தமிழ்நாடு செய்திகள்

அதிகாலை திடீரென்று கைதான நடிகர் கருணாஸ்- நீதிமன்றம் அதிரடி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காவல்துறை உயர் அதிகாரி ஒருவரை சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார் எம்.எல்.ஏவும், நடிகருமான கருனாஸ். அவர் பேசியது மிகப் பெரிய சர்ச்சையாக அவர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்ய முயற்சி செய்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். எம்.எல்.ஏ. கருணாஸ் மீது […]

நான்தான் ஜனாதிபதியையே தேர்வு செய்தேன்: ஒரே போடாய் போட்ட கருணாஸ்

இது குறித்து நிருபர்கள் அவரிடம் கேட்டபோது அவர் கூறிய பதைல் பின்வருமாறு, நான் 2009 ஆம் ஆண்டு முதல் அமைப்பு நடத்தி வருகிறேன். இதுவரை என் மீதும், என் தொண்டர்கள் மீதும் எந்த ஒரு வழக்கும் இல்லை. வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் முழு வீடியோவை பாருங்கள். 47 நிமிடங்கள் நான் பேசியுள்ளேன். இத்தனை வருடங்களாக பொதுக் கூட்டங்களை பேசி வருகிறேன். என்றைக்கும் ஒரு ஜாதிக்கு எதிராக கருத்து சொன்னது […]

இலங்கை இராணுவத்திற்கு உதவி வழங்கியதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு உதவிகளை வழங்கியதற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி செய்தபோது இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு உதவிகளை வழங்கியதாக மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் பேட்டியளித்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இதனால் ஈழத் தமிழர்களின் படுகொலைக்கு காரணமாக இருந்த திமுக – காங்கிரஸ் கட்சியில் சம்பந்தப்பட்டவர்களை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்கவேண்டும் என வலியுறுத்தி கண்டன […]

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் மீண்டும் கருணை மனுதாக்கல் செய்ய முடிவு

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் மீண்டும் கருணை மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைதான தமிழர்கள் 7 பேரும் கடந்த 27 வருடங்களாக சிறையில் உள்ளநிலையில் அவர்களை விடுதலை செய்வது தொடர்பான நடைமுறைகள் இழுத்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 7 தமிழர்களையும் விடுவிக்க […]

தமிழிசை கூறுவது பொய்: சித்தார்த் விமர்சனம்…

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தமிழிசை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது அனைவரும் அறிந்ததே. இதற்காக கைது செய்யப்பட்ட மாணவி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக ஸ்டாலின் தமிழிசையை கடுமையாக விமர்சித்தார். இதற்கிடையே மாணவி சோபியா பாஜக ஒழிக என்று கோஷம் போட்டதற்காக கைது செய்யப்பட்ட செய்தி இந்தியா முழுதும் டிரெண்ட் ஆனது. […]

சோபியா விவகாரம்: கருத்து கூற ரஜினிகாந்த் மறுப்பு

கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தையே பரபரப்பை ஏற்படுத்திய தமிழிசை-சோபியா விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்காத அரசியல்வாதிகளே இல்லை எனலாம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினில் இருந்து சமீபத்தில் அரசியல் கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன் வரை இந்த விஷயம் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். பாஜக மற்றும் அதிமுக தலைவர்களை தவிர அனைவரும் சோபியாவுக்கே தங்கள் ஆதரவை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த விஷயம் குறித்து இதுவரை […]

குழந்தைகளுக்கு அபிராமி கொடுத்தது தூக்க மாத்திரைகள் அல்ல – அதிர்ச்சி செய்தி

குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்து போலீசாரிடம் சிக்கியுள்ள அபிராமி கொடுக்கும் வாக்குமூலங்கள் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. குழந்தைகளை கொல்ல அவர் தூக்க மாத்திரைகளை பயன்படுத்தியதாக முன்பு செய்திகள் வெளியாகியிருந்தது. ஆனால், அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் தூக்க மாத்திரைகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இந்நிலையில், போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் ‘நான் குழந்தைகளுக்கு கொடுத்தது தூக்க மாத்திரைகள் அல்ல. மாதவிடாய் காலத்தில் […]

காணாமல் போன காதல் ஜோடி மரத்தில் சடலமாக தொங்கிய பரிதாபம்

இந்தியாவில் காணாமல் போனதாக கூறப்பட்ட காதல் ஜோடி மரத்தில் தூக்கு போட்ட நிலையில் இறந்து கிடந்த சம்பவம் பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரிசாவின் Pipili நகரத்தில் உள்ள Routapada கிராமத்தைச் சேர்ந்தவர் Laba Prusty(26). இவரும் அதே பகுதியைச் சேர்ந்தவரும் ஆசிரியராக இருப்பவருமான Soudamini Beher(24) என்ற பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து இருவரும் தங்கள் இருவரின் குடும்பத்தினரின் அனுமதியுடன் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். […]

உலகநாயகன் கமல்ஹாசனின் அதிரடி அறிவிப்பு

தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில், நாடளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறோம், திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை. ஆனால் ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்டும் வேலையில் மக்கள் நீதி மய்யம் ஈடுபடும் என்று பதிலளித்தார். இந்தியா முழுவதும் காவிமயமாக மாற்ற நினைக்கிற பா.ஜ.வை ஒழிப்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியது குறித்து கருத்து சொல்ல […]

ரஜினிக்கு கூறிய அதே கருத்தை விஷாலுக்கும் கூறிய சீமான்

பொதுவாக அரசியலுக்கு புதியவர்கள் வந்தால் ஏற்கனவே அரசியலில் உள்ளவர்கள் அவர்களுடன் களத்தில் நேருக்கு நேர் மோதி பார்ப்பதையே விரும்புவார்கள். ஆனால் சீமான் போன்ற ஒருசிலர் மட்டுமே அரசியலுக்கே இவர்கள் எல்லாம் வரக்கூடாது என்றும் தமிழகத்தை ஆட்சி செய்ய நினைக்க கூடாது என்றும் கூறுவது உண்டு. ஒரு கட்சி ஆட்சிக்கு வருவது மக்கள் கையில் உள்ளது என்பதையே இவர்கள் மறந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது தமிழகத்தை தமிழன் மட்டுமே […]