முக்கிய செய்திகள்

Head News

இலங்கையைக் கூறுபோட்டு விற்கின்ற ஆட்சியாளர்களுக்குத் தண்டனை உறுதி! – சரத் வீரசேகர கூறுகின்றார்

“இலங்கையின் வளங்களை சர்வதேசத்துக்குக் கூறுபோட்டுக்கொடுக்கும் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு அமையப்போகும் வேறோர் அரசின்கீழ் தேசத்துரோகிகளாக அடையாளப்படுத்தப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்படும்.” – இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பருமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- “இந்தியா, சீனா உள்ளிட்ட உலகின் பலம்வாய்ந்த நாடுகளுக்கு எமது நாட்டின் அரச வளங்களை விற்பனைசெய்வதன் மூலம் எதிர்காலத்தில் எமது நாடு வளங்களற்ற நாடாக […]

பிணைமுறி மோசடியாளர்களுக்கு உடன் தண்டனை வழங்கவேண்டும்! – சு.கவின் அமைச்சர்கள்  ஜனாதிபதிக்கு அழுத்தம்

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி மோசடி விவகாரத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சிலர் பின்புலமாக இருந்ததாகத் தகவல்கள் அம்பலமாகியுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கையை எடுக்கவேண்டும்  என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள அமைச்சர்கள் சிலர் அழுத்தம் கொடுத்துவருகின்றனர் எனத் தெரியவருகின்றது. பிணைமுறி மோசடி விவகாரத்தில் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்கள் பின்புலமாக இருந்துள்ளனர் என்று குறித்த விடயம் தொடர்பில் விசாரணை செய்துவரும் […]

மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால் மட்டுமே நிரந்தர சமாதானம் ஏற்படும்: இரா.சம்பந்தன்

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் நிரந்தரமாகத் தீர்க்கப்பட்டால் மட்டுமே நாட்டில் சமாதானம் ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தேசிய நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”உண்மையான சமாதானம் ஏற்பட வேண்டுமாக இருந்தால் மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் சாசனம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். ஆட்சிமுறைகள் […]

ரவிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவை: தயாசிறி

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மிகவும் பாரதூரமானவை என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நிதியமைச்சராக ரவி கருணாநாயக்க கடமையாற்றிய காலத்தில், அவரது உறவினர்களுக்கு பர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அர்ஜூன் அலோசியஸ் சொகுசு வீடொன்றை பெற்றுக்கொடுத்து, வாடகையும் செலுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டு, தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு […]

அம்பாந்தோட்டை துறைமுகத்தை மஹிந்த ஆட்சியில் கைப்பற்றுவோம்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் ஹோல்டிங் நிறுவனத்துக்குக் குத்தகைக்கு வழங்கும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், மஹிந்த ஆட்சியின்போது அது மீளப்பெறப்பட்டு மக்கள் மயப்படுத்தப்படும் என்று முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பாந்தோட்டை முறைமுகத்தை சீனாவுக்குக் குத்தகைக்கு வழங்கும் ஒப்பந்தம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நாளானது நாட்டுக்கு துக்கதினமாகும். குறித்த உடன்படிக்கை […]

புதிய அரசமைப்பு மூலம் நிரந்தர தீர்வு கிடைக்கும்! –  சம்பந்தன் நம்பிக்கை 

புதிய அரசமைப்பை உருவாக்கும் அரசின் முயற்சி ஊடாக இனப்பிரச்சினைக்கான நிரந்தரத்  தீர்வு கிடைக்கும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ‘த ஹிந்து’ பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலிலேயே இரா.சம்பந்தன் இந்த நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அந்த நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “இலங்கை தொடர்பான இந்தியாவின் நலன்கள் என்பது பொருளாதாரம் மற்றும் மூலோபாய விடயங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதிலும் இந்தியா […]

தமிழரின் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு வழங்கவேண்டும்! – கனேடியத் தூதுவரிடம் சம்பந்தன் வலியுறுத்து

“தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசு காலத்தை இழுத்தடிக்காமல் உடன் தீர்வு வழங்கவேண்டும். இதற்கு கனேடிய அரசு உள்ளிட்ட சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவேண்டும்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான கனேடியத் தூதுவர் ஷெல்லி வைற்றிங், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள […]

காணாமல்போனோர் அலுவலகத்தால் இராணுவத்துக்குப் பாரிய அச்சுறுத்தல் என்கிறார் திஸ்ஸ விதாரண!

காணாமல்போனோர் தொடர்பாக அமைக்கப்படவுள்ள அலுவலகம் யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினருக்குப் பாரிய அச்சுறுத்தலாக உள்ளதென லங்கா சமசமாஜக் கட்சி கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. காணாமல்போனோர் தொடர்பாகக் கண்டறிவதற்கு அமைக்கப்படவுள்ள அலுவலகத்தின் ஊடாக நாட்டின் எந்தவொரு நபருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க முடியும் என அக்கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார். இந்த அலுவலகத்தின் பரிந்துரைகள் சர்வதேச நீதிமன்றங்களிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினருக்கே அச்சுறுத்தல் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். […]

வித்தியா படுகொலை வழக்கு: சி.ஐ.டியின் விசாரணைக்கு சமுகமளிக்காத விஜயகலா!

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமாரைத் தப்பிக்க வைத்தமை தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் வழங்க, இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை அழைக்கப்பட்டபோதும், அவர் விசாரணைக்கு சமுகமளிக்கவில்லை என்று தெரியவருகின்றது. பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமாரைத் தப்பிக்க வைத்தமை தொடர்பான வழக்கில், வடக்கு மாகாணத்தின் முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க கைதுசெய்யப்பட்டிருந்தார். ஊர்காவற்துறை நீதிமன்றில் […]

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தை தவிர்த்த சித்தார்த்தன் எம்.பி.!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி. பங்கேற்கவில்லை. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் சுமார் 45 நிமிடங்கள் இந்தக் கூட்டம் நடைபெற்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு மாகாண சபையின் சுழற்சி முறையிலான நியமன ஆசன விவகாரத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தில் இந்த விவகாரம் […]