பெண்ணை பாலியல் தொந்தரவு செய்து பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரபல படத்தயாரிப்பாளர் கரீம் மொரானி, போலீசிடம் சரண்டர் ஆனார். திருமணம் செய்வதாக கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கடந்த ஜனவரி மாதம் ஹயத்நகர் போலீஸ் நிலையத்தில், சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளரான கரீம் மொரானி மீது பெண் ஒருவர் புகார் அளித்து இருந்தார். 2015 ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடைபெற்றதாக பெண் குற்றம் சாட்டியிருந்தார். […]
முக்கிய செய்திகள்
Head News
நடிகர் கமல் கட்சி தொடங்கி அழைப்பு விடுத்தாலும் இணையமாட்டேன்- நடிகை குஷ்பு
தமிழக அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பில் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கம் மூலமாக பல்வேறு அதிரடி அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக ஆளும் அதிமுக மீது அவர் கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே வருகிறார். இதனால் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்குவார் என்றும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. காங். செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு டெல்லியில் தந்தி டிவிக்கு […]
ஐ.நா. ஆணையரின் கருத்துக்கு மூன்று வாரங்களில் பதிலடியாம்! – அரசின் கருத்து இது
“இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட கருத்துகள் தொடர்பில் அரசின் சார்பில் இன்னும் மூன்று வாரங்களில் பதிலளிக்கப்படும்” என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று தினேஷ் குணவர்தன எம்.பி. எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த விவகாரம் தொடர்பில் பதிலளிப்பதற்கு மூன்று வாரங்கள் தேவைப்படுகின்றன. இவ்வாறு காலம் எடுத்துக்கொள்வதால் நாட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை” – […]
இலங்கையை அச்சுறுத்துகிறார் ஐ.நா. ஆணையாளர்!
“இலங்கையின் உள்விவகாரங்களில் நேரடியாகத் தலையிட்டு நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயற்பட்டுவருகின்றார்” என்று மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குற்றஞ்சாட்டினார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 36ஆவது கூட்டத்தொடர் கடந்த 11ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகியது. இதன்போது ஆரம்ப உரையை நிகழ்த்திய மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல்ஹுசைன், பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அசமந்தமாகச் செயற்பட்டுவருவதாகவும், இந்நிலைமை […]
மீண்டும் வறட்சி ஏற்படலாம்! நிபுணர்கள் எச்சரிக்கை!! – ஜனாதிபதி, பிரதமருக்கு அறிக்கை சமர்ப்பிப்பு
கடந்த சில தினங்களாக நாட்டில் சில பகுதிகளிலும் பெய்துவந்த மழை படிப்படியாகக் குறைந்து வருவதால் மீண்டும் வறட்சியான காலநிலையொன்று ஏற்படலாம் என வானிலை ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர். இலங்கை வானிலை அவதானத் திணைக்களத்தின் நிபுணர்கள் இது தொடர்பில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அறிக்கையொன்றை சமர்ப்பித்திருப்பதாக பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் நாட்டின் பல பகுதிகள் விசேடமாக வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் வறட்சி ஏற்படலாம் […]
சைட்டம் பற்றிய அறிக்கை ஜனாதிபதிக்கு சமர்ப்பிப்பு!
சைட்டம் பிரச்சினை பற்றி ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை அவரிடம் சமர்ப்பித்திருப்பதாக அக் குழுவின் தலைவரும் பிரதி அமைச்சருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ள மேலதிக விவரங்களாவன:- “ஜனாதிபதி எங்களுக்கு வழங்கியிருந்த கால எல்லைக்குள் அறிக்கையை அவருக்கு சமர்ப்பித்து விட்டோம். எனவே, இந்த அறிக்கை இன்னும் முடியவில்லை என இலங்கை அரச மருத்துவ சங்கம் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டில் உண்மையில்லை . […]
முக்கிய தீர்மானங்கள் எடுப்பதற்காக அம்பாறையில் 23இல் கூடுகின்றது தமிழரசுக் கட்சியின் மத்திய குழு!
புதிய அரசமைப்பை உருவாக்கும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை, வடக்கு மாகாண அமைச்சரவை விவகாரம் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுப்பதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை அம்பாறையில் நடைபெறவுள்ளது. தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன், […]
‘பட்ஜட்’ மீதான தாக்குதலுக்கு தயாராகின்றது மஹிந்த அணி! – பந்துல தலைமையில் விசேட அணி களமிறக்கம்
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதற்கு எதிராகப் பிரசாரப்போரை முன்னெடுப்பதற்கு மஹிந்த அணியான பொது எதிரணி தீர்மானித்துள்ளது. இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், அதில் பொருளாதாரத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர். தேசிய அரசின் பட்ஜட் நவம்பர் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அது மீது டிசம்பர் 9ஆம் திகதி இறுதி […]
பாரதப் படைகளுக்கு எதிராக பட்டினிப் போராட்டம் நடத்தி பார்போற்ற சரித்திரம் படைத்த பார்த்தீபனின் நினைவேந்தல்! – உலகெங்கும் உணர்வெழுச்சியுடன் இன்று ஆரம்பம்
இந்திய ஆக்கிரமிப்புப் படையினருக்கு எதிராக 12 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வீரச்சாவடைந்த தியாக தீபம் திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரம் இன்று தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகின்றது. இராசையா பார்த்தீபன் என்ற இயற்பெயர் கொண்ட திலீபன் பாரதப் படைகளுக்கு எதிரான பட்டினிப் போராட்டத்தை 1987ஆம் ஆண்டு நடத்தினார். செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி ஆரம்பமான உண்ணாவிரதப் […]
ஐ.நா. தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கைக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுப்பது எவ்வாறு? – பிரிட்டன் தூதுவருடன் சம்பந்தன் பேச்சு
இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஜேம்ஸ் டோரிஸுக்கும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்குமிடையில் நேற்று முக்கிய சந்திப்பு நடைபெற்றது. கொழும்பிலுள்ள பிரிட்டன் தூதுவர் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இரா.சம்பந்தனுடன் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பியும் கலந்துகொண்டார். இந்தச் சந்திப்பு தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவிக்கையில், “ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் […]





