இன்னும் மர்மமாகவே தான் உள்ளது. பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படும் நிலையில் தற்போது வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஜெயலிதா நோயாளிகளுக்கான பெட்டில் உட்கார்ந்த நிலையில் இருக்கிறார். அவருக்கு வெண்டிலேசன் என சொல்லப்படும் சுவாசிக்கும் கருவி, பிரஷர் கருவி பொருத்தப்பட்ட நிலையில் இருக்கிறார். மேலும் அவர் டிவி பார்த்துக்கொண்டே திரவ உணவை குடிப்பது போல இருக்கிறது. இது அப்பல்லோ மருத்துவமனையில் எடுக்கப்பட்டது தானா? […]

ஜெயலலிதா மரணம் பற்றி போலீசில் புகார் அளித்த 302 பேரிடம் விசாரிக்க முடிவு

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது உடல்நிலை குறித்து அப்பல்லோ நிர்வாகம் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்து வருவதாகவும், அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த உண்மை நிலவரத்தை வெளியிட வேண்டும் என்றும் சிலர் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனுக்கள் […]

விரக்தியில் குடும்பமே தற்கொலை!!

திருப்பூரில் இளைஞர் ஒருவர் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி கலப்புத் திருமணம் செய்து கொண்டதால், விரக்தியில் இளைஞனின் குடும்பமே தற்கொலை செய்து கொண்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் மறையூரைச் சேர்ந்தவர் முருகன்(50). இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும், பானுப்பிரியா என்ற மகளும், பாண்டியராஜன் என்ற மகனும் இருந்தனர். முருகன் டீ எஸ்டேட் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். மகள் பானுப்பிரியா அருகில் உள்ள கல்லூரியில் படித்து […]

ஆர்.கே நகரில் இடைத்தேர்தல் நடந்தே தீரும்

ஆர்.கே நகரில் பணப் பட்டுவாடா காரணமாக இடைத்தேர்தல் ரத்தாகிறது எனப் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தள்ளிப்போன சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை(டிசம்பர் 21-ம் தேதி) நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என ஆளுங்கட்சியான எடப்பாடி அணியின் சார்பில் மனுசூதனனும், ஆளுங்கட்சியை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் […]