முக்கிய செய்திகள்

Head News

ரணிலும் ரவியும் உடன் பதவி விலகவேண்டும்! – நாமல் வலியுறுத்து 

“முன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவின் தில்லுமுல்லுகள் பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழுவில் அம்பலமாகியிருப்பதால் அவரும் அவருக்குத் துணைநின்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உடனடியாகப் பதவி விலகவேண்டும்.” – இவ்வாறு மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனுமான நாமல் ராஜபக்ஷ சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியில் வலியுறுத்தியுள்ளார். பிணைமுறி மோசடி விவகாரத்தில் பிரதான சூத்திரதாரியான […]

திங்களன்று விஜயகலாவை அழைத்துள்ள இரகசிய பொலிஸ்

புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கில் பிரதான சந்தேகநபராக கருதப்படும் மகாலிங்கம் சிவகுமார் என்ற சுவிஸ் குமாரை புங்குடுதீவு சென்று காப்பாற்றுமாறு சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் அநுருந்த ஜயசிங்கவிற்கு பணித்தமை தொடர்பில் வாக்குமூலம் அளிக்கவென மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு இரகசிய பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர். நாளை 28ம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் விஜயகலா அதனை மாற்றி 31ம் திகதி […]

ரவிராஜ் கொலை விவகாரம்: நேவி சம்பத்திற்கு பிடியாணை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலையின் பிரதான சந்தேகநபரான நேவி சம்பத்திற்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) இவ் உத்தரவை பிறப்பித்துள்ளது. ரவிராஜ் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த ஐந்து சந்தேகநபர்களும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்ற ஜூரிகள் சபையால் விடுவிக்கப்பட்டனர். இதற்கு எதிராக ரவிராஜின் பாரியாரால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று […]

புலிகள் மீதான தடைநீக்கம் தமிழ் அரசியலுக்கு கிடைத்த அங்கீகாரம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டமையானது, தமிழ் மக்களின் அரசியலை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளதை வெளிப்படுத்துகின்றதென அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். குறித்த தடை நீக்கம் தொடர்பாக கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இனவாதத்தை பாதுகாக்கும் அரசாங்கம் இதனை பாதிப்பாக கருதி, இதற்கெதிராக செயற்படுமென தெரிவித்த அருட்தந்தை சக்திவேல், அப்போது தமிழ் மக்கள் அனைவரும் […]

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்

விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் நீதிபதிகள் இன்று இந்த தீர்ப்பை அளித்துள்ளனர். 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தாக்குதல்களை நடத்தும் ஆபத்து இருப்பதற்கான சான்றுகளை ஐரோப்பிய ஒன்றியம் சமர்ப்பிக்கவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் நிதியை தொடர்ந்து முடக்கிவைக்கும் உத்தரவையும் ரத்துச் செய்தும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]

ஊழல்களை மறைக்கவே ராஜபக்சர்கள் தொழிற்சங்கங்களை தூண்டி விடுகின்றனர்

கடந்த அரசாங்க காலப்பகுதியில் ஊழல் முறைகேடு மோசடிகளில் ஈடுபட்டோரின் விசாரணைகள் முடிவடைந்துள்ளது. இவர்களை தற்பொழுது கைதுசெய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுப்பதற்காகவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடும் எரிபொருள் ஊழியர்கள் தொடர்பில் செய்தியாளர் ஒருவர் கேட்ட […]

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீதுதான் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து வட, கிழக்கில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைக் கண்டித்து வடக்கு,கிழக்கில் இன்று பல்வேறு தரப்பாலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி டிப்போச்சந்தி பசுமை பூங்காவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழு முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னாரிலும் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இந்த […]

இளஞ்செழியன் மீதான தாக்குதல் நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட சவால் : இ.தொ.கா. கண்டனம்

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூட்டுச்சம்பவம் இலங்கையில் நீதித்துறைக்கு சவால் விடும் நோக்கில் அமைந்துள்ளதாக ஊவா மாகாண அமைச்சரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான செந்தில் தொண்டமான் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போது நாட்டில் நல்லாட்சி இடம்பெற்று வருகின்றது. அதேநேரம் வடக்கில் யுத்த சூழ்நிலை இல்லாதொழித்து மக்கள் எவ்வித அச்சசும் இன்றி நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் நீதிபதி […]

உயிரிழந்த மெய்ப்பாதுகாவலருக்கு யாழ். பல்கலையில் அஞ்சலி!

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின்போது நீதிபதியின் உயிரைப் பாதுகாத்து தன்னுயிரைத் துறந்த மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் அதிகாரி சரத் ஹேமச்சந்திரவுக்கு நேற்று யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்.பல்கலைக்கழத்தில் அனைத்துப்பீட மாணவர்களும் இணைந்து அஞ்சலி செலுத்தினார்கள். அன்னாரின் உருவப்படம் வைக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மெழுகுவர்த்திகளும் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடக்கு, கிழக்கில் இன்று கண்டனப் பேரணிகள்!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தை கண்டித்து, வடக்கு கிழக்கில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு கண்டனப் பேரணிகள் நடைபெறவிருக்கின்றன. இந்தக் கண்டனப் பேரணிகளை வடக்கு, கிழக்கு ஒருங்கமைப்புக் குழு ஏற்பாடு செய்துள்ளது. அந்தக் குழு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “யாழ்ப்பாணம் நல்லூர்ப்பகுதியில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை, மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்தச் சம்பவமானது […]