வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க சற்றுமுன் தனது பதவியை இராஜனாமா செய்வதாக நாடாளுன்றில் அறிவித்தார். நல்லாட்சி அரசு உருவாக்கப்பட்ட நோக்கம் நாட்டில் இஞ்ச ஊழலை ஒழிப்பதற்காகும். மீண்டும் பழைய யுகத்தை நோக்கி செல்ல முடியாது. 32 வருடங்கள் நான் உழைத்த ஐக்கிய தேசியக் கட்சியக்கும், நல்லாட்சி அரசுக்கு பங்கம் ஏற்படாமல் இருக்கவே எனது பதவியை இராஜனாமா செய்கிறேன். மாறாக எவருக்கும் பயந்து அல்ல என்று தெரிவித்தே இராஜனாமா செய்வதாக அறிவித்தார். […]
முக்கிய செய்திகள்
Head News
முதல்வர் கூறினாலும் இராஜினாமா செய்ய மாட்டேன்: டெனீஸ்வரன்
முதலமைச்சர் என்னிடத்தில் இராஜினாமா செய்யுமாறு கேட்கவில்லை. அவ்வாறு கேட்டாலும் நான் இராஜினாமா செய்யவதற்கு தயார் இல்லை என வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அமைச்சரின் உப அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அவ்வாறு கூறியுள்ளார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ”2013ஆம் ஆண்டு முதலமைச்சர் என்னிடம் அமைச்சுப் பொறுப்பை எவ்வாறு நேர்மையாகத் தந்தாரோ அதே போன்று […]
யுத்த நிறைவே சம்பந்தனை சந்திக்க வைத்தது – மஹிந்த ராஜபக்ஷ
யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட காரணத்தினாலேயே தானும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் ஒரே மேடையில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற புத்தக வெளியீட்டு விழாவொன்றில், மஹிந்தவும் சம்பந்தனும் ஒரே மேடையில் சங்கமித்திருந்தனர். இந்நிகழ்வில் உரையாற்றிய போதே மஹிந்த மேற்குறித்தவாறு கூறியுள்ளார். அத்தோடு, யுத்தம் நிறைவடைந்தமையே நல்லிணக்கத்திற்கும் அடித்தளமிட்டதென குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அனைவருக்கும் சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்த தனக்கு, சுதந்திரம் பறிபோய்விட்டதெனவும் மஹிந்த […]
இராணுவமே ஆவா குழுவை உருவாக்கியது! – நாடாளுமன்றில் மீண்டும் தெரிவித்தது கூட்டமைப்பு
வடக்கில் கைது, தேடுதல்களால் முன்னாள் போராளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், இராணுவமே ஆவா குழுவை உருவாக்கியது எனவும் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவக சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:- “12 ஆயிரம் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், அவர்களுக்கு […]
ஆவா குழுவின் நடவடிக்கை புலிகளின் மீள் எழுச்சியா? – அரசின் பதிலைக் கோருகின்றது மஹிந்த அணி
“ஆவா குழு உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டதை மேற்கோள்காட்டி விடுதலைப்புலிகள் அமைப்பு மீள இயங்க ஆரம்பித்துள்ளதா? இது தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன?” என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த ஆதரவு அணி எம்.பியான பத்ம உதயசாந்த, சட்டம் ஒழுங்கு அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றம் நேற்றுப் பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தின்போது, கிழக்கு மாகாணத்தில் ஐந்து பொலிஸ் நிலையங்களை இலக்குவைத்து […]
அரசியல் கைதிகளின் படுகொலைக்கு நீதி கோரியும் விடுதலையை வலியுறுத்தியும் வடக்கில் போராட்டங்கள்!
சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட அரசியல் கைதிகளான நிமலரூபன், டில்ருக்ஷன் ஆகியோரது 5ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் நேற்று கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அரசியல் கைதிகள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்தும், அதற்குக் காரணமானவர்களை நீதித்துறைமுன் நிறுத்தி கடும் தண்டனை வழங்கவும், படுகொலைசெய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்கவும், அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுவிக்கவும், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்கக் கோரியும் இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன
குடாநாட்டு நிலவரம் – சிறிலங்கா அதிபர், பிரதமரை நாளை அவசரமாகச் சந்திக்கிறது கூட்டமைப்பு
யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை அவசரமாகச் சந்தித்துப் பேசவுள்ளது. இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, “வடக்கின் தற்போதைய பாதுகாப்புச் சூழல் தொடர்பாக, கலந்துரையாடுவதற்கான ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்து தரக்கோரி, சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமருக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் […]
ஆவா குழுவின் முன்னணி தலைவர்கள் தெற்கு நோக்கித் தப்பியோட்டம் – சிறிலங்கா காவல்துறை
யாழ்.குடாநாட்டில் சிறப்பு அதிரடிப்படையினருடன் இணைந்து சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்டு வரும் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், ஆவா போன்ற வாள்வெட்டுக் குழுக்களின் முக்கிய தலைவர்கள் தெற்கு நோக்கித் தப்பியோடத் தொடங்கியுள்ளனர். சிறிலங்கா காவல்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. ஆவா குழுவில் முன்னணியில் இருந்து செயற்பட்ட பலரும், யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள கைதுகள் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரின் நடவடிக்கைகளால், தெற்கிலுள்ள மாகாணங்களுக்கு தப்பிச் சென்றுள்ளனர். […]
மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைப்புக்கு தேர்தல் ஆணையகத் தலைவரும் கடும் ஆட்சேபம்!
மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைப்பதற்காக இரண்டு சட்டமூலங்களைத் திருத்துவதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தேர்தல் ஆணையகத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியிருக்கும் மேலதிக கருத்துகள் வருமாறு:- “நாடாளுமன்றம் எடுக்கும் தீர்மானத்துக்குக் கட்டுப்படவேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையகத்துக்கு உள்ளது. எனினும், ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு விரோதமாக தேர்தல்களை ஒத்திவைப்பதற்காக ஓரிரு சட்டமூலங்களைத் திருத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. உரிய காலத்தில் தேர்தல்களை நடத்தி மக்களின் ஆணைக்கு […]
வடக்கு அமைச்சர் நியமனத்தில் புவிசார் அரசியல் தலையீடு!
வடக்கு மாகாண அமைச்சரவை விடயத்தில் அயல்நாட்டுத் தூதரகம் ஒன்று மூக்கை நுழைத்துள்ளது என அறியமுடிகின்றது. கட்சி ஒன்றினால் மாகாண அமைச்சர் பதவிக்குப் பெயரிடப்பட்ட ஒருவருக்கு அந்தப் பதவியைக் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தைக் கையாளும் தலைவரின் தனிப்பட்ட செயலாளரிடமே ஒரு ஆலோசனைப் பாணியில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது என்று தெரிகின்றது. தமது எதிரி நாடு ஒன்றின் உளவாளியாக குறித்த உறுப்பினர் இருக்கின்றார் எனச் சந்தேகிப்பதன் காரணத்தாலேயே […]





