முல்லைத்தீவு, இரட்டைவாய்க்காலில் இன்று மாலை வெடிபொருள்கள் வெடித்ததால் மக்கள் மத்தியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது. இனந்தெரியாதவர்களால் மூட்டப்பட்ட தீயால் போரில் கைவிடப்பட்டிருந்த வெடிபொருள்கள் வெடித்தன என்று கூறப்படுகின்றது. புதுமாத்தளன், ஆனந்தபுரம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் பிரதேசங்களில் இறுதிப்போரில் கைவிடப்பட்ட ஆயுதங்கள் இன்னமும் மீட்கப்படாது காணப்படுகின்றன என்று மக்கள் சுட்டிக்காட்டினர்.
முக்கிய செய்திகள்
Head News
இலங்கையின் இயற்கை அழிவிற்கு காரணம் இதுவா.?
இலங்கையின் அண்மைக்கால அழிவுகளுக்கு எமது நாட்டின் காபன் துகள்கள் அதிகரித்த தரம் குறைந்த எரிபொருட்களே காரணமாகும். நிலக்கரி, மசகு எண்ணெய் என்பவற்றின் பாவனையே சூழலை பாதித்துள்ளதாக பாரிய நகர் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், உலகம் இன்று மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றது. சூழலியல் பிரச்சினை காரணமாக உலகில் பல்வேறு நாடுகளில் […]
கருத்து கணிப்பு 2017
[poll id=”3″]
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது இது தொடர்பாக சென்னை வானிலை மையம் இயக்குநர் பாலசந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நேற்று தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது இது மசூலிபட்டினத்திற்கு தென்கிழக்கே 1160 […]
ஆர்கே நகரில் விஷால் போட்டியிடுவது அதிமுகவுக்கு..
[poll id=”2″]
விஷால் வேட்புமனு மீண்டும் நிராகரிப்பு!
நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற செய்தி வெளிவந்ததில் இருந்தே ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் கதிகலங்கியது. எப்படியாவது விஷாலை போட்டியில் இருந்து விலக்கி விட வேண்டும் என்பதில் இருகட்சிகளும் ஒன்றிணைந்தது. விஷாலின் வேட்புமனு நேற்று பரிசீலனைக்கு வந்தபோது திமுகவும், அதிமுகவும் இணைந்து எதிர்ப்பு தெரிவித்ததில் இருந்தே இரு கட்சிகளின் சுயரூபம் தெரிய ஆரம்பித்தது. இந்த நிலையில் முதலில் விஷாலின் வேட்புமனுவை நிராகரித்ததாக கூறிய தேர்தல் அதிகாரி பின்னர் அவரது […]
3 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்
கடந்தவாரம் தென் தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளை தாக்கிய ஒகி புயல் தற்போது குஜராத் மாநிலத்தை நோக்கி திரும்பி உள்ளது. அந்த புயல் வலுவிழந்து நள்ளிரவிலோ அல்லது இன்று(புதன்கிழமை) காலையிலோ சூரத் அருகே கரையை கடக்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. ஒகி புயல் குஜராத்தை தாக்கும் என்பதால் குஜராத், மராட்டிய மாநில மீனவர்கள் 6-ந்தேதி(இன்று) முதல் 8-ந்தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்கச் […]
பிரிட்டன் பிரதமர் தெரசா மேயை கொல்ல நடந்த முயற்சி முறியடிப்பு
இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருப்பவர் தெரசா மே. இவரை கொல்வதற்காக டவுனிங் தெருவில் அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை வெடிக்க செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுபற்றி போலீசார் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த நவம்பர் 28ந்தேதி தீவிரவாத ஒழிப்பு படையினர் 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் வடக்கு லண்டனை சேர்ந்த ஜகரியா ரெஹ்மான் (வயது 20) மற்றும் தென்கிழக்கு பிர்மிங்காம் நகரை சேர்ந்த […]
சட்டவிரோதமான முறையில் காடுகள் அழிப்பு
கிளிநொச்சி – அக்கராயன் காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நீண்ட பொருங்காட்டு பகுதிக்குள் நுழையும் அடையாளம் தெரியாத கும்பலொன்று அப்பகுதியில் உள்ள பாலை, முதிரை உள்ளிட்ட பெறுமதியான மரங்களை அழித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த காட்டு பகுதியிலுள்ள பெரிய மரங்களில் மர்மக்குறியீடுகள் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகின்றது. அத்தோடு குறித்த அடையாளம் தெரியாத கும்பல் அந்த காட்டுப் பகுதியிலயே தங்கி இருக்கும் […]
கடற்படையினர் கைது செய்த 25 மீனவர்களை மன்னார் நீதவான் விடுதலை செய்தார்.
மன்னார் தாழ்வுபாட்டு கடலில் நேற்று காலை மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் சுமார் 25 மீனவர்களை கடற்படையினர் கைது செய்திருந்த நிலையில், குறித்த மீனவர்கள் இன்று மதியம் மன்னார் நீதிமன்றில் ஆஜராகிய போது குறித்த மீனவர்களை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா விடுதலை செய்தார். மன்னார் தாழ்வுபாட்டு கிராம மீனவர்கள் நேற்று காலை வழமை போல் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். குறித்த மீனவர்கள் தமது பாரம்பரிய தொழிலாக கடந்த 30 […]





