கேரளா மாநிலம் கொல்லத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த முருகனின் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 லட்சம் ரூபாய் வழங்கினார். தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருச்சியில் திட்ட மேலாண்மை அலகு அலுவலகத்திற்காக 5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடத்தையும் முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். கேரளா மாநிலம் கொல்லத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த முருகனின் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 லட்சம் […]
முக்கிய செய்திகள்
Head News
சின்னம்மா சொல்லுறவுங்களுக்குதான் என் ஓட்டு
குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பது குறித்து ஆளும் அதிமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளிடையே குழப்பம் நிலவி வருகிறது. இந்த நிலையில் அதிமுகவின் கூட்டணிக் கட்சியான முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் நடிகர் கருணாஸ், அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து தினகரனிடம் எதுவும் பேசவில்லை. அவர் சிறையிலிருந்து வந்த பிறகு நான் […]
மோடி படத்தை வெளியிட்டால் பரிசு: நடிகை ரம்யா
வெள்ளம் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிடுவது போலப் படத்தை வெளியிட்டால் அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசு என காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவு தலைவியும் நடிகையுமான ரம்யா கிண்டலடித்துள்ளார். குஜராத், பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று மழையால் பாதித்த பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிடுவது போல உள்ள படம் இருந்தால், அதனை சமூக வலைதளங்களில் வெளியிடலாம் என்று அவர் கூறியுள்ளார். வடமாநிலங்களில் வெள்ள பாதிப்புகளை […]
20ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு எதிராக உயர் நீதிமன்றம் செல்ல பொது எதிரணி தீர்மானம்
20ஆவது அரசமைப்பு சட்டமூலத்தைத் திருத்துவதன் மூலம் அரசு மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைக்க முயன்றால் அதற்கு எதிராக தாங்கள் உயர்நீதிமன்றம் செல்லத் தீர்மானித்திருப்பதாக பொது எதிரணியின் உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் தெரிவித்துள்ள ஏனைய விளக்கங்கள் வருமாறு, 20ஆவது அரசமைப்பைத் திருத்துவதற்கு சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும். அதற்கு மேலதிகமாக நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் தேவை. இந்தத் திருத்தத்துக்கான வர்த்தமானி அறிவித்தலை […]
பிரதமரின் தேவைக்கு அமையவே தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது: ராஜித
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தேவைக்கு அமையவே தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். 100 நாள் வேலைத்திட்டம் மற்றும் தேசிய அரசாங்கம் ஆகிய வேலைத்திட்டங்கள் அரசியல் இலாபம் கருதிய வேலைத்திட்டங்கள் அல்ல. நாட்டின் முக்கிய பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் மிகவும் சிரமப்பட்டு உருவாக்கிய வேலைத்திட்டம். […]
சர்வதேச வல்லாதிக்க நாடுகளின் யுத்தக்களமாக மாறும் இலங்கை! – நல்லாட்சி அரசு மீது சீறிப் பாய்கிறார் குணதாஸ
நாட்டின் பொது வளங்களை சர்வதேசத்துக்கு தாரைவார்த்துக் கொடுத்து உலகின் பலமிக்க நாடுகளின் போர்க்களமாக இலங்கையை மாற்றுவதற்கே நல்லாட்சி அரசு முனைவதாக தேசிய அமைப்புகளின் சம்மேளனத் தலைவரும் மஹிந்தவின் விசுவாசியுமான குணதாஸ அமரசேகர தெரிவித்தார். கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நல்லாட்சி என்று பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு விதைத்த தற்போதைய அரசு நாட்டின் பொது வளங்களையும், அரச […]
மஹிந்த ஆட்சிக்கால திருடர்களை விஜயதாஸவே பாதுகாத்து வந்தார்! – நளின் பண்டார
மஹிந்த ஆட்சிக்கால திருடர்களை நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவே பாதுகாத்து வந்தார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நல்லாட்சி அரசு ஈராண்டுகளைக் கடந்துள்ள நிலையில் முக்கிய சில இலக்குகளை அடைந்துள்ளது. எனினும், திருடர்களைப் பிடிக்க முடியாமல் போனதே பாரியதொரு தவறாக இருக்கின்றது. கடந்த ஆட்சிக்கால திருடர்களை ஜனாதிபதியா […]
இன்றும் சு.கவுக்கு நானே தலைவர்! – மார்தட்டுகிறார் மஹிந்த
இன்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் தானே எனவும், தன்னை அந்தப் பதவியிலிருந்து எவரும் விலக்கவும் இல்லை எனவும், தான் விலகவும் இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தன்னை சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டதால் அந்தப் பதவி தனக்கே உரித்தாகிறது என வேறொருவர் கூறுவது வேடிக்கையாக இருக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:- “என்னையும் எனது குடும்பத்தினரையும் பழிவாங்குவதற்காக பல்வேறு பொய் […]
20ஆவது திருத்தத்திற்கு எதிராக போர்கொடி உயர்த்தும் இ.தொ.கா.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள உள்ளூராட்சிமன்றத் திருத்தச் சட்டமூலத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் யோசனைகள் புறக்கணிக்கப்பட்டால், அதற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக கட்சியின் தலைவர் முத்துசிவலிங்கம் தெரிவித்தார். சௌமிய பவனில் நடைபெற்ற தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். புதிய எல்லை மீள் நிர்ணயம் எந்தவகையிலும் மலையக மக்களின் அரசியல் ரீதியிலான உரிமைகளை பாதுகாப்பதாக தெரியவில்லை. தற்போதைய விகிதாசாரத் தேர்தல் முறையில் இருக்கும் சில அனுகூலங்கள் புதிய கலப்புத் […]
காலத்தை இழுத்தடிக்காமல் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்! – மைத்திரியிடம் நேரில் சம்பந்தன் இடித்துரைப்ப
“புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட இடைக்கால வரைபின் அறிக்கை இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே, காலத்தை இழுத்தடிக்காமல் ஜனாதிபதித் தேர்தலின்போது நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உடன் நிறைவேற்றுங்கள்.” – இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் இடித்துரைத்தார் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். கொழும்பில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு நடைபெற்ற முக்கிய […]





