மாநிலங்களில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் நடக்கும் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் அரசியல் கொள்கைகள், கருத்துகள் பேசக்கூடாது என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் மஞ்சுளா உத்தரவிட்டுள்ளார். இதன் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்லூரிகள் நடத்தும் விழாக்கள், நிகழ்ச்சிகளில் பங்குபெறும் சிறப்பு அழைப்பாளர்கள் தாங்கள் சார்ந்த அரசியல் கட்சி அல்லது இயக்கங்களின் கொள்கைகளை தங்களின் உரைகளில் கலந்து பேசுவதாக தெரியவருவதாகவும், இது போன்ற நிகழ்வுகள் கல்வி கற்கும் மாணாக்கர்களுக்கு இடையூறாக அமையும் […]
தமிழ்நாடு செய்திகள்
நீட் தேர்வு எழுதவிருந்த நெல்லை மாணவர் திடீர் தற்கொலை
கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி, மருத்துவ சீட் கிடைக்காத விரக்தியில் அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்னும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய நிலையில் இன்னும் நான்கு நாட்களில் நீட் தேர்வு எழுதவுள்ள நெல்லை மாணவர் ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை சேர்ந்த தினேஷ் என்ற மாணவரின் தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும், இதனால் அவருடைய குடும்பம் […]
நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் நியமித்த குழுவுக்கு அனுமதி நீட்டிப்பு
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தை விசாரிக்க சந்தானம் தலைமையிலான குழுவிற்கு மேலும் 2 வாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை […]
தமிழின உரிமையை அழிக்கவே துணை ராணுவம் குவிப்பு- திருமுருகன் காந்தி ஆவேசம்
டெல்டா மாவட்டங்களில் தமிழின உரிமையை அழிக்கவே துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். தஞ்சை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களும் அரசியல் கட்சியினர்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களை கண்டுகொள்ளாத மத்திய அரசு டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் பணியில் மும்முரமாக இருந்தது. மீத்தேனுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் நடத்த அரசியல் கட்சிகளும் அந்த […]
சென்னை மெரினாவில் 2000 போலீஸார் குவிப்பு
காவிரி விவகாரத்திற்காக மெரினாவில் போராட்டம் நடைபெறப்போவதாக வந்த தகவலின் பேரில், சென்னை மெரினாவில் 2000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடந்தது. ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய […]
ஸ்டாலினுடன் பேசியது என்ன? தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ்
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அவர்கள் இன்று சென்னைக்கு வருகை தந்து திமுக தலைவர் கருணாநிதி மற்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோர்களை சந்தித்து 3வது அணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் இன்று மாலை சென்னைக்கு வந்த தெலுங்கானா முதல்வர்,கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2004ஆம் ஆண்டு நான் ஏற்கனவே தமிழகம் வந்துள்ளேன். அப்போது நான் […]
சேலத்தில் எம்ஜிஆர், ஜெ.வின் மணிமண்டம் அடிக்கல் நாட்டும் விழா – முதல்வர் பங்கேற்பு
சேலம் அண்ணா பூங்காவில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு அமைக்கப்படவுள்ள மணிமண்டபத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். சேலத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். 2100 சதுரடியில் ரூ.80 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்டப்படுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மணிமண்டபத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். அவருடன் சேலம் மாவட்ட கலெக்டர் ரோஹிணி […]
அம்மா அணியின் பொதுச்செயலாளர் யார்? திவாகரன் பதில்
தினகரனுக்கு போட்டியாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து அதற்கு அம்மா அணி என்ற பெயரும் வைத்துள்ளார் என்பதை சற்றுமுன் பார்த்தோம். இந்த கட்சியின் அலுவலகம் நேற்று மன்னார்குடியில் திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்தில் பெரிய அளவில் ஜெயலலிதாவின் புகைப்படம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சிக்கு சசிகலா பொதுச்செயலாளராகவும், தினகரன் துணை பொதுச்செயலாளராகவும் உள்ளனர். இந்த […]
திவாகரனை அதிமுக வில் சேர்க்க மாட்டோம் – ஜெயக்குமார் தடாலடி
தினகரன் – திவாகரன் இடையே ஏற்பட்ட மோதலில், நாங்கள் எக்காரணத்தைக் கொண்டும் திவாகரனை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு இட, அதற்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் எதிர்வினையாற்ற தினகரன் – திவாகரனுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஏற்க முடியாது. […]
அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக நடிகர் ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் சம்மன்
சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கில் வரும் ஜூன் 6-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு நடிகர் ரஜினிகாந்துக்கு சென்னை ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா மீது, சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், தன்னிடம் இருந்து பணம் பறிப்பதற்காக போத்ரா இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக குற்றம் […]





