சமீபத்தில் ஆண்டாள் குறித்து வைரமுத்து பேசிய ஒரு கருத்து பெரும் சர்ச்சையாகி இந்த விவகாரம் சென்னை ஐகோர்ட் வரை சென்றுள்ள நிலையில் வைரமுத்துவுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் வைரமுத்து மன்னிப்பு கேட்க கோரி சடகோப ராமானுஜ ஜீயர் போராட்டம் நடத்தி வருகிறார். இந்த போராட்டத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆதவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘ஆண்டாளை பற்றி இழிவாக […]
தமிழ்நாடு செய்திகள்
கனிமொழியின் தாயாருக்காக களத்தில் இறங்கி போராடுவேன்
சமீபத்தில் கனிமொழி நாத்திக மாநாடு ஒன்றில் பேசும்போது திமுகவில் கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்கள் அதிகம் உள்ளதாக கூறினார். ஆனால் கனிமொழியின் தாயாரே சமீபத்தில் கோவிலுக்கு சென்று அர்ச்சகரிடம் ஆசி வாங்குவது போன்ற புகைப்படம் சமீபத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காரைக்குடியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாவது: ‘கனிமொழியின் தாயார் கோவிலுக்குப் போவதை யாரேனும் தடுப்பார்களேயானால், நானே களத்தில் […]
அம்மா இருசக்கர வாகன திட்டம்
வேலைக்கு செல்லும் பெண்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் அதற்கான விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி கமிஷனர் அறிவித்து உள்ளார் அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் பயன்பெற விரும்பும், வேலைக்கு செல்லும் பெண்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் அதற்கான விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி கமிஷனர் அறிவித்து உள்ளார். மாநகராட்சி பெண் ஊழியர்கள் பெண்கள் தங்களது பணியிடங்களுக்கு செல்வதற்கு உதவியாக அம்மா இருசக்கர வாகன திட்டம் தமிழக அரசால் கொண்டு வரப்பட்டு […]
பருவமடையாத 9 வயது சிறுமிக்கு 39 வயது நபருடன் திருமணம்!
பருவம் அடையாத 9 வயதான 4-ஆம் வகுப்பு மாணவிக்கு 39 வயது நபருடன் திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் முயற்சித்தது திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 18-ஆம் தேதி திருச்சி முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மர்ம நபர் ஒருவர் கால் செய்து குழந்தை திருமணம் குறித்த தகவல் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் 9 வயதான பள்ளி மாணவியை 39 வயது நபருக்கு திருமணம் செய்திட மின்னதம்பட்டி கிராமத்தில் […]
முட்டாள்தனமாக பேசும் வைரமுத்துவுக்கு தமிழ் கூட தெரியாது
ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசிய கட்டுரையில் அவரை ஒரு ஆராய்ச்சியாளர் தேவதாசி என குறிப்பிட்டுள்ளதை மேற்கோள் காட்டினார். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வைரமுத்துவுக்கு எதிராக இந்து அமைப்புக்களை சேர்ந்தவர்களும், பாஜகவினரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும், வசை பாடியும், அவர் மீது வழக்கு தொடுத்தும் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றனர். வைரமுத்து தனது கட்டுரை குறித்தும், சர்ச்சை குறித்தும் விளக்கம் அளித்து, அது […]
சண்டாளப் பாவி
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியல் கழகத்தின் தலைவருமான பா வளர்மதிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பெரியார் விருது வழங்கப்பட்டது. கோவிலுக்கு சென்று வழிபடுவது, மண் சோறு சப்பிட்டது, தீச்சட்டி ஏந்தியதுமாக இருந்த பா வளர்மதிக்கு கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட பெரியாரின் விருதா என அதிகமாக அவர் விமர்சிக்கப்பட்டார். வளர்மதிக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்று […]
தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்
தமிழக அரசு பேருந்து விலையை குறைக்காவிட்டால் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழக அரசு பேருந்து கட்டணத்தை நேற்று நள்ளிரவு முதல் திடீரென உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. இதனால், சென்னை போன்ற பெரிய நகரங்கள் மட்டுமின்றி, சிறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் பேருந்துகளை பயன்படுத்தும் சாதாரண பொதுமக்கள், இதற்கு முன் செலுத்தியதை விட இரண்டு மடங்கு தொகை கொடுக்க வேண்டியுள்ளது. […]
ஆண்டாள் புகழ் பாடியது தவறா? – வைரமுத்து விளக்கம் (வீடியோ)
ஆண்டாள் குறித்து எழுந்த சர்ச்சையை தொடர்ந்து அதுகுறித்து கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார். ஆண்டாள் குறித்து தனது கவிஞர் வைரமுத்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக தொடர் கண்டனங்கள் வந்துகொண்டிருக்கிறது. இந்த சம்பவத்துக்கு வைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்பும் பிரச்சனை ஓய்ந்தபாடில்லை. தமிழகம் முழுவதும் ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து அமைப்புகள் கங்கணம் கட்டிக்கொண்டு வைரமுத்துவுக்கு எதிராக களத்தில் இறங்கியது. எப்போதும் இல்லாத அளவுக்கு […]
பஸ் கட்டண உயர்வு ஏன்?
தமிழகத்தில் 8 போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. அரசு போக்குவரத்து கழகங்களில் 22 ஆயிரத்து 509 பஸ்கள் மற்றும் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 615 பணியாளர்களைக் கொண்டு இயங்கி வருகின்றன. மக்கள் நலனை கருதி மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்கள், மலைப்பகுதிகள் போன்ற தொலைதூர இடங்களுக்கும் நாளொன்றுக்கு ஏறத்தாழ 88.64 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன் […]
ஆசிரியை காதலிக்க மறுத்ததால் தற்கொலைக்கு முயன்ற மருத்துவ மாணவன்
கோயம்புத்தூரில் உதவி பேராசிரியை தனது காதலை ஏற்க மறுத்ததால் மருத்துவ கல்லூரி மாணவன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், காரிபாளையம் அருகே உள்ள கீழ்குப்பத்தைச் சேர்ந்தவர் ராமஜெயம் மகன் நவீன்குமார் (22). இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் 2-ஆம் ஆண்டு மருத்துவம்(MBBS) படித்து வருகிறார். இவர் அந்த கல்லூரியில் பணியாற்றி வரும் உதவி பேராசிரியை ஒருவரிடம் நன்றாக […]





