வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ஏ.டி.எம். பரிவர்த்தனை, காசோலை பயன்பாடு, டெபிட் கார்டு உள்ளிட்டவற்றுக்கு கட்டணம் வசூலிப்பது என்று வங்கிகள் திட்டமிட்டுள்ளன. வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு இலவச சேவைகளை வழங்கி வருகிறது. குறைந்த பட்ச பேலன்ஸ், ஏ.டி.எம். பண பரிவர்த்தனை, காசோலை பயன்பாடு உள்ளிட்டவற்றை வழங்குகிறது. விரைவில் இந்த இலவச சேவைகளை நிறுத்த வங்கிகள் திட்டமிட்டுள்ளன. வங்கிகள் அளிக்கும் சேவைக்கு 5 ஆண்டு முன் தேதியிட்டு வரி வசூலிக்க மத்திய அரசு […]
தமிழ்நாடு செய்திகள்
விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி
விடுதலை சிறுத்தை கட்சி நடத்திய போராட்டம் காரணமாக, நடிகை கஸ்தூரி வேளச்சேரி பகுதியில் சிக்கிக்கொண்டார். எனவே தனது டிவிட்டர் பக்கத்தில் “பொதுமக்களை பாதிக்கக்கூடிய வகையில் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவது ஒரு பேஷனாகிவிட்டது ஏன் என தெரியவில்லை” என ஒரு காட்டமான டிவிட் போட்டிருந்தார். அந்நிலையில், விடுதலை கட்சியை சேர்ந்த ஆலூர் ஷா நவாஸ் “லட்சக்கணக்கில் திரண்டும் ஒரே ஒரு பேருந்துக் கண்ணாடி கூட உடையவில்லை. வழியில் எந்த வழிபாட்டுத் […]
நிர்மலா தேவி மீது மேலும் இரண்டு மாணவிகள் புகார்
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சித்த பேராசிரியர் நிர்மலாதேவி மீது மேலும் இரண்டு மாணவிகள் புகார் அளித்துள்ளனர். கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சித்த அருப்புக்கோட்டை கல்லூரி ஒன்றின் கணித பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை கவர்னர் நியமனம் செய்த சந்தானம் தலைமையிலான குழுவும், சிபிசிஐடியும் தனித்தனியே விசாரணை செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவிக்க்கு துணை பேராசிரியர் முருகன் என்பவரும், ஆராய்ச்சி மாணவர் […]
மீதமுள்ள தண்ணீர் மட்டுமே தமிழகத்திற்கு: அதிமுக வேட்பாளரின் அதிர்ச்சி பேட்டி
தமிழகத்தில் காவிரி தண்ணீருக்காக பல்வேறு அரசியல் கட்சியினர் போராடி வருகின்றனர். ஆளும் கட்சியான அதிமுகவும் காவிரிக்காக உண்ணாவிரதம் உள்பட ஒருசில போராட்டங்களை நடத்தி வருகிறது இந்த நிலையில் வரும் மே 12ஆம் தேதி நடைபெறவுள்ள கர்நாடக தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யுவராஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘எங்களை பொருத்தவரையும் காவிரி நீரை கர்நாடகத்திற்கே கிடைக்கவே முக்கியத்துவம் கொடுப்போம். கர்நாடக மாநிலத்தின் தேவை போக மீதியிருந்தால் மட்டுமே எங்கள் சகோதரர்களாக […]
ஜியோ போட்டியை சமாளிக்க முடியாமல் திணறும் ஏர்டெல்! ஏர்செல் கதி ஏற்படுமா?
இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், ஜியோவுக்கு முன் வரை போட்டியே இன்றி வெற்றிநடை போட்டு வந்த நிலையில் ஜியோவின் வருகைக்கு பின் லாபம் பெற திணறி வருகிறது. இந்த நிறுவனத்தின் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டு வருமானம் சுமார் 78% அளவு குறைந்துள்ளதாகவும், இந்த வருமானம். கடந்த 15 ஆண்டுகளில் மிகக்குறைந்த லாபம் என்றும் கூறப்படுகிறது.. ஜியோ போட்டி காரணமாக குறைந்த கட்டணத்தில் […]
ஆடியோவில் இருப்பது நிர்மலா தேவி குரல்தான் – ஆய்வில் நிரூபணம்
கல்லூரி மாணவிகளிடம் செல்போனில் பேசியது பேராசிரியர் நிர்மலாதான் என்பது ஆய்வில் நிரூபணம் ஆகியுள்ளது. கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சித்த அருப்புக்கோட்ட கல்லூரி ஒன்றின் கணித பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை கவர்னர் நியமனம் செய்த சந்தானம் தலைமையிலான குழுவும், சிபிசிஐடியும் தனித்தனியே விசாரணை செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவிக்க்கு துணை பேராசிரியர் முருகன் என்பவரும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி என்பவரும் உதவியதாக சிபிசிஐடி போலீசார் […]
சென்னை மின்சார ரயிலில் இளம்பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை
சென்னை வேளச்சேரி – கடற்கரை மின்சார ரயிலில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்குநாள் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நம் நாட்டில் அதிகரித்துக் கொண்டே போகிறது. 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என அவசர சட்டம் மத்திய அனைச்சரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்ப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில் சென்னை […]
சென்னை புழல் சிறையில் இருந்த நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஜாமீன்
காவிரி விவகாரத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் மன்சூர் அலிகானிற்கு செங்கல்பட்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக பாரதிராஜா, சீமான் உள்ளிட்ட பலர் சென்னை அண்ணாசாலையில் போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களை தடுக்க வந்த போலீசாருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது சிலர் […]
அ.தி.மு.க.வும் பா.ஜனதாவும் இரட்டை குழல் துப்பாக்கி அல்ல- தம்பித்துரை
பாராளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.க. எம்.பி.யுமான தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் தான் முடிவு எடுக்கும். நான் அது பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அம்மா எப்படி கட்சியை நடத்தினார்கள், எப்படி தனித்துவத்தை காண்பித்தார்கள் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் தனிக்கட்சியாகத்தான் பாராளுமன்றத்தில் […]
‘தமிழகம் ஆபத்தான நிலையில் இருக்கிறது’
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ‘யூ-டியூப்’ மூலம் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இணையதளம் மூலம் அனுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:- கேள்வி: நமது அரசியல் ஆக்கபூர்வமான செயலை நோக்கியா? அல்லது அதிகாரத்தை மட்டும் நோக்கியா? பதில்: அதிகாரத்தை மட்டும் நோக்கி செல்வது ஒரு அரசன் செய்யும் வேலை. அதிகாரத்தை மட்டும் நோக்கி சென்று என்ன செய்வது? அது மக்களுக்காக செய்யும் விஷயம் கிடையாது. நல்ல […]





