தமிழ்நாடு செய்திகள்

தர்மயுத்தம் தொடங்கும் முன்பே என்னை சந்தித்தார் ஓபிஎஸ்: குருமூர்த்தி

முன்னாள் முதல்வரும் இந்நாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கடந்த ஆண்டு தர்மயுத்தம் என்ற பெயரில் ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த தர்மயுத்தம் தொடங்குவதற்கு முன்னர் தன்னை அவர் சந்தித்ததாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் அவர்கள் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தவுடன், தன்னை சந்திக்க வேண்டும் என்று ஒரு நண்பர் மூலம் தூது […]

மதிமுக தொண்டர் தீக்குளிப்பு – ஸ்டெர்லைட் திட்டத்திற்கு எதிர்ப்பு

ஸ்டெர்லைட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக செயலாளர் வைகோவின் கண் எதிரிலேயே ஒரு தொண்டர் தீக்குளித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் செயல்படும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 10 நாட்கள் நடைப்பயணத்தை துவங்க திட்டமிட்டுள்ளார். அதன்படி, மதுரை பழங்காநத்தத்தில் அவர் இன்று நடைபயணத்தை துவங்கினார். அந்நிலையில், […]

நாளை சிறைக்கு செல்லும் சசிகலா?

தனது குடும்ப உறுப்பினர்களின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்துள்ள சசிகலா பரோல் முடியும் முன்பே சிறைக்கு செல்ல முடிவெடுத்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. தனது கணவர் நடராஜன் மரணமடைந்ததால் 15 நாட்கள் பரோலில் வெளிவந்த சசிகலா தற்போது தஞ்சையில் உள்ள நடராஜனின் பூர்வீக வீட்டில் தங்கியிருக்கிறார். அந்நிலையில், நடராஜனின் சொத்துக்களை பிரிப்பதில் நடராஜனின் உடன் பிறந்தவர்களுக்கும், சசிகலா தரப்பினருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் சசிகலா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் […]

மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; தமிழக அரசு அதிரடி முடிவு

வரும் 29ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் மத்திய அரசு மீது நீதிமன்ற வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு 6 வாரத்திற்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து உச்ச நீதிமன்ற கொடுத்த காலக்கெடு இன்னும் மூன்று நாட்களில் முடிவடைய உள்ளது. தமிழக அரசு மற்றிம் அதிமுக எம்.பி.க்கள் தொடர்ந்து இந்த விவகாரத்தில் மத்திய […]

நான் முதல்வரானால் போடும் முதல் கையெழுத்து இதுதான்: கமல்ஹாசன்

திரையுலகில் இருந்து முதல்வர் கனவுடன் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் கமல்ஹாசன் இன்று நடைபெற்ற கல்லூரி மாணவர்களிடையான உரையாடலில் தான் முதல்வரானதும் போடும் முதல் கையெழுத்து குறித்து குறிப்பிட்டுள்ளார். பொன்னேரி அருகில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இன்று மாணவர்களிடையே உரையாடிய கமல், மாணவர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு மாணவர், ‘நீங்கள் முதல்வரானது போடும் முதல் கையெழுத்து எது? என்று கேட்டபோது, ‘லோக் ஆயுக்தா’ என்று பதிலளித்தார். இதே […]

நீதிமன்ற தடை மீறி டெல்லியில் நடந்த சசிகலா புஷ்பா திருமணம்..

நீதிமன்றம் தடை விதித்த பின்னும் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பாவின் திருமணம் டெல்லியில் நடந்து முடிந்துள்ளது. சசிகலாவும், ஜெயலலிதாவும் தன்னை அடித்து விட்டதாக பாராளுமன்றத்தில் புகார் பரபரப்பை ஏற்படுத்தியவர் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா. அதனால், அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின், சசிகலாவிற்கு எதிரான கருத்துகளை அவர் தெரிவித்து வந்தார். மேலும், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு அவரின் பெயரில் விருப்ப மனு கொடுக்க வந்த அவரின் கணவரை அதிமுகவின் […]

கமல் – தமிழிசை டுவிட்டரில் மோதல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் கடந்த சில நாட்களாக வலுத்து வருகிறது. தூத்துக்குடி மக்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இந்த போராட்டம் தற்போது பரவி வருகிறது. அதுமட்டுமின்றி நேற்று லண்டன் வாழ் தமிழர்கள், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் இயக்குனர் வீட்டின்முன் போராட்டம் நடத்தியதால் இந்த போராட்டம் தற்போது உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவரான கமல்ஹாசன் ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து டுவிட்டரில் […]

மீண்டும் ஒரு மெரினா போராட்டமா?

சென்னை மெரீனாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஹைலைட்டே அங்கு கூடியிருந்தவர்கள் செல்போன்கள் மூலம் லைட் அடித்து தங்களது உணர்வை வெளிப்படுத்தியதுதான். இந்த நிகழ்ச்சியை மையமாக வைத்துதான் ‘வேலைக்காரன்’ படத்தில் கூட இதே போன்ற ஒரு காட்சி வைக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே உள்ள ஆலையின் ஒப்பந்தம் முடிந்துவிட்டதால் அந்த ஆலையை […]

பட்டப்பகலில் பெண்ணை தாக்கி நகை கொள்ளை – சிக்கிய வாலிபர்கள் (வீடியோ)

கரூரில் பட்டப்பகலில் வீடு புகுந்த இரு வாலிபர்கள், ஒரு பெண்ணை தாக்கி நகைகளை பறித்த விவகாரம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் நகராட்சிக்கு உட்பட்ட காந்தி கிராமம் ஜெஜெ கார்டனில் உள்ள ஒரு மாடி வீட்டில் வசிப்பவர் ரகுபதி. இவரது மனைவி லதா. நேற்று (24-03-18) மாலையில் வீட்டில் சமையல் அறையில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டினுள் அத்து மீறி நுழைந்த 2 இளைஞர்கள் லதாவை தாக்கி சத்தம் போடாமல் […]

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ராஜினாமா முடிவு

திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 147-பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளனர். நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடப்போவதாக அண்மையில் அறிவித்தார். இதையடுத்து, தமிழநாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருக்கும் அவரது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார். இந்நிலையில், ரஜினியின் மக்கள் மன்ற கட்சியின் திண்டுக்கல் செயலாளர் தம்புராஜை கட்சியின் கட்டுபாட்டிற்கு முரண்பாடாக செயல்பட்டதால் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளனர். […]