முக்கிய செய்திகள்

Head News

கோப்பாபுலவு மக்களின் காணிகளை விடுப்பது தொடர்பான கூட்டம் ஆரம்பம்

இராணுவத்தினர் வசமுள்ள கோப்பாபுலவு மக்களின் காணிகளை விடுப்பது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளது. எனினும் இந்த கூட்டத்தில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தினர் வசமுள்ள கேப்பாபுலவு மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி காணி உரிமையாளர்கள் 50 ஆவது நாளாகவும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், […]

தியாக தீபம் அன்னை பூபதியின் 29ஆவது ஆண்டு நினைவு தினம்! – மட்டக்களப்பில் இன்று உணர்வெழுச்சி நிகழ்வு

நாட்டுப்பற்றாளர் – ஈகச்சுடர் – தியாக தீபம் அன்னை பூபதியின் 29ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். 1932ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் திகதி மட்டக்களப்பு – கிரான் பிரதேசத்தில் பூபதி என்ற இயற்பெயருடன் வந்துதித்த அன்னை பூபதி, தமிழீழ மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வீரச்சாவடைந்தார். தமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் இந்தியப் படைகள் புரிந்திட்ட அடக்குமுறைகளுக்கு எதிராகவே 19.03.1988 இல் இருந்து […]

மஹிந்தவின் ஊழல், மோசடிகள்: – 3 விசாரணை அறிக்கைகள் மைத்திரியிடம் இவ்வாரம் கையளிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் நடைபெற்ற மிகப் பெரிய ஊழல், மோசடிகள் தொடர்பான விசாரணையின் இறுதி அறிக்கைகள் மூன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளன எனத் தெரியவருகின்றது. மஹிந்த ராஜபக்ஷவுடனும் அவரது குடும்பத்தினருடனும் நேரடியாகத் தொடர்புடையதாகத் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மோசடிகள் தொடர்பான அறிக்கைகளே ஒப்படைக்கப்படவுள்ளன. மஹிந்த ஆட்சியில் நடைபெற்ற மிகப் பெரிய ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு, ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழு பல்வேறு மோசடிகள் […]

அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்துக; அரசாங்கத்திடம் கோரிக்கை

ஸ்ரீலங்காவில் பல்வேறு பாகங்களிலும் இன்புளுவென்ஸா தொற்று வேகமாக பரவிவருகின்ற நிலையில் அதனைக் கருத்திற்கொண்டு அவசர கால நிலைமையை பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தவறிவிட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்த சங்கத்தின் செயலாளர் நவீன் டி சொய்ஸா இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். குறித்த வைரஸ் தொற்றினால் பலர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு […]

வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் விசேட கூட்டங்கள் – இரா. சம்பந்தன் அறிவிப்பு

வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் 19ஆம் 20ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் விசேட கூட்டங்கள் ஒழுங்குச் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கடசித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். வடக்கில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் விசேட கூட்டங்களை யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் தற்போதைய நிலையில் நடத்த […]

சிரியாவில் நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள்: போப் ஆண்டவர் உருக்கமான வேண்டுகோள்

சிரியாவில் நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என போப் ஆண்டவர் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். ஈஸ்டர் பண்டிகையையொட்டி போப் ஆண்டவர் பிரான்சிஸ், வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் நேற்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர் ஆற்றிய ஈஸ்டர் தின உரையில், அண்மையில் சிரியாவில் விஷ வாயு தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டது […]

குப்பை மேடு சரிவு விபத்தில் 28 பேர் பலி: 30 பேர் மாயம்

புதுவருடப் பிறப்பு தினமான கடந்த 14ஆம் திகதி மாலை 3 மணியளவில் வெல்லம்பிட்டிய மீதொட்டமுல்ல பிரதேசத்தில் குவிக்கப்பட்டிருந்த பாரிய குப்பை மேட்டு மலையின் ஒரு பகுதி வீடுகள் மீது சரிந்தது. இந்த சம்பவத்தில் பல வீடுகள் குப்பையில் மூடப்பட்டதோடு உடனடியாக மீட்பு பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன. கடந்த 14ஆம் திகதி முதல் இன்றைய தினம் வரை இடம்பெற்ற மீட்புப் பணிகளில் 28 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையில் […]

வடக்கு காணி விடுவிப்பு: அடுத்தவாரம் மாவட்ட செயலகங்களில் கூட்டங்கள்

வடமாகாணத்தில் ஸ்ரீலங்கா அரச படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பது தொடர்பாகவும், மாவட்ட செயலகங்களில் இந்த வார இறுதியில் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன. வடக்கில் யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் ஸ்ரீலங்கா அரச படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை அவர்களிடம் கையளிப்பது தொடர்பாக, கொழும்பில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று காலை 11.30 அளவில் இடம்பெற்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், ருவன் விஜேவர்தன மற்றும் அமைச்சின் […]

இந்தியாவுடனான உறவுகளை பலப்படுத்த நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி அரசு முறைப்பயணமாக டெல்லி வந்தார்

இந்தியாவுடனான உறவுகளை பலப்படுத்தும் நோக்கத்தில் நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி அரசு முறைப்பயணமாக இன்று டெல்லி வந்தடைந்தார். நேபாள நாட்டின் புதிய அதிபராக கடந்த ஆண்டு பதவியேற்ற பித்யா தேவி பண்டாரி, கடந்த ஆண்டு மே மாதம் இந்தியா வருவதாக இருந்தது. ஆனால், அந்நாட்டு மந்திரிசபையின் ஒப்புதல் கிடைக்காததாக் அவரது வருகை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், பின்னர் செய்யப்பட்ட ஏற்பாடுகளின்படி நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி அரசு முறைப்பயணமாக […]

தமிழகத்தில் 25-ந்தேதி கடையடைப்பு – பஸ், ஆட்டோக்கள் ஓடாது – தொழிலாளர் முன்னேற்ற சங்க (எல்.பி.எப்) பொதுச் செயலாளர் சண்முகம் அறிவிப்பு

தமிழகத்தில் 25-ந்தேதி பஸ், ஆட்டோக்கள் ஓடாது என்று தொழிலாளர் முன்னேற்ற சங்க (எல்.பி.எப்) பொதுச் செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார். தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 25-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தை தி.மு.க ஒருங்கிணைத்துள்ளது. அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க பிற கட்சிகள் பங்கேற்கவில்லை. தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, மார்க்சிஸ்ட் […]