முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக நேற்றிரவு கைதான டி.டி.வி தினகரன் இன்று பிற்பகல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார். அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததால், அந்த கட்சியின் சின்னமான “இரட்டை இலை” சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கி வைத்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு கொடுக்கலாம் என்று தேர்தல் கமிஷன் […]
முக்கிய செய்திகள்
Head News
மோடியைச் சந்தித்தார் ரணில் – பொருளாதார உடன்பாடும் கைச்சாத்து
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இன்று பிற்பகல் 1 மணியளவில் இந்தச் சந்திப்பு ஆரம்பமாகியது. இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன. அத்துடன், இந்திய, சிறிலங்கா பிரதமர்களின் முன்னிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜூம், சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக […]
டெல்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அபார வெற்றி – வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி
டெல்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அபார வெற்றியை தேடித் தந்த வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். டெல்லி மாநகராட்சி முன்பு ஒரே மாநகராட்சியாக இருந்தது. 2012-ம் ஆண்டு வடக்கு, தெற்கு, கிழக்கு என 3 மாநகராட்சியாக பிரிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள 3 மாநகராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 23-ந்தேதி நடந்தது. இந்த 3 மாநகராட்சிகளிலும் மொத்தம் 272 வார்டுகள் உள்ளன. வடக்கு டெல்லி மற்றும் தெற்கு டெல்லி மாநகராட்சியில் […]
இன்று புதுடெல்லி செல்கிறார் சிறிலங்கா பிரதமர்- நாளை மோடி, சோனியாவை சந்திக்கிறார்
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐந்து நாட்கள் பணிநோக்குப் பயணமாக இன்று இந்தியா செல்லவுள்ளார். இன்று பிற்பகல் 5.30 மணியளவில் அவர் புதுடெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பயணத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியையும் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். சிறிலங்கா பிரதமருடன், அவரது துணைவி மைத்ரி விக்கிரமசிங்க […]
திருமலை எண்ணெய் கிணறுகள்;பேச்சுவார்த்தையின் பின்னரே முடிவு எடுக்கப்படும்
திருகோணமலையிலுள்ள எண்ணெய்க் கிணறுகளை இந்தியாவுக்கு வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மாறாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்துக்கும், திருகோணமலை எண்ணெய்க் கிணறுகள் விற்பனை விவகாரத்திற்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் கொழும்பிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. […]
ஆஸியிலிருந்து இலங்கை வந்த தமிழர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு சித்திரவதை!
ஆஸ்திரேலியாவிலிருந்து சமீபத்தில் இலங்கை வந்திருந்த யாழ்ப்பாணத் தமிழர் ஒருவரை இராணுவப் புலனாய்வாளர்கள் வெள்ளை வானில் கடத்திச் சென்று சித்திரவதை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட குறித்த நபர் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த ஆஸ்திரேலிய ஊடகம் அவரது பெயரை வெளியிடாததுடன் அவரை குமார் எனக் குறிப்பிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் பல வருடங்களாக வசித்து வந்த குமார் என்ற யாழ்ப்பாணத் தமிழர் ஒருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக இலங்கை வந்த வேளையே கடத்தப்பட்டு சித்திரவதை […]
இடைத்தரகர் சுகேசுடன் பேசியதை டி.டி.வி.தினகரன் ஒத்துக்கொண்டார்: ஐகோர்ட்டு நீதிபதி என்று நினைத்து பேசினாராம்
டெல்லியில் நடைபெற்ற விசாரணையின்போது, இடைத்தரகர் சுகேசுடன் பேசியதை ஒத்துக்கொண்ட டி.டி.வி.தினகரன், ஐகோர்ட் நீதிபதி என நினைத்து பேசியதாக கூறியுள்ளார். அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததால், அந்த கட்சியின் சின்னமான “இரட்டை இலை” சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கி வைத்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு கொடுக்கலாம் என்று தேர்தல் கமிஷன் ஆய்வு செய்து வருகிறது. இதற்காக இரு அணியினரும் ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் பெற […]
மீத்தொட்டமுல்ல அனர்த்தம் ஜப்பானிய நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைப்பு
மீத்தொட்டமுல்ல குப்பைமேடு அனர்த்தத்துக்கு காரணமான விடயங்கள் மற்றும் இனிவரும் காலங்களில் அவ்வாறான சம்பவம் ஏற்படுவதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை விதந்துரைப்பதற்காக வருகைதந்த ஜப்பானிய நிபுணர்கள் குழுவின் அறிக்கை இன்று முற்பகல் ஜனாதிபதி அவர்களது உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரதிநிதிகள் குழுவின் தலைவரான ஆவைளரவயமந ரேஅயாயவய அவர்கள் அறிக்கையை ஜனாதிபதி அவர்களிடம் வழங்கி தமது விதந்துரைகள் தொடர்பில் தெளிவுபடுத்தினார். குறித்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கான குறுங்கால நடவடிக்கையாக குப்பைமேட்டின் […]
போர்க்குற்றம் சாட்டப்பட்ட சவேந்திர சில்வாவுக்கு புதிய பதவி
கடுமையான போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இராணுவத்தின் உயர் அதிகாரிகளுள் ஒருவரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, கஜபா காலாட்படை பிரிவின் தலைமை கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கஜபா படைப்பிரிவின் தலைமை தளபதியாக பதவி வகித்து வந்த மேஜர் ஜெனரல் உதய பெரேரா இவ்வாரம் ஓய்வுபெறவுள்ள நிலையில், அப் பதவிக்கு சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இறுதி யுத்தத்தின் போது மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையில் இயங்கிய இராணுவத்தின் 58ஆவது […]
ஜனாதிபதியாகும் கனவு பஸிலுக்கு இல்லை என்கிறது மஹிந்த அணி!
“ஜனாதிபதியாகும் கனவில் பஸில் ராஜபக்ஷ இல்லை. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் பஸில் உடனே நாட்டைவிட்டு வெளியேறிவிடுவார்.” – இவ்வாறு மஹிந்த அணியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- “எமது அணியின் சார்பில் பஸில் ராஜபக்ஷதான் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்று சொல்லப்படுகின்றது. உண்மையில், ஜனாதிபதியாகும் கனவில் அவர் இல்லை. […]





