வடக்கு கிழக்கு மாகாணங்கள் அடுத்துவரும் மாதங்களில் மிகப்பெரிய நீர்ப்பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நா. பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். சித்திரை சிறுமாரி சிலவேளை பெய்யாவிட்டால் அல்லது தீவுப் பகுதிக்கு முதலாவது இடைநிலைப் பருவகால மழை கிடைக்காவிட்டால், மே ஆரம்பப் பகுதியில் நீர்ப் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாத காலப் பகுதியில் சூரியன் வானில் […]
முக்கிய செய்திகள்
Head News
மாகாண சபைத் தேர்தல்கள் பழைய முறைப்படியே- அரசாங்கம்
காலாவதியாகவுள்ள வட மத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல் நடைமுறையிலுள்ள விருப்பு வாக்கு முறைமையின் அடிப்படையிலிலேயே இடம்பெறும் என உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா அறிவித்துள்ளார். இந்த மூன்று மாகாண சபைகளினதும் ஆயுட்காலம் இவ்வருடம் செப்டம்பர் மாதம் நிறைவடைகின்றது. இதனால், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்துக்கு முன்னர் இந்த தேர்தலை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இதேவேளை, உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடாத்துவது தொடர்பான […]
அரசு ஏமாற்ற முற்பட்டால் சர்வதேசம் கைகொடுக்கும்! – நம்பிக்கை இழக்கவில்லை என்கிறார் மாவை எம்.பி.
“நல்லாட்சி அரசு மீது நம்பிக்கை வைத்து நாம் செயற்பட்டிருக்கின்றோம். இன்னும் நாம் முழுமையாக நம்பிக்கை இழக்கவில்லை. நாங்கள் சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்படுகின்ற சந்தர்ப்பத்தில் இந்த அரசு எம்மை ஏமாற்றுமாயின் எங்களது அடுத்தகட்ட முடிவுகளைச் சர்வதேசம் ஆதரிக்கும். நாம் எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சர்வதேசத்துடன் பேசித்தான் தீர்மானிக்க முடியும்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். […]
மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு – 10 நாட்களாக நடந்து வந்த லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்
மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து 10 நாட்களாக நடந்து வந்த லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பு, வட்டார போக்குவரத்து கட்டணம் உயர்வு உள்ளிட்டவற்றை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த 30-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டம் தொடர்ந்து […]
விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் விரைவில் குடியேற வேண்டும்: அரசாங்க அதிபர்
வலிகாமம் வடக்கில் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் விரைவில் குடியேற வேண்டும் என அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார். வலிகாமம் வடக்கு ஊறணி கிராம சேவையாளர் பிரிவில் மக்களின் காணிகளைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டார். தையிட்டி வடக்கு மற்றும் மயிலிட்டி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கடற்கரைப் பகுதியில் காங்கேசன்துறை மகாவித்தியாலயம் தொடக்கம் மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையை எல்லையாகக் கொண்ட பகுதிகளில் 28.7 […]
யாழ். பல்கலைக்கழக மாணவர் படுகொலை ; வழக்கை கொழும்புக்கு மாற்ற முயற்சி
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மரணமானது குறித்தான வழக்கில் சந்தேகநபர்களாக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும், ஐந்து பொலிஸாரும், தமது வழக்குகளை இடமாற்றம் செய்யுமாறு கோரி மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு சந்தேகநபர்கள் ஐவரும் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களில் […]
போர்க்குற்றம் இடம்பெறவில்லை; விசாரணை தேவையில்லை: யாழில் தான் தெரிவித்ததாக வெளியான தகவலை நிராகரித்தார் ராஜித!
போர்க்குற்றங்களோ, மனித உரிமை மீறல்களோ இடம்பெறவில்லை என்று யாழ்பாணத்தில் வைத்து தான் தெரிவித்தார் என ஊடகங்களில் வெளியான செய்திகளை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நிராகரித்தார். 1980ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்தே தமிழ் மக்களுக்காகத் தான் குரல் கொடுத்து வருகின்றார் என்றும், தனது நிலைப்பாடு என்னவென்பது தமிழ் மக்களுக்குத் தெரியும் எனவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சிவசக்தி ஆனந்தன், […]
சிரியா விமானப்படை தளம் மீது ஏவுகணைகள் வீச்சு: அமெரிக்காவுக்கு ரஷியா கண்டனம்
சிரியா நாட்டின் விமானப்படை தளத்தின் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ரஷிய அதிபர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார். சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் புரட்சிப் படையினரின் பதுங்குமிடத்தின்மீது அந்நாட்டின் விமானப்படை ரசாயன ஆயுதங்களை வீசி நடத்திய தாக்குதலில் சுமார் 100 பேர் துடிதுடித்து உயிரிழந்தனர். சர்வதேச மனித உரிமைகளை மீறிய வகையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு உலகில் உள்ள […]
ஹன்ஸ்ராஜ் வர்மா, ராஜ் துறை, நிரஞ்சன் மார்டி ஆகியோருக்கு தலைமை செயலாளர் அந்தஸ்து உயர்வு – தமிழக அரசு உத்தரவு
ஹன்ஸ்ராஜ் வர்மா, ராஜ் துறை, நிரஞ்சன் மார்டி ஆகியோருக்கு தலைமை செயலாளர் அந்தஸ்து உயர்வு கொடுத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் உள்துறை மது விலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை கூடுதல் தலைமை செயலாளராக இருக்கும் நிரஞ்சன் மார்டி, தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழக கூடுதல் தலைமை செயலாளராக இருக்கும் பி.டபிள்யூ.சி. டேவிதார், கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை கூடுதல் […]
வலி.வடக்கில் 28.2 ஏக்கர் காணி விடுவிப்பு
வலிகாமம் வடக்கில், காங்கேசன்துறை ஊறணிப் பகுதியிலுள்ள சுமார் 28.2 ஏக்கர் மக்கள் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ளடங்கியிருந்த குறித்த பிரதேசத்தினை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக மக்கள் போராடி வந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) சுமார் 28.2 ஏக்கர் நிலப்பரப்பு பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட குறித்த பகுதிளில் உள்ள கட்டடங்கள் முற்றாக தரைமட்டமாக்கப்பட்டு, கிணறுகள் மூடப்பட்டு பற்றைக்காடுகளாக காட்சியளிக்கின்ற நிலையில், குறித்த காணிகளின் எல்லைப்பரப்புக்களை அடையாளம் காண்பதில் அப்பிரதேச மக்கள் […]





