முக்கிய செய்திகள்

Head News

தினகரன் சுயேட்சை அல்ல சுயம்பு

அதிமுகவின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். சென்னை ஆர்.கே.நகரில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட 40,707 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இது, எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் தரப்பினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதேபோல் இந்த தோல்வியை அடுத்து, நிர்வாகிகளின் ஆதரவும், மக்களின் ஆதரவும் தங்கள் பக்கம் இருப்பதாக தினகரன் தரப்பு கூறி வருகிறது. மேலும், எடப்பாடி […]

ஆர்.கே.நகர் தேர்தலில் பாஜக வை மிஞ்சிய நோட்டா

குஜராத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு பாஜக வேட்பாளரை விட 19,500 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஜிக்னேஷ் மேவானி, ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வியடைந்தது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கிண்டல் பதிவு செய்துள்ளார். சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜன் வெறும் 1,417 வாக்குகள் மட்டுமே பெற்றார். இந்த படுதோல்வியை சமூக வலைதளங்களில் பலர் கிண்டலடித்துவருகின்றனர். அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் சி.ஆர் சரஸ்வதி நோட்டாவிடம் […]

எங்களை கட்சியில் நீக்குவதற்கு யாருக்கும் உரிமை இல்லை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததை அடுத்து நேற்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் தினகரனுக்கு ஆதரவாக உள்ள தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், ரங்கசாமி, பார்த்திபன், முத்தையா, வி.பி.கலைராஜன், ஆகியோரை நீக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், ரங்கசாமி, பார்த்திபன் அகியோர் மாவட்ட செயலாளர்கள் பதிவியில் இருந்து நீக்கப்பட்டனர். முத்தையா, […]

தினகரன் ஆதரவாளர் வீட்டின் மீது தாக்குதல்!

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். இதனால் அதிமுக கூடாரமே ஆடிப்போய் இருக்கிறது. இந்நிலையில் கோவையில் தினகரன் ஆதரவாளர் வீட்டின் மீது தாக்குதல் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் நடந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் இமாலய வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பழனிசாமி தலைமையிலான மனுசூதனன் தோல்வி அடைந்தார். அதிமுக அணியில் இருக்கும் சிலர் தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்து […]

அரசியலுக்கு வருவது பற்றி அப்புறம் சொல்றேன்

தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து வருகிற 31ம் தேதி அறிவிப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கோடம்பாக்கத்தில் உள்ள அவரது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு தனது ரசிகர்களை சந்திக்க உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் முதல்கட்டமாக கடந்த மே மாதம் 15-ஆம் தேதி தொடங்கி ஒரு வார காலம் வரை தனது ரசிகர்களை சந்தித்தார். மாவட்ட வாரியாக நடைபெற்ற இந்தச் சந்திப்பின் […]

இன்றைய ராசிபலன் 26.12.2017

மேஷம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் வரக்கூடும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். ரிஷபம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சில வற்றை விட்டுக் கொடுப்பீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோ […]

போதைப்­பொ­ருள் மைய­மாக மாறி­விட்­டது இலங்கை!

போதைப்­பொ­ருள் மைய­மாக இலங்கை மாற்­ற­ம­டைந்­துள்­ள­தாக முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச குற்­றஞ் சுமத்­தி­யுள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, அன்று தேயிலை கைத்­தொ­ழில் துறை­யில் உலகப் பிர­சித்தி பெற்­றி­ருந்த இலங்கை இன்று போதைப்­பொ­ருள் வர்த்­த­கத்­தின் ஊடாக உலகப் பிர­சித்தி பெற்­றுக்­கொண்­டுள்­ளது. தற்­பொ­ழுது இலங்­கை­யில் போதைப்­பொ­ருள் பயன்­பாடு அதி­க­ரித்­துள்­ளது. போதைப்­பொ­ருள் விநி­யோ­கம் செய்­யும் கேந்­திர நிலை­ய­மாக இலங்கை மாற்­ற­ம­டைந்­துள்­ளது. சதொச நிறு­வ­னத்துக்குச் சொந்­த­மான லொறி­க­ளி­லும் போதைப்­பொ­ருள் விநி­யோ­கம் செய்­யப்­ப­டு­கின்­றது. கொள்­க­லன்­க­ளில், லொறி­க­ளில் போதைப்­பொ­ருட்­கள் […]

ஜனாதிபதி

எல்லோா் மீதும் காட்டும் இரக்கமும், கருணையும் வெற்றியைத் தரும்!

மனித நேயத்தை முன்னிலைப்படுத்திய உலக பண்டிகையான நத்தார் கொண்டாட்டங்களுடன் இணைந்து, நம் நாட்டின் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு எனது நத்தார் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தெய்வீகத் தன்மையும் மனிதாபிமானமும் சந்தித்துக் கொள்ளும் ஒரு அபூர்வ நிகழ்வாக அன்று முதல் இன்று வரை நத்தார் பண்டிகை மானிட வரலாற்றில் முக்கிய பங்கினை வகித்து வருகின்றது என்றும் அவர் […]

கிறிஸ்துமஸ் பிராத்தனைக்கு சென்ற 20 பேர் பேருந்து விபத்தில் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டின் ஆகோ நகரில் பேருந்து விபத்துக்குள்ளானதில் கிறிஸ்துமஸ் பிராத்தனைக்கு சென்ற 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ஆகோ நகரைச் சேர்ந்த சிலர் மனோவோக் நகரிலுள்ள தேவாலயத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் சிறப்பு பிராத்தனையில் கலந்து கொள்வதற்காக பேருந்தில் புறப்பட்டுச் சென்றனர். புறப்பட்டு சில மணிதுழியில் எதிரே வந்த மற்றொரு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த […]

முதல்வருக்கு பாராட்டுகள்

தினகரன் ஒரு மாயமான் – ஓபிஎஸ்

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தினகரன் ஒரு மாயமான் என்று கூறியுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட மதுசூதனன் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தினகரன் ஆதரவு மாவட்ட […]