முக்கிய செய்திகள்

Head News

செம்மணியில் தொடங்கிய இனப்படுகொலை நினைவேந்தல் வார நிகழ்வுகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் நேற்று முதல் தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் சிறிலங்கா படையினரால் யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கைது செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்ட சுமார் 600 பேரின் நினைவேந்தல் நிகழ்வு நேற்றுக்காலை செம்மணியில் இடம்பெற்றது. வடக்கு மாகாணசபை உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்வில் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் […]

தமிழர் பிரச்சினைக்கு சமஷ்டி முறையில் நியாயமான தீர்வு – மோடியிடம் வலியுறுத்தியது கூட்டமைப்பு

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான நியாயமான தீர்வு ஒன்று வழங்கப்பட வேண்டும் என்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. சிறிலங்காவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தின் முடிவுக் கட்டத்தில் நேற்று மாலை 5.55 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். மிகக் குறுகிய நேரமே […]

மோடிக்கு ரணில் வரவேற்பு

இரண்டுநாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலை இலங்கை வந்தடைந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங் வரவேற்பளித்தார்.

இறக்காமத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு

அம்பாறை – இறக்காமம் மாயக்கல்லி மலையில் அதிகளவில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், நேற்றைய பௌத்த பிக்குகள் சிலருக்கு வழிப்பாடுகளில் ஈடுபடும் அனுமதியை பொலிஸார் வழங்கியுள்ளனர். குறித்த பகுதிக்குள் எவரும் பிரவேசிக்க கூடாது என நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், வெசாக் தினத்தை முன்னிட்டு இறக்காமம் மாயக்கல்லி மலைக்கு பக்தர்கள் வழிப்பாட்டிற்காக சென்றுள்ளனர். இதற்கமைய மாயக்கல்லி மலைப் பகுதியில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாப்பு வழங்க 1000ற்கும் […]

ஜனாதிபதி தலைமையில் அடுத்தமுறை கூடுவது புதிய அமைச்சரவையாகவே இருக்கும் என எதிர்பார்ப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அடுத்தபடியாக நடக்கவுள்ள அமைச்சரவைக் கூட்டம் அநேகமாக மீளாய்வு செய்யப்பட்ட அமைச்சரவையாக இருக்கலாம் என அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளளன. அமைச்சரவைக் கூட்டமொன்று நடந்து முடிந்ததும் அடுத்த கூட்டத்துக்கான திகதியும் நேரமும் அறிவிக்கப்படுவது சம்பிரதாயமாகும். எனினும், இறுதியாக நடந்த கூட்டத்தில் அடுத்த கூட்டத்துக்கான திகதியும் நேரமும் அறிவிக்கப்படாததால் அடுத்த கூட்டம் அநேகமாக மாற்றம் செய்யப்பட்ட அமைச்சரவையின் கூட்டமாக இருக்கலாம் என அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 19ஆவது அரசமைப்புத் […]

சு.கவின் அமைச்சரவை பேச்சாளராக தயாசிறியை நியமிக்க அனுமதி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பாக அமைச்சரவை பேச்சாளராக விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவை நியமிக்க கட்சியின் அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆகியோரின் அனுமதி கிடைக்கப்பட்டதன் பின்னர் தயாசிறி ஜயசேகரவின் பெயர் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்மொழியப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவை இணைப் பேச்சாளர்களாக அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, கயந்த […]

மூன்றாவது முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அமர்வும்

தமிழீழ தேசிய துக்க நாளாகிய மே 18ம் நாளன்று மூன்றாவது முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை அமெரிக்காவின் லோஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் நாட்களான மே 19 முதல் மே 21 வரையான நாள்களில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது நாடாளுமன்றின் ஏழாவது அமர்வு இதே நகரில் கூடவுள்ளது. உலகின் பல பாகங்களிலுமிருந்து வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் செனற் சபை உறுப்பினர்களும் […]

தமிழ் மக்களின் பிரச்சினைகளை மோடியிடம் எடுத்துரைப்பேன்- சம்பந்தன்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ்த் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தியப் பிரதமரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் வரும் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இரா.சம்பந்தன், “ இந்தியப் பிரதமருடன் நடக்கவுள்ள சந்திப்புத் […]

வெகுவிரைவில் அரசை வீட்டுக்கு அனுப்புவோம்! – மஹிந்த தலைமையில் புதிய ஆட்சி அமையும் என்கிறார் நாமல்

“மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் இந்த அரசை வெகுவிரைவில் வீட்டுக்கு அனுப்புவோம். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முழுமையான ஆதரவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சி அமையும் நாள் விரைவில் வரும்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் […]

மோடியின் பாதுகாப்புக்காக நான்கு உலங்குவானூர்திகள் கொழும்பு வருகை

மோடியின் பாதுகாப்புக்காக நான்கு உலங்குவானூர்திகள் கொழும்பு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக நாளை மறுநாள் கொழும்பு வரவுள்ளார். இலங்கையில் தங்கியிருக்கும் போது, இந்தியப் பிரதமருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக, இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்கனவே கொழும்பு வரத் தொடங்கியுள்ளனர். இதன் ஒரு கட்டமாக, இந்தியப்பிரதமரின் பாதுகாப்பு அணியில் உள்ள நான்கு எம்.ஐ-17 சிறப்பு உலங்கு வானூர்திகள் நேற்று புதுடெல்லியில் இருந்து கொழும்பு […]