இறுதிக்கட்ட போரில் படையினரிடம் சரணடைந்தவர்கள் மற்றும், படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுமாறு முப்படையினர் மற்றும் காவல்துறையினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டளை பிறப்பித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கு மாகாண ஆளுனர் செயலகத்தில் நேற்று மாலை 4 மணியளவில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, படையினரிடம் சரணடைந்தவர்களின் பட்டியல் மற்றும் […]
முக்கிய செய்திகள்
Head News
போர்க்குற்ற விசாரணையை ஏற்கமறுத்தே ஜி.எஸ்.பி. + வரிச்சலுகையை கைவிட்டோம்! – தனது ஆட்சியை நியாயப்படுத்தி மஹிந்த அறிக்கை
“படையினருக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை, அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட காரணிகளுக்கு இணங்கமுடியாததன் காரணமாகவே தனது அரசு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை கைவிட்டது” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீளப்பெறுவதற்கு தனது ஆட்சியின்போது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததை நியாயப்படுத்தி அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- “ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் ஐரோப்பிய […]
ஞானசார தேரரைத் தேடும் பணி தொடர்கின்றதாம்! – பொலிஸார் கூறுகின்றனர்
நாட்டில் இனவாதம், மதவாதத்தைத் தூண்டுவிட்டி குழப்பங்களை உருவாக்க முற்படுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அத்துடன், பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளரை கைதுசெய்வதற்குரிய சகல முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரியந்த ஜயக்கொடி தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் […]
தேர்தலைத் தள்ளிப்போட ஞானசார தேரரைப் பயன்படுத்துகின்றது அரசு! – மஹிந்த அணி குற்றச்சாட்டு
உள்ளூராட்சி சபைத் தேர்தலை மேலும் ஒத்திவைப்பதற்காக அரசு ஞானசார தேரரின் விவகாரத்தில் சர்வதேசத்தின் கவனத்தைத் திசைதிருப்பிக்கொண்டிருப்பதாக மஹிந்த அணியான பொது எதிரணியின் பேச்சாளர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:- “உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் தள்ளிப்போடுவதற்கு இந்த அரசு ஏற்கனவே பல நொண்டிச்சாட்டுக்களைக் கூறி வந்திருக்கிறது. இப்போது ஞானசார தேரரின் விவகாரத்தைப் பூதாகரமாக்கி சர்வதேச சமூகத்தின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சி செய்துகொண்டிருக்கின்றது. உள்ளூராட்சி சபைத் […]
ஞானசார தேரர் பற்றிய ராஜிதவின் கருத்துக்கு சிஹல ராவய கடும் கண்டனம்!
ஞானசார தேரர் அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பில் இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருக்கும் கருத்துக்கு சிஹல ராவய கட்சியின் பொதுச் செயலாளர் மாகல்கந்த சுதத்த தேரர் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். ஞானசார தேரரைக் கைதுசெய்வதற்கான நீதிமன்றப் பிடியாணை விடுக்கப்பட்டுள்ள போதிலும் அவர் அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் அவரைக் கைதுசெய்ய முடியாமல் இருப்பதாக கடந்த புதன்கிழமை டாக்டர் ராஜித சேனாரத்ன கூறியிருக்கிறார் எனவும், அவர் உண்மையைப் […]
வடக்கு மாகாண சபையில் சுழற்சி முறை ஆசனம் யாருக்கு? – தமிழரசுக் கட்சி, புளொட் கடும் போட்டி
வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நியமன ஆசனத்தை இந்த ஆண்டு, சுழற்சி முறையில் யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் ஒருமித்த நிலைப்பாடு இன்னமும் எட்டப்படவில்லை என்று அறியமுடிகின்றது. புளொட் அமைப்பு தமக்கே அந்த ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்று பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே எட்டப்பட்ட உடன்பாட்டுக்கு அமைவாக இலங்கைத் தமிழரசுக் கட்சி தமக்கே வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இதனால் இந்த […]
செய்த குற்றங்களுக்கு இப்போது தண்டனை! – வேதனையடைகின்றார் நாமல்.
எமது ஆட்சியில் நாம் செய்த குற்றங்களுக்கான தண்டனையை இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம்.” – இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதே குற்றங்களை நீங்களும் செய்யாதீர்கள் என்று அவர் தற்போதைய ஆட்சியாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “எமது ஆட்சியில் பல தவறுகள் நிகழ்ந்துள்ளதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அதற்கான தண்டனையை நாம் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம். அந்தக் […]
வடக்கு அமைச்சர்களான ஐங்கரநேசன், குருகுலராஜாவை பதவியிலிருந்து நீக்குங்கள்! – பரிந்துரைத்தது விசாரணைக் குழு
வடக்கு அமைச்சர்களான ஐங்கரநேசன், குருகுலராஜாவை பதவியிலிருந்து நீக்குங்கள்! – பரிந்துரைத்தது விசாரணைக் குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு தனது அறிக்கையில் இரு அமைச்சர்கள் உடன் பதவி விலகவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மற்றும் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் […]
5 தமிழர்களைக் கொன்ற பொலிஸார் இருவருக்கு மரணதண்டனை! – இருபது வருடங்களுக்குப் பின் தீர்ப்பு
அம்பாறையில் 5 தமிழர்களை சுட்டுக் கொலைசெய்த சம்பவத்தில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கு அம்பாறை சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசரும் அம்பாறை மேல்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசருமான சுமுது பிரேமச்சந்திர மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். அம்பாறை மாவட்டத்தில் பணிபுரிந்த முன்னாள் கான்ஸ்டபிள்களான ஆர்.பி.காமினி குமாரசிங்க மற்றும் ஜே.எம்.நிமல் குணரத்ன ஆகிய இருவருக்குமே மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது எனவும், இந்தச் சம்பவத்தின் மற்றொரு சந்தேகநபரான ஏ.டபிள்யூ.வசந்தகுமார எனும் கான்ஸ்டபிள் வழக்கு விசாரணை நடைபெற்ற […]
லண்டன் தாக்குதல்களைக் கண்டிக்கிறது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
லண்டன் தாக்குதல்களைக் கண்டிக்கிறது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் லண்டன் தொடர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அரசுகளும், அரசல்லாதோரும் அப்பாவிப் பொதுமக்கள் மீது நடத்தி வரும் வன்செயல்கள் குறித்து, செஞ்சிலுவைச் சங்கத்தின் 1977ம் மாநாட்டினை மீள நடத்துமாறு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- மானிட விழுமியங்களைக் கிஞ்சிற்றும் மதிக்காமல் லண்டனில் அப்பாவி மக்களைப் படுகொலை செய்ததும் காயப்படுத்தியதுமான […]





