முக்கிய செய்திகள்

Head News

ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான நேரம் கனிந்துவிட்டது! – மஹிந்த கூறுகின்றார்

“ஆட்சியைக் கவிழ்ப்பதற்குரிய காலம் கனிந்துவிட்டது. எனவே, சரியான நேரத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவோம்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்க்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சூளுரைத்திருந்தார். அதுபற்றி ஆங்கில ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். “நாட்டில் தற்போது நடப்பவற்றைப் பார்க்கையில் ஆட்சியைக் கவிழ்க்கும் அந்தத் தருணத்தை நோக்கி விடயங்கள் நகர்வதை அனைவராலும் உணரக்கூடியதாக இருக்கின்றது. அதிகாரம் […]

சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க போவதில்லை: ஜனாதிபதி

அரசமைப்பு தயாரிப்பு குறித்து இரண்டு வாரங்களில் மைத்திரி விசேட அறிவிப்பு!

அரசமைப்பு தயாரிப்புப் பணி சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் என்று நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. இன்னும் இரண்டு வாரங்களில் இந்த அறிவிப்பு வெளியாகலாம். இதன்போது அரசமைப்பு பற்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உத்தியோகப்பூர்வ நிலைப்பாட்டையும் கட்சித் தலைவர் என்ற ரீதியில் அவர் விளக்குவார் என்று அரசியல் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார். புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டு அது தொடர்பில் மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அமுல்படுத்தப்படவேண்டும் […]

தமிழர்களின் பிரச்சினையை மோடியின் கவனத்திற்கு கொண்டுவர தீர்மானம்

இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 11ஆம் திகதி பாரத பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதோடு, அநேகமாக 12ஆம் திகதி கூட்டமைப்பை சந்திப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது. இச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். குறிப்பாக காணி […]

நவீன லேசர் வெசாக் அலங்காரப் பந்தல் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ளது

உலகிலுள்ள முதலாவது நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்காரப் பந்தல் மக்கள் பார்வைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. கொழும்பு காலிமுகதிடலில் நிர்மாணிக்கப்படுகின்ற இவ்வலங்காரப் பந்தல் நாளை மறுதினம் (புதன்கிழமை) மாலை 7.00 மணிக்கு முதன் முறையாக காட்சிபடுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை எதிர்வரும் 14ஆம் திகதி மக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்படும் இந்த வெசாக் அலங்கார பந்தல், கொலந்தொட்ட வெசாக் வலயத்திற்கு இணையாகவே இந்நவீன இவ்வெசாக் அலங்கார […]

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துமாறு கோரி நாடு முழுவதிலும் ஹர்த்தால் போராட்டம்! – மஹிந்த அணி தீர்மானம்

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துமாறு கோரி நாடு முழுவதிலும் ஹர்த்தால் போராட்டம்! – மஹிந்த அணி தீர்மானம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்க நாடு முழுவதிலும் பூரண ஹர்த்தால்போராட்டத்துக்கு அழைப்பு விடுப்பதற்கு மஹிந்த அணி தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி இறுதி முடிவுகள் எடுப்பதற்கு இந்த வாரம் மஹிந்த அணியின் முக்கிய உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடவுள்ளனர் என்று தெரியவருகின்றது. […]

பொன்சேகாவுக்கான புதிய பதவி குறித்து ஆர்வப்படும் இராஜதந்திரிகள்!

பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படவுள்ள புதிய பதவி தொடர்பில் அறிந்துகொள்வதற்கு இராஜதந்திரிகள் முனைப்புக் காட்டி வருகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசுக்கு எதிராக நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்புப் போராட்டங்களின்போது, இராணுவத்தில் சிறப்புச் செயலணியை உருவாக்கி அதிகாரங்களை ஒப்படைக்க ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கருத்து வெளியிட்டிருந்தார். இந்தக் கருத்து உள்நாட்டு அரங்கிலும், சர்வதேச அரங்கிலும் பெரும் அதிர்வலையைத் ஏற்படுத்தியிருந்தது. இதன் […]

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த முள்ளிவாய்க்கால் மக்களுக்கு வட. மாகாண சபையின் ஏற்பாட்டில் நினைவேந்தல்

முல்லைத்தீவு-முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதிப்போரில் உயிரிழந்த மக்களின் நினைவு நாள், எதிர்வரும் 18ஆம் திகதி வட. மாகாண சபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளதாக வட. மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். மேலும், முள்ளிவாய்க்கால் மண்ணில் மேற்கொள்ளப்படவுள்ள நினைவேந்தல் நிகழ்விற்கான ஒழுங்குகள் நடைபெற்றுவரும் அதேவேளை, இது குறித்து எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாணசபை அமர்வின் பின்னர் விரிவாக கலந்துரையாடப்படுமெனவும் அவர் தெரிவித்தார். கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்த ஆயிரக்கணக்கான […]

தொழிற்சங்கப் போராட்டங்களால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தடுக்க அரசின் அதரடி நடவடிக்கை

தொழிற்சங்கப் போராட்டங்களால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தடுக்க அரசு விசேட குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக திறன் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டங்களின் போது மக்களுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வண்ணம் இருக்க விசேட குழுவொன்றை அமைக்க ஜனாதிபதியும், பிரதமருக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று சைட்டம் எதிர்ப்புப் போராட்டத்தில் நாட்டின் அரச மற்றும் தனியார் வைத்திய சேவைகளும், […]

சிறுபிள்ளைத்தனமாக செயற்படுகிறது அரசு! – இராஜாங்க அமைச்சர் விஜயகலா சாடல்

“படையினரினால் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர், யுவதிகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான தேசிய அரசு சிறுபிள்ளைத்தனமாகச் செயற்படுகின்றது. – இவ்வாறு பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “இறுதிப் போரில் […]

பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது: அமைச்சர் சந்திம

பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கைகள் காரணமாக நாட்டில் எரிபொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உட்பட ஏனைய தொழிற்சங்கங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கையினால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கைகளுக்கு எந்தவொரு இடைஞ்சலும் ஏற்பட மாட்டாது. இதனை முகம்கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது. இன்று நடைபெறும் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் கலந்துகொள்ளவில்லையெனவும், இதனால், மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லையெனவும் […]