உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- “உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. தேர்தல் முறையில் தொகுதி மற்றும் விகிதாசார அடிப்படையில் ஆசனங்களை ஒதுக்கீடுசெய்வது குறித்தும், பெண்களுக்கு 25 வீத வாய்ப்பளிப்பது குறித்தும் பேச்சுகள் நடைபெற்றுவருகின்றன. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்டமூலம், பேச்சுகளையடுத்து […]
முக்கிய செய்திகள்
Head News
அரசிலிருந்து எவரும் வெளியேறமாட்டர்! – டிசம்பரில் சு.கவின் முடிவை அறிவிப்போம் என்கிறார் துமிந்த
“வீடு என்றால் ஆயிரம் சண்டை இருக்கும். சாதாரண சண்டைக்காக உடனே எவரும் வெளியேறமாட்டார்கள். டிசம்பர் மாத இறுதியில் தேசிய அரசில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்து இருக்குமா? இல்லையா? என்று அறிவிப்போம்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் விவசாய அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “தேசிய அரசில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டுவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து சிலர் விலகவுள்ளனர் […]
சம்பந்தனைச் சந்தித்தார் அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர்
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தப் பேச்சுக்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார். இந்தச் சந்திப்புத் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள, இரா.சம்பந்தன் “ நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியலமைப்பு ஒன்று இதுவரை உருவாக்கப்படவில்லை. இதுவே நாட்டில் நிலவிய போருக்கு முக்கிய காரணம். எனவே, […]
டெங்கு ஒழிப்புக்கு உதவி: ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஆஸி. வெளிவிவகார அமைச்சர் உறுதி
இலங்கையில் டெங்கு நோயை ஒழிப்பதற்கு அவுஸ்திரேலியா உதவும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலீ பிசப் தெரிவித்தார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலீ பிசப் இன்று (20) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார். இச்சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்தபோது டெங்கு மற்றும் சிறுநீரக […]
பெரும்பான்மை சமூகத்துடன் கூட்டமைப்பிற்கு சரியான தொடா்பாடல் இல்லை: சி.வி.
பெரும்பான்மை சமூகத்துடன் கூட்டமைப்பிற்கு சரியான தொடா்பாடல் இல்லையென குறிப்பிட்டுள்ள வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் ஏனைய மொழி பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குகூட சரியாக தெரிவிக்கப்படுவதில்லையென குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் பெரும்பான்மையாக சிங்களம் பேசும் உறுப்பினர்கள் இருக்கும் போது, தமிழில் எமது பிரச்சினைகளை எடுத்துரைப்பதால் எவ்வித பிரயோசனமும் இல்லையென்றும், சமூகங்களுக்கிடையிலான பிரச்சினைகளை பரிமாற்றிக்கொள்ள கூட்டமைப்பின் தலைமைத்துவம் சரியான நடவடிக்கையொன்றை எடுக்க வேண்டுமெனவும் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார். தேசிய பிரச்சினைகளை […]
ஐ.நாவை பகைத்துக்கொண்டால் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் : ராஜித எச்சரிக்கை
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகளை பாதுகாக்கும் அனைத்து உடன்படிக்கைகளிலும் நாம் கைச்சாத்திட்டுள்ளோம். ஐ.நாவின் விசேட நிபுணர்கள் இங்கு வரும் போது அவர்களுக்கான வசதிகளை நாம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது கட்டாயனமானது. ஐ.நாவை பகைத்துகொண்டு எம்மால் சர்வதேசத்தில் செயற்பட முடியாது என்று அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. ஐ.நாவின் சிறப்பு நிபுணர் இலங்கை குறித்து தெரிவித்த கருத்துகள் […]
அரசு விசாரணை செய்யத் தவறினால் ஐ.நாவே நேரில் களமிறங்கும்! – எச்சரிக்கின்றார் ஆயர் கிங்ஸிலி சுவாம்பிள்ளை
“இலங்கையில் காணாமலாக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்து இலங்கை அரசு மறந்துபோனாலும் ஐ.நாவில் உள்ளோரும் அதிகாரிகளும் மறந்துபோகவில்லை. அவர்கள் அளவுக்கு மிஞ்சி அமைதி காக்கமாட்டார்கள். சந்தர்ப்பம் வரும்போது அவர்களே நேரடியாக இங்கு இறங்கும் கட்டம் வரும். ஐ.நா. அதிகாரிகளே வந்து போர்க்குற்றச்சாட்டுக் குறித்து ஆராயும் சூழ்நிலைகூட ஏற்படலாம்.” – இவ்வாறு எச்சரித்திருக்கின்றார் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் வணக்கத்துக்குரிய ஆயர் ஜோஸப் கிங்ஸிலி சுவாம்பிள்ளை. அவர் மேலும் தெரிவிக்கையில், “காணாமலாக்கப்பட்ட மற்றும் […]
ரெலோவின் அடுத்த அமைச்சர் யார்? இன்றுதான் முடிவு அறிவிப்பு! – செல்வம் தெரிவிப்பு
“எமது கட்சியின் சார்பில் யாரை அமைச்சராக நியமிப்பது என்பது குறித்து இன்றுதான் நாம் முடிவை அறிவிப்போம்.” – இவ்வாறு ரெலோ அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்தின் பெயரை, கட்சியின் செயலாளர் ந.சிறீகாந்தா முதலமைச்சருக்கு எழுத்துமூலமாக நேற்று அறிவித்துள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “எமது கட்சியின் சார்பில் அமைச்சராக யாரை நியமிப்பது […]
டெனீஸ்வரனுக்குப் பதிலாக விந்தனை அமைச்சராக நியமிக்குமாறு முதலமைச்சருக்கு ரெலோ பரிந்துரை!
வடக்கு மாகாண அமைச்சரவையில் தமது கட்சியின் சார்பில் போக்குவரத்து, மீன்பிடி, வர்த்தக வாணிப, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்ட பா.டெனீஸ்வரனை, அந்தப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, தமது கட்சியைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்தை அமைச்சராக நியமிக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ரெலோ நேற்றுக் கடிதம் அனுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோவின் சார்பில் வடக்கு மாகாண அமைச்சரவையில் […]
புதிய அரசமைப்புக்கு சர்வதேச பங்களிப்பு அவசியம் : சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சரிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு
தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அதற்கு சர்வதேச ஆதரவளிக்க வேண்டும் என்றும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனிடம் எடுத்துரைத்தாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். ஐந்துநாள் உத்தியோகப்பூர் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலக்கிருஷணன் மற்றும் எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமான சந்திப்பு இன்று மாலை எதிர்கட்சியின் […]





