முக்கிய செய்திகள்

Head News

மைத்திரி – டிரம்ப் அடுத்த மாதம் நேரில் பேச்சு!

  ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பையும் மைத்திரிபால சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐ.நாவின் தலைமையகத்தில் அடுத்த மாதம் 12ஆம் திகதிமுதல் 25ஆம் திகதிவரை 72ஆவது பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதன் நிமிர்த்தம் அடுத்த மாதம் 19ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால […]

கொலைகள் ஊடாக ஆட்சியைத் தொடர அரசு திட்டம்! – இப்படிக் குற்றஞ்சாட்டுகின்றது மஹிந்த தரப்பு

“கொலைகள் செய்தாவது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்கிற நிலைப்பாட்டுக்கு இந்த அரசு வந்துள்ளது” என்று மஹிந்த அணி எம்.பி. ரோஹித அபயகுணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “இந்த அரசு இரண்டு வருடங்களை வீணாகக் கழித்துவிட்டது. மீதி வருடங்களையாவது நல்லமுறையில் கழிக்கும் என்று நாம் எதிர்பார்த்தோம். அமைச்சரவை மாற்றம் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டுவரும்.அந்த மாற்றத்தோடு நல்ல நிலைமை ஏற்படும் என்று நாம் எதிர்பார்த்தோம். ஆனால், அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை […]

செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிப்பு

செஞ்சோலைப் படுகொலையின் 11 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப்புலிகளால் முல்லைத்தீவு – வள்ளிபுனத்தில் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்ட செஞ்சோலையில், கடந்த 2006 ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதியில் இருந்து 20 ஆம் திகதி வரை ஜி.சீ.ஈ. உயர்தர மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி நடைபெற்றது. இதில் முல்லைத்தீவு, துணுக்காய் மற் றும் கிளிநொச்சி கல்வி வலயங்களைச் சேர்ந்த 400 வரையான […]

ராஜபக்ஷர்களுக்கு எதிரான விசாரணைகள் துரிதகதியில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அவர் உட்பட அவரின் குடும்பம் மற்றும் ஆட்சியின் பங்குதாரர்களால் மேற்கொள்ளப்பட்ட ஊழல்மோசடிகளை அரசு துரித கதியில் முன்னெடுக்க சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அரசின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது. நல்லாட்சி அரசு அமைய பெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை முன்னாள் அரசின் காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகளில் ஒன்ரேனும் முற்றுப்பறவில்லை. ஐ.தே.கவின் உறுப்பினர்கள் […]

நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவளிக்காது சுதந்திரக் கட்சி : திட்டவட்டமாக எதிர்போம்

நீதி அமைச்சர் விஜேதாஸவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதற்கு ஆதரவளிக்காது என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் மீன்வள அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அமைச்சர்களான விஜேதாஸ ராஜபக்ஷவுக்கோ அல்லது பைஸர் முஸ்தப்பாவுக்கோ எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எவர் கொண்டுவந்தாலும் அதற்கு நாங்கள் ஆதரவளிக்க […]

நம்பிக்கையை சிதறடிக்கும் சி.வி: சத்தியலிங்கம் குற்றச்சாட்டு

எந்த நம்பிக்கையுடன் வடக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டதோ அந்த நம்பிக்கையை சிதறடிக்கும் வகையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் செயற்படுகின்றார் என வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். வவுனியா சேமமடு கிராமத்தில் இன்று (திங்கட்கிழமை) கிராமிய வைத்தியசாலைக்கான அடிக்கல் நட்டும் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்களுடைய மாகாணத்தில் புதியவர்கள் அரசியலுக்கு வருவதும் ஊரில் இருந்து ஒருவர் அரசியலுக்கு […]

தீர்க்கமான முடிவை நோக்கி ஐ.தே.க!

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் அண்மைய காலமாக பல்வேறு முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ள நிலையில், இன்னும் மூன்று தினங்களில் கூடவுள்ள கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவுள்ளதாக கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் மத்திய செயற்குழு, எதிர்வரும் 17ஆம் திகதி கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடவுள்ளது. அன்றைய தினம் முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதால், கட்சியின் சகல உறுப்பினர்களுக்கும் பிரதமர் ரணில் அழைப்பு விடுத்துள்ளார். […]

ஈழத்தின் முதல் பெண் விமானி நாடாளுமன்றிற்கு வருகை!

  ஈழத்தின் முதல் தமிழ் பெண் விமானியான அர்ச்சனா செல்லத்துரை, இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றிற்கு வருகை தந்தார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கூடியது. இதன் போது நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த அர்ச்சனா செல்லத்துரை, சபை நடவடிக்கைககளை பார்வையிட்டார். இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். யாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் […]

புதிய வெளிவிவகார அமைச்சர் யார்? ஐ.தே.க., சு.க இடையே வாக்குவாதம்

புதிய வெளிவிவகார அமைச்சர் குறித்து அரசுக்கு கடும் வாக்குவாதம் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிவிவகார அமைச்சராக இருந்து ரவி கருணாநாயக்க நேற்று தனது பதவியை இராஜனாமா செய்ததையடுத்து குறித்த அமைச்சு பதவியை வெற்றிடமாகியுள்ளது. யாருக்கு அந்த பதவியை வழங்குவது என்று பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றும் அரசால் இறுதி முடிவொன்றை எடுக்க முடியாதுள்ளது. திலக் மாரப்பன தற்காலி வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டாளும் தற்போது அந்த நிலைப்பாடு கைவிடப்படுள்ளது. முன்னதாக அமைச்சர்களான […]

மத்தல விமான நிலையம் 40 ஆண்டுகள் இந்தியா வசமாகிறது

மத்தல அனைத்துலக விமான நிலையத்தை இந்திய நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அமைச்சரவையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்திய நிறுவனம் ஒன்றுக்கு மத்தல விமான நிலையத்தை 40 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கும் வகையில் இந்த அமைச்சரவைப் பத்திரம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார். சீனாவின் நிதியுதவியில் கட்டப்பட்ட மத்தல விமான நிலையத்தை, இந்திய நிறுவனத்தின் உதவியுடன் […]