இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது ஜெயலலிதா மரணம் அடைந்ததால் அ.தி.மு.க. இரண்டாக உடைந்து சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியாகவும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு ஏப்ரல் 12–ந் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகிறார்கள். இதனால் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும்? என்ற கேள்வி […]
முக்கிய செய்திகள்
Head News
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம்: தப்பிவிட முடியாது கோட்டா! – அடித்துக் கூறுகின்றார் சுமந்திரன்
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம்: தப்பிவிட முடியாது கோட்டா! – அடித்துக் கூறுகின்றார் சுமந்திரன் “இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் – சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் பொறுப்புக்கூறவேண்டியவர். அதிலிருந்து தப்பிப்பதற்காகவே சரணடைந்தவர்களைக் கண்டவர்கள் எவருமில்லை என்று கதை சொல்கின்றார்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ போரின் இறுதிக்கட்டத்தில் […]
இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படுமா? மங்கள சமரவீர
இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படுமா? மங்கள சமரவீர இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க பொறிமுறைகள் மற்றும் அதில் காணப்படும் தடைகள், முட்டுக்கட்டைகள் என்பன தொடர்பில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைனிடம் விளக்கிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நல்லிணக்க செயற்பாடுகளை மேலும் முன்னேற்ற காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என கோரியுள்ளார். ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜெனிவா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர், […]
உள்ளாட்சி தேர்தல் வரும் என எதிர்பார்த்தது… சட்டசபை தேர்தலே வரப் போகுது – திமுக செயல் தலைவர் ஸ்டாலின்
உள்ளாட்சி தேர்தல் வரும் என எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால் சட்டசபை தேர்தலே வரும் நிலை ஏற்பட்டுள்ளது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அற்ப ஆயுள் அரசு : கோவை மாவட்டம் சூலூரில் திமுக.,வின் மாநில, மாவட்ட, மாநகர இளைஞரணி அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், தற்போதுள்ள நிலையில் தமிழகத்தில் இடைக்கால அரசே உள்ளது. இது நிலையான அரசு கிடையாது. இவர்களுக்கு […]
நீதிமன்றத்தில் சரணடைய புறப்பட்ட சசிகலா பெங்களூரு செல்லும் முன் ஜெயலலிதா சமாதியில் கையால் அடித்து சபதம்
சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு தண்டைனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தில் சரணடைய புறப்பட்ட சசிகலா பெங்களூரு செல்லும் முன் ஜெயலலிதா சமாதியில் இருமுறை கையால் அடுத்து சபதம் செய்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய போயஸ் கார்டனில் இருந்து சசிகலா புறப்பட்டார். சாலை மார்க்கமாக பெங்களூரு செல்லும் சசிகலா முன்னதாக ஜெயலலிதா […]
சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு
சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு சசிகலாவுக்கு உச்ச நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளதையடுத்து சட்டமன்ற கட்சித் தலைவராக (முதல்வர்) நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கூவத்தூரில் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்திய சசிகலா எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை முன் மொழிந்தார். இதையடுத்து அவரை எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர். முன்னதாக செங்கோட்டையன், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் […]
தமிழக ஆளுநரின் முடிவுக்கு பின்னணியில் யாரும் இல்லை – வெங்கய்ய நாயுடு
தமிழக ஆளுநரின் முடிவுக்கு பின்னணியில் யாரும் இல்லை – வெங்கய்ய நாயுடு தமிழக முதல்வராக வி.கே. சசிகலாவை அழைக்க, ஆளுநர் வித்யாசாகர் ராவ் காலம் எடுத்துக் கொண்டதில் எந்த உள் நோக்கமும் இல்லை என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார். தமிழக ஆளுநரின் முடிவுக்கு பின்னணியில் யாரும் இல்லை என்றும், தமிழக முதல்வர் பதவி காலியாக இல்லை ஒரு முதல்வர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அவர் […]
சி.வி. தலைமையில் எழுக தமிழ் பேரணி ஆரம்பம்
சி.வி. தலைமையில் எழுக தமிழ் பேரணி ஆரம்பம் காலம் காலமாக தீர்க்கப்படாதுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இணைந்த வடகிழக்கே தீர்வு என்பதையும், சமஷ்டியின் மூலமே தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்பதையும் வலியுறுத்தி கிழக்கு எழுக தமிழ் பேரணி தற்போது எழுச்சியுடன் ஆரம்பமாகியுள்ளது. மட்டக்களப்பு கல்லடி மணிக்கூண்டு கோபுரம் அருகிலிருந்து பேரணி ஆரம்பமாகவுள்ள நிலையில், இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடியிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பலர் […]
எனக்கு எத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவு பெரும்பான்மையை தமிழக சட்டசபையில் நிரூபிப்பேன்: ஓ.பி.எஸ்.
எனக்கு எத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவு பெரும்பான்மையை தமிழக சட்டசபையில் நிரூபிப்பேன்: ஓ.பி.எஸ். முதல்வர் பன்னீர்செல்வம் கூறியதாவது: எனக்கு எத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவு என்பதை சட்டசபையில் நிருபிப்பேன். ஜெயலலிதா கொள்கையில் சிறிதளவு கூட விலகாமல் வந்துள்ளேன். முறைப்படி தேர்தல் நடத்தி பொது செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்பது விதி. தமிழக சட்டசபையில் பெரும்பான்மையை நிருபிப்பேன். கவர்னர் சென்னை திரும்பியதும் அவரை சந்திப்பேன். சசிகலா தற்காலிக பொது செயலாளர் தான். இவ்வாறு […]
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை பரிந்துரையை நிராகரியுங்கள் : சர்வதேச மனித உரிமை அமைப்பு
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை பரிந்துரையை நிராகரியுங்கள் : சர்வதேச மனித உரிமை அமைப்பு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை ஸ்ரீலங்காவுக்கு வழங்க வேண்டும் என்ற ஐரோப்பிய ஆணைக்குழுவின் பரிந்துரைகளை, ஐரோப்பிய நாடாளுமன்றம் நிராகரிக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. ஸ்ரீலங்காவில் உண்மை மற்றும் நீதிக்கான திட்டம், சித்திரவதையில் இருந்து விடுதலை, சமாதானம் மற்றும் நீதிக்கான ஸ்ரீலங்காவின் பரப்புரை அமைப்பு உள்ளிட்ட பல […]





