தமிழ்நாடு செய்திகள்

கமல்ஹாசன்அரசியலில் வெற்றி பெறுவாரா? – தமிழிசை கூறிய சர்ச்சை கருத்து

தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களான ரஜினி, கமல் ஒரே நேரத்தில் அரசியல் களத்தில் குதிக்கவுள்ளனர். இது நாள் வரை ட்விட்டரில் பதிலளித்து வந்து கமல்ஹாசன் முதல்முறையாக தனது அரசியல் பயணத்தை பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் வருகிற பிப்ரவரி 21 ம் தேதி அரசியல் கட்சி பெயரை அறிவிக்கவுள்ளதாகவும், அதன் பிறகு ராமநாதபுரத்தில் அரசியல் சுற்றி பயணம் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் மக்கள் சந்திக்கவுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி […]

பிப்ரவரி 21ஆம் தேதி அரசியல் கட்சியின் பெயர் அறிவிப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் அரசியல் கட்சியின் பெயரை மிக விரைவில் அறிவிக்கவுள்ளதாக ஏற்கனவே கூறியுள்ளார். மேலும் சமீபத்தில் மலேசியாவில் நடந்த நட்சத்திர விழாவின் போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் தேதியையும் அறிவிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வரும் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி முதல் தனது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளதாகவும், அன்றைய தினம் தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை […]

எம்ஜி ஆர் 101வது பிறந்தநாள்

எம்ஜிஆரின் 101வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திரைப்பட நடிகராக மக்களுக்கு அறிமுகமான எம்.ஜி.ஆர், அரசியலிலும் செல்வாக்குப் பெற்று மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக விற்கு ஆதரவாக இருந்த எம்ஜிஆர் அக்கட்சியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக, 1972 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து வெளியேறி அதிமுக (அண்ணா திராவிட முன்னேற்றக் […]

நடிகர் கமல்ஹாசன் மீது கேள்வி எழுப்பிய தமிழிசை சௌந்தரராஜன்

தமிழக அரசியல் குறித்தும், அரசியல் தலைவர்கள் குறித்தும் தொடர் விமர்சனங்களை செய்து வரும் நடிகர் கமல்ஹாசன் அரசியல் அறிவிப்பை வெளியிட்டு இருக்கும் நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். வரும் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி முதல் தனது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளதாகவும், அன்றைய தினம் தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை அறிவிக்கவுள்ளதாகவும் […]

கோலாகலமாக மாட்டுப் பொங்கலை கொண்டாடிய கேப்டன்

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் மகிழ்ச்சியாகக கொண்டாடப்பட்டு வருகிறது வீடுகள் தோறும் புத்தாடை உடுத்தி பொங்கலிட்டு அண்டை வீட்டாருடன் பகிர்ந்துகொண்டு கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் மாட்டுப் பொங்கல் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாட்டுப் பொங்கலையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்கள் களைகட்டியுள்ளன. வீடுகளில் உள்ள பசுக்கள் மற்றும் […]

தமிழகத்துக்கு காவிரி நீர் தரக்கூடாது

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்து உறுப்பினர் சேர்க்கையையும் தொடங்கிவிட்டார். இந்நிலையில் அவரது அரசியல் எண்ட்ரி குறித்து பலரும் விமர்சிக்கின்றனர். கர்நாடகாவை சேர்ந்த நடிகர் ரஜினிக்கு காவிரி விவகாரத்தில் நிலைப்பாடு என்ன என பலரும் கேள்விகளை எழுப்புகின்றனர். சமீபத்தில் காவிரி பிரச்சனை வந்தபோது நடிகர் ரஜினி எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தது விமர்சிக்கப்பட்டது. தற்போது அரசியலில் இறங்கியுள்ள ரஜினிக்கு காவிரி விவகாரத்தில் என்ன நிலைப்பாடு என கேள்வி […]

தினகரனின் புதிய கட்சியில் சேர மாட்டேன்

அதிமுகவில் தனி அணியாக செயல்பட்டுவந்த டிடிவி தினகரன் நாளை புதிய கட்சி குறித்து அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை இலை சின்னத்தையும், அதிமுகவையும் இழந்தாலும் தனக்கான ஆதரவாளர்களை வைத்துக்கொண்டு ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு பலம்பொருந்திய அதிமுக, திமுக கட்சிகளை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார் தினகரன். இந்த வெற்றி அளித்த ஊக்கத்தில் புதிய கட்சி குறித்த ஆலோசனையில் தினகரன் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் […]

ஒன்றரை ஆண்டுகளுக்கு கனிமொழி வீட்டிற்கு சென்ற கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் மட்டுமே உள்ளார். இந்த நிலையில் ஒன்றரை வருடங்கள் கழித்து சி.ஐ.டி. நகரில் உள்ள கனிமொழியின் வீட்டிற்கு இன்று கருணாநிதி சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். இதுகுறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்த கனிமொழி, ‘ஒன்றரை வருடங்கள் கழித்து இன்றுதான் அப்பா எங்கள் வீட்டிற்கு வந்துள்ளார். இன்று தான் எங்களுக்கு […]

எச்.ராஜா என்ன டிசைன்னே தெரியலையே

பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாதவர் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா. இவர் எப்போது எப்படி இருப்பார் என்பது தெரியாது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கும், தமிழக பாஜகவை சேர்ந்த எச்.ராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதோ என தோன்றுகிறது. ரஜினியின் அரசியல் குறித்து இருவரும் மாறுபட்ட கருத்துக்களுடன் செயல்படுகின்றனர். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற துக்ளக் விழாவில் பேசிய குருமூர்த்தி பாஜகவும், ரஜினிகாந்தும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என கூறினார். […]

ரஜினியின் ஆன்மீக அரசியலும், தமிழ் இலக்கணமும்

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்துவிட்டார். கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்த ரஜினி, தான் ஆன்மீக அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறினார். ஆன்மீக அரசியல் என ரஜினி கூறியது பல்வேறு எதிர்ப்புகளை அவருக்கு உருவாகி வருகிறது. பலரும் அவரது ஆன்மீக அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ரஜினியின் அரசியல் கொள்கை என்ன என்பதும் குழப்பமாக உள்ளது. நிரூபர் ஒருவர் உங்கள் […]