முன்பு போல் இல்லாமல் எதிர்காலத்தில் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் இந்தியா போர்களை சந்திக்கும் என ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற ராணுவம் சார்ந்த அறிக்கை தொகுப்பு வெளியீட்டு விழாவில் ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் பங்கேற்றார். அப்போது ராணுவ வடிவமைப்பு பிரிவின் சார்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் இரண்டாவது தொகுப்புகளை வெளியிட்டு பேசிய அவர் ,” முன்பு போல் இல்லாமல் வரும் காலங்களில் […]
முக்கிய செய்திகள்
Head News
வரலாறு காணாத அளவில் இந்த ஆண்டு தீவிர தட்பவெப்ப நிலை நீடிக்கும் – உலக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வரலாறு காணாத அளவில் இந்த ஆண்டு தீவிர தட்பவெப்ப நிலை நீடிக்கும் என்று உலக வானிலை ஆய்வு அமைப்பு எச்சரித்துள்ளது. கடல் நீர்மட்டம் இதுவரையில்லாத அளவு அதிகரித்துள்ளது, கடல் பனிப்பாறை 40 லட்சம் சதுர கி.மீ பரப்பளவுக்கு உருகிக்கரைந்துள்ளது. மேலும், 2017 இல் வலுவான எல் நினோ விளைவு இல்லை என்றாலும் உலகில் ஏற்படும் மாற்றங்கள் வானிலை அமைப்பின் செயல்பாடுகள் புரிந்து கொள்வதற்கு சவாலாக உள்ளது. இது பற்றிய ஆய்வை […]
நடுவானில் பறந்த அதிவேக சூப்பர் ஜம்போ ஜெட் விமானத்தின் மூச்சுக் காற்றால் குட்டிக்கரணம் அடித்த குட்டி விமானம்
நடுவானில் பறந்த அதிவேக சூப்பர் ஜம்போ ஜெட் விமானத்தின் மூச்சுக் காற்றால் அதை கடக்க முயன்ற சிறிய விமானம் குட்டிக்கரணம் அடித்து 10 ஆயிரம் அடிவரை கீழ் நோக்கி சென்றதாகவும் அதில் இருந்த 9 பயணிகள் காயமடைந்ததாகவும் தற்போது தெரியவந்துள்ளது. எமிரேட்ஸ் விமானச் சேவை நிறுவனத்துக்கு சொந்தமான நவீன ரக சூப்பர் ஜம்போ ஜெட் ஏர்பஸ் A380-800 சம்பவத்தன்று துபாயில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. […]
சீனாவின் பெய்ஜிங்கில் முதன் முறையாக டிரைவர் இன்றி இயங்கும் சுரங்க ரெயில் சேவை தொடக்கம்
சீனாவின் பெய்ஜிங்கில் முதன் முறையாக டிரைவர் இன்றி தானாக இயங்கும் சுரங்க ரெயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் ரெயில்கள் ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா ரெயில் சேவையில் சிறந்து விளங்குகிறது. புல்லட் ரெயில், சுரங்க ரெயில் சேவையில் அதிவிரைவான வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் அங்கு டிரைவர் இன்றி தானாக இயங்கும் சுரங்க ரெயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. தலைநகர் பெய்ஜிங்கில் யங்பாங்கில் […]
நல்லிணக்கத்தை ஏற்படுத்த புதிய கல்வி அலகு
மாணவர்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கப் பண்புகளை வளர்பதை நோக்காகக் கொண்டு ஸ்ரீலங்காவில் புதிய கல்விப் பிரிவொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சுடன் இணைந்து தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான கல்வி அழகினை ஆரம்பிக்கவுள்ளது. இந்த பாட அழகு தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் பண்டாராநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் […]
நடிகர் ரஜினியின் இலங்கை பயணம் ரத்து – எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் – ரஜினிகாந்த் வேண்டுகோள்
நடிகர் ரஜினியின் இலங்கை பயணம் ரத்து – எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் – ரஜினிகாந்த் வேண்டுகோள் தனது இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ள ரஜினிகாந்த், நான் ஒரு கலைஞன், என் முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார். இலங்கை வாழ் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை நடிகர் ரஜினிகாந்த் பயனாளிகளுக்கு வழங்க இருந்தார். இந்நிலையில், அவர் இலங்கைக்கு செல்லக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் […]
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இந்தியா கடமைப்பட்டுள்ளது – சுஸ்மா ஸ்வராஜ்
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின்போது இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் இந்தியா கவலையடைந்திருந்தாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் நேற்று நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார். இலங்கை தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இந்தியா கடமைப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள தமிழர்களின் நலன்களை பாதுகாப்பதே, எமது நோக்கம். இதனை கட்டாயப்படுத்தி அல்லது, நட்பு நாடுகளுடன் இணைந்து செயற்பட்டு என இரண்டு வழிகளில் அடைய முடியும். இந்தப் பிரச்சினை எழுந்து கொண்டிருக்கும் போது, ஒருமித்த நிலையை […]
ஐ.நா. தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துக! – அரசை வலியுறுத்துகின்றது கூட்டமைப்பு
“ஐ.நா. தீர்மானங்களின் உள்ளடக்கங்களை அவற்றில் உள்ளவாறே இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. “தமிழ் மக்கள் தமது பொறுமையின் எல்லையை அடைந்துவிட்டார்கள். எனவே, அவர்களது இடர்களுக்கும், வேதனைகளுக்கும் கூடிய விரைவிலே ஒரு முடிவு காணப்படவேண்டும்” என்றும் கூட்டமைப்பு கோரியுள்ளது. 2015ஆம் ஆண்டின் ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தும் புதிய தீர்மானம் வாக்கெடுப்பின்றி – ஏகமனதாக வியாழக்கிழமை […]
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து கடும் வேதனையில் இந்தியா! – சுஷ்மா அதிரடி
இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதியில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் இந்திய அரசு கடும் வேதனையும் துயரமும் அடைந்தது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்தக் கருத்து வழமைக்கு மாறானது. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இந்தியா இதுவரை வெளியிட்ட கருத்துக்களில் இதுவே கடுமையானது என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் […]
இராணுவத்தை விசாரணை செய்ய ஒருபோதும் அனுமதியோம்
இராணுவத்தினரை விசாரணை செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவது இல்லை என்று மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் மெகா பொலிஸ் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார். மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் மெகா பொலிஸ் அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். எங்கள் முடிவில் தெளிவாக இருகக்கின்றோம். எமது நீதித்துறை எமக்கு போதுமானது. இந்த நாட்டில் நடைபெற்றதாக கூறப்படும் பிரச்சினைகள் தொடர்பில் விசாரணை […]





