முக்கிய செய்திகள்

Head News

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான சித்திரவதை தொடர்கின்றது! – உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்றிட்டம் குற்றச்சாட்டு

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அரசின் சித்திரவதையும், பாலியல் துஷ்பிரயோகமும் தொடர்கின்றன என்று உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்றிட்டம் குற்றம்சாட்டியுள்ளது. பாதுகாப்புப் படையினர் தமிழர்களைக் கடத்துவதும், சித்திரவதை செய்வதும் புதிய அரசு பதவியேற்று 30 மாதங்கள் கடந்தும் தொடர்கின்றது எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் தொடரும் தமிழர்களுக்கு எதிரான இவ்வாறான செயற்பாடுகளைத் தடுப்பதற்குப் புதிய அரசும் தவறியுள்ளது எனவும் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்றிட்டம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் […]

பங்களாதேஷ் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி

பங்களாதேஷிற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹஸீனா இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இரு தலைவர்களுக்குமிடையில் சுமுகமான கலந்துரையாடலை தொடர்ந்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. இலங்கை மற்றும் பங்களாதேஷிற்கு இடையில் வர்த்தக உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பிலும் விஷேட பொருளாதார வலயமொன்றை உருவாக்கிக் கொள்வது தொடர்பிலும் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

முன்னாள் கடற்படை பேச்சாளருக்கு விளக்கமறியல்

கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கப்டன் டி.கே.பி.தஸநாயக்கவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு 11 தமிழ் இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கடந்த புதன்கிழமை முன்னாள் கடற்படை பேச்சாளர் டீ.கே.பி. திசாநாயக்க கைது செய்யப்பட்டார். அதன்படி இன்று(வெள்ளிக்கிழமை) காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 19ஆம் திகதி […]

ஜனாதிபதிக்கு பங்களாதேஷில் அமோக வரவேற்பு

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஷீனா அம்மையாரின் அழைப்பின்பேரில் மூ ன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பங்களாதேஷ் சென்று ள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு இன்று முற்பகல் பங்களாதேஷ் டாக்கா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார் . ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் பங்களாதே ஷிற்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். அவருக்கு கோலாகலமானவரவேற்பினை அளிப்பதற் கான சகல ஏற்பாடுகளையும் அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டிருந்தது . டாக்கா […]

அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை சீர்குலைக்கவேண்டாம் – பிரதமர் கோரிக்கை

புத்தசாசனத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எடுத்துக்கூறும் போலி சுலோகங்களின் மூலம் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை சீர்குலைக்க வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் மல்வத்து பீட மஹாநாயக்கருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, பௌத்த பீடங்களுக்கு இடையில் பேதங்களும் ஏற்படுத்தப்பட்டதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். அன்று அனைவரும் ஆட்சியாளர்களுக்கு அஞ்சி மௌனம் சாதித்ததாக பிரதமர் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற இளைஞர் பிக்குமார் ஒன்றியத்துடனான கலந்துரையாடலில் கருத்து வெளியிட்டார். […]

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் மகிழ்ச்சியளிக்கிறது: அஸ்கிரிய பீடம்

மகாநாயக்கர்களை சந்திப்பதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எடுத்துள்ள தீர்மானம் மகிழ்ச்சியளிப்பதாக அஸ்கிரிய பீடத்தின் தலைமைச் செயலாளர் வண.மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனமொன்று அவசியமில்லையென பௌத்த உயர் பீடத்தின் மகாநாயக்கர்கள் தெரிவித்துள்ள நிலையில், புதிய அரசியலமைப்பின் அவசியப்பாடு தொடர்பாக மகாநாயக்கர்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாக கூட்டமைப்பினர் கூறியிருந்தனர். இதற்கு பதிலளிக்கும் போதே அஸ்கிரிய பீடத்தின் தலைமைச் செயலாளர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார். கூட்டமைப்பினரை சந்திப்பதில் மகிழ்ச்சியடைவதாக […]

புதிய அரசியலமைப்பில் ஒரு வார்த்தை கூட உருவாக்கப்படவில்லை: லக்ஸ்மன் கிரியெல்ல

புதிய அரசியலமைப்பில் ஒரு வார்த்தை கூட இதுவரை உருவாக்கப்படவில்லை. ஆனால், பௌத்த மதத்துக்கான முன்னுரிமை இல்லாது ஒழிக்கப்படுகின்றது எனப் பல்வேறு பொய்ப் பிரசாரங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இன்று (செவ்வாய்க்கிழமை) இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நீண்டகாலத்துக்குப் பின்னர் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதுடன், வடக்கு, கிழக்கு இணைப்பைக் கைவிடுதல், […]

சட்டத்தை கையில் எடுக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு கிடையாது: சுமந்திரன்

”யாழ்.பருத்தித்துறை மணற்காட்டுப் பகுதியில் மணற்கடத்தல் இடம்பெற்றால் அதனை தடுக்க வேண்டியது பொலிஸாரின் கடமை. அதனை விடுத்து சட்டத்தை கையில் எடுக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு கிடையாது” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். துன்னாலை இளைஞன் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த இளைஞன் மணற்கடத்தலில் ஈடுபட்டிருந்தால் சட்ட வரையறைக்குள் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டுமே தவிர, இளைஞனின் உயிரைக் குடிக்கும் அளவுக்கு துப்பாக்கிச் சூடு நடத்த […]

2019இல் ஜனாதிபதித் தேர்தல்?

அரசமைப்புத் திட்டத்தின்படி அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2019ஆம் ஆண்டில் நடைபெறவேண்டும் என்பது  நிச்சயமாகியுள்ளது என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அரசமைப்புத் திட்டத்தின் 7ஆவது பிரிவின் 30 (1)ஆம் ஷரத்தின்படி ஜனாதிபதியொருவரின் உத்தியோகபூர்வ காலம் ஐந்து வருடங்களாகும். அதன் 31 (3)ஆம் ஷரத்தின்படி ஜனாதிபதியொருவரின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒருமாத காலத்துக்குக் குறையாததும் இரண்டு மாத காலத்துக்கு மேற்படாததுமான கால எல்லைக்குள் புதிய தேர்தல் நடத்தப்படவேண்டும். தற்போதைய ஜனாதிபதி 2015 ஜனவரி […]

உள்ளூராட்சித் தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெறும் அறிகுறி!

நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுவரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் இவ்வருடம் நவம்பர் மாதத்தில் நடைபெறக்கூடிய சாத்தியங்கள் தென்படுவதாக அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள புதிய தேர்தல் முறையின்கீழ் இந்தத் தேர்தல் நடத்தப்படலாம் எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்சமயம் 4 ஆயிரத்துக்கு சற்று அதிகமாகவுள்ள மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை எல்லை நிர்ணய அடிப்படையில் 8 ஆயிரமாக உயர்வடையும். எனினும், அந்த எண்ணிக்கையை 7 ஆயிரமாகக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதில் 25 […]