ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில், நடிகர் மன்சூர் அலிகான் பங்கேற்றுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், மாணவ அமைப்பினரும் 84வது நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். # […]
தமிழ்நாடு செய்திகள்
தமிழக மாணவர்களுக்கு உதவத் தயார் – கேரள முதல்வர்
நீட் தேர்வு எழுத கேரளா வரும் தமிழக மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சுமார் 10 ஆயிரம் பேர்களுக்கு கேரளா, ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக மாணவர்கள் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்கள் […]
ஜெயலலிதா நினைவிடம் – மே 7-ல் அடிக்கல் நாட்டு விழா!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க மே 7ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சல் காரணமாக 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி ஜெயலலிதா சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருந்த அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதா, 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். அவரது உடல், […]
இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்த காதலன் : நண்பர்களுக்கும் விருந்தாக்கிய கொடூரம்
குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து மிரட்டி கற்பழித்த வாலிபரும், அவரின் நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவடம் அரூர் பகுதியில் வசிக்கும் 25 வயது பெண்ணிற்கும், சேலம் அழகாபுரத்தை சேர்ந்த நைம் மாலிக்(24) என்கிற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. எனவே, அவர்கள் இருவரும் சேலத்தின் பல இடங்களுக்கும் சுற்றி திரிந்துள்ளனர். இந்நிலையில், அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, சேலத்திற்கு […]
ஏழைத் தமிழ் மாணவர்களை நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி – கமல்ஹாசன்
மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக மே 6-ந்தேதி நடக்க உள்ள ‘நீட்’ தேர்வில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கேரளாவிலும், ராஜஸ்தானிலும் தேர்வு மையங்களை ஒதுக்கி உள்ளனர். தேர்வு மையங்கள் ஒதுக்கீடு கணினி மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இதில் மாற்றம் செய்ய முடியாது என்று சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், ‘அண்டை மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டால், மாணவர்களுக்கு மனதளவில் […]
ஆட்டோ டிரைவர் வீட்டில் இரவு உணவு சாப்பிட்ட பொன்.ராதாகிருஷ்ணன்
அம்பேத்கர் பிறந்த தினத்தையொட்டி கிராம தன்னாட்சி திட்டத்தின்படி, மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் கிராமங்களுக்கு சென்றடைகிறதா? என ஆய்வு செய்யும்படி மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.. அதன்படி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குமரி மாவட்டத்தில் தடிக்காரன்கோணம், திக்கணங்கோடுபுதூர் ஆகிய கிராமங்களில் ஆய்வு செய்தார். நாகர்கோவிலை அடுத்த மேலகருப்பு கோட்டை கிராமத்துக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று இரவு சென்று ஆய்வு நடத்தினார். வீதிகள் தோறும் சென்று மக்களை சந்தித்து […]
வேலூரில் இடி-மின்னலுடன் பலத்த மழை – மின்தடையால் பொதுமக்கள் அவதி
வேலூர் மாவட்டத்தில் கடந்தசில நாட்களாக கோடைவெயில் கொளுத்தி வருகிறது. அதிக பட்சமாக கடந்த ஏப்ரல் மாதம் 30-ந்தேதி 108 டிகிரியும், இந்த மாதம் (மே) 1-ந்தேதி 107 டிகிரியும் வெயில் பதிவாகி இருந்தது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே 108 டிகிரி வரை வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். தொடர்ந்து 100 டிகிரிக்குமேல் வெயில் பதிவாகி வருகிறது. இதனால் பகல் நேரத்தில் அனல் காற்று வீசுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் […]
மயிலாடுதுறை அருகே தரையில் புதைந்து உள்வாங்கிய குடியிருப்பு வளாகம்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள அகரகீரங்குடி பகுதியில் நஜிபுனிஷா என்பவருக்கு சொந்தமான 2 மாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இதில் 5 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இதே கட்டிடத்தில் மர இழைப்பகமும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இந்த 2 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென குலுங்கியது. அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் 30-க்கும் மேற்பட்டோர் அதிர்ச்சி அடைந்தனர். ஏதோ […]
தெற்காசிய தடகளம்- தமிழக வீரர்கள் 9 பேர் தேர்வு
3-வது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன் ஷிப் போட்டி கொழும்பில் வருகிற 5 மற்றும் 6-ந்தேதி நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த 9 வீரர்- வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். ஆண்கள் பிரிவில் நிதின் சிதானந்த் (200 மீட்டர் ஓட்டம்), ராஜேஷ் ரமேஷ் (400 மீட்டர் தொடர் ஓட்டம்), கமல்ராஜ் (டிரிபிள் ஜம்ப்), சந்தோஷ் மணிகண்டன் (உயரம் தாண்டுதல்) ஆகியோரும், பெண்கள் பிரிவில் சுபா (200, 400 […]
திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்
.திருச்செந்துார் முருகன் கோவில், முருகனின் அறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாக திகழ்கிறது. கடற்கரையை ஒட்டி இருக்கும் கோவிலில், எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். இப்போது, கோடை விடுமுறை என்பதால், கூட்டம் அதிகரித்துள்ளது.நேற்று பகல், 11:00 மணியளவில், திருச்செந்துார் கடல் திடீரென உள்வாங்கியது. 50 மீட்டர் அளவுக்கு கடல் உள்வாங்கியதால், பாறைகள் வெளியே தெரிந்தன. கடலில் குளித்து கொண்டிருந்த பக்தர்கள் வியப்படைந்தனர். மாலை, 3:00 மணியளவில், கடல் பழைய […]





