தமிழ்நாடு செய்திகள்

சசிகலா விரைவில் விடுதலை? – அதிர்ச்சியில் எடப்பாடி

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு ஒன்றரை வருடம் முடிந்துவிட்டது. கணக்கு படி சசிகலா 2020ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் விடுதலை ஆகி வெளியே வர வேண்டும். ஆனால், அவரை முன் கூட்டியே விடுதலை செய்யும் முயற்சியில் இளவரசியின் மகன் விவேக் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் மும்முறமாக ஈடுபட்டுள்ளனர். நீதிமன்றத்தின் வாசல்கள் அடைக்கப்பட்டதால் வேறு […]

திமுக தலைவர் போட்டிக்காக வேட்புமனு தாக்கல் செய்த மு.க. ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7 ஆம் தேதி இயற்கை எய்தினார். அவரது மறைவு இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. அவரது மறைவிற்கு நாடெங்கிலிருந்தும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் திமுகவின் அடுத்த தலைவராக ஸ்டாலின் பதவி ஏற்பார் என்றிருந்த நிலையில், மு.க அழகிரியால் பிரச்சனை வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றாற்போல் மு.க அழகிரியின் பேச்சு இருந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் நேற்று திடீரென செய்தியாளர்களிடம் பேசிய […]

என்னை நீக்கிய பிறகு திமுக ஒருமுறைக்கூட வெற்றி பெறவில்லை

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின்னர் முதன் முறையாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் வருகிற 28ம் தேதி திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் திமுக தலைவர், பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. செப்டம்பர் 5ஆம் தேதி மு.க.அழகிரி மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்துக்கு அமைதி பேரணி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி கூறியதாவது:- கட்சியில் இருந்து என்னை நீக்கிய பிறகு திமுக […]

தமிழில் பேச வெக்கப்படும் தமிழர்கள் இதை பார்க்க வேண்டாம்!

தமிழன் தமிழில் பேச வெக்கப்படும்போது, இந்த மண்ணில் தமிழ் பாடல்களை மலாய்க்காரர்கள் மேடை நிகழ்ச்சி ஒன்றில் மகிழ்ச்சியாக பாடி அனைவரையும் அச்சரியப்பட வைத்துள்ளனர். தமிழர்களாக்கிய நாம் இதற்கு வெட்கப்பட வேண்டும். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர் .மற்றும் மக்கள் மத்தியில் இந்த வீடியோ அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. https://youtu.be/6WRbA4Dgrcw

தயாளு அம்மாள் வெளியேறினால் கோபாலபுரம் கலைஞரின் வீடு யாருக்கு ..?

இன்று தமிழகத்தின் முக்கிய விடயங்களில் ஒன்று கலைஞர் கருணாநிதி அவர்களின் மரணமும் அவர்களது குடும்பமும் தான். வயதில் முதிர்ந்த ஆழமான அனுபவம் நிறைந்த ஒருவர் குடும்பத்தை விட்டு பிரிந்தால் எத்தனை துன்பமும் குழப்பங்களும் நேரும் என்பதற்கு இது ஒன்றே சாட்சி .மரணத்திற்கு முன்பு கலைஞருக்கு இவை தோன்றி இருக்கும் அதனால் தன் 2வது மனைவி தயாளு அம்மாளுக்காக அவர் வசித்த கோபாலபுரம் வீட்டை எழுதிவைத்துள்ளார் . இந்த வீட்டை விட்டு […]

கலைஞருக்காக நானே தெருவில் இறங்கி இருப்பேன்: நடிகர் ரஜினிகாந்த்

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் காமராஜர் அரங்கில் முன்னரே திட்டமிட்டபடி நேற்று (ஆகஸ்ட் 13) நடைபெற்றது. இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர். நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர், நடிகைள், இயக்குநர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் பலரும் பங்கேற்று கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். […]

கருணாநிதியின் அடுத்த வாரிசு யார்? குழப்பம் ஆரம்பம்! மீண்டும் பரபரப்பு..

கருணாநிதியின் சொந்த தொகுதியான திருவாரூரில் போட்டியிடுவது யார் என்ற எதிர்பார்ப்பில் அத்தொகுதி மக்கள் உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை என்ற கிராமத்தில் பிறந்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இவர் இந்த தொகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு போட்டியிட்டு தமிழகத்திலேயே அதிக இடங்களில் வெற்றி பெற்றவர் கருணாநிதி. இவர் கடந்த 7-ஆம் தேதி உடல்நல குறைவுகளால் மரணமடைந்தார். இதையடுத்து கருணாநிதியின் திருவாரூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த தொகுதியில் யார் […]

கருணாநிதியின் வீட்டில் மோதல்? உடைகின்றது தி.மு.க…!!

தி.மு.க தானாகவே உடையும் என்றும், அதனை உடைக்க வேண்டிய அவசியம் தனக்கு கிடையாது என்றும் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். தி.மு.க தலைவர் கருணாநிதி உயிரிழந்து நாளையுடன் ஒரு வாரம் ஆகவுள்ள நிலையில் அவரது வீட்டில் தற்போது மோதல் வெடித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கட்சியில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அழகிரி தற்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகின்றார். “தி.மு.கவில் உள்ளவர்கள் பணத்திற்கு விலைப்போய்விட்டார்கள். இந்நிலையில், நான் அதிருப்தியில் […]

திமுகவில் அழகிரிக்கு இடமில்லை; அன்பழகன் அதிருப்தி

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின் நாளை திமுக செயற்குழு கூட்டம் முதல்முறையாக நடைபெற உள்ளது. இதில் திமுக கட்சியின் நிர்வாக அமைப்பில் மாற்றம் செய்யப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அவரை கட்சியில் சேர்க்க அவரது ஆதரவாளர்கள் சிலர் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தகவலை அறிந்த திமுக பொதுச் […]

தி.மு.க விற்குள் மீண்டும் வருவாரா அழகிரி – தமிழ்நாட்டில் பரபரப்பு

தி.மு.க.வின் தென்மண்டல அமைப்புச் செயலாளராகப் பதவி வகித்த மறைந்த கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்களின் புதல்வர் மு.க.அழகிரிகடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் அவர் நிரந்தரமாக நீக்கப்பட்டதாக அப்போது அறிவிக்கப்பட்டது. கடந்த ஓகஸ்ட் 07 இல் கருணாநிதி மறைவின் பின்னர் கட்சித் தலைமைத்துவம் மற்றும் கட்சி நிர்வாகிகளை […]