முக்கிய செய்திகள்

Head News

அரியாலை இளைஞர் கொலை – சந்தேகநபர்களின் மறியல் நீடிப்பு!!

அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேக நபர்களான சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இருவரின் விளக்கமறியல் எதிவரும் ஜனவரி 9ஆம் திகதிவரை இன்று நீடிக்கப்பட்டது. கடந்த ஒக்ரோபர் மாதம் 22ஆம் திகதி அரியாலை கிழக்கு மணியம்தோட்டம் வசந்தபுரம் முதலாம் குறுக்கு வீதிப் பகுதியில் 24 வயதுடைய டொன் பொஸ்கோ டினேசன் என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். இளைஞர் மீது மேற்கொள்ளப்பட்ட […]

நாட்­டில் கடும் நிதி நெருக்­கடி சபையை உடன் கூட்­டுங்­கள்

நாட்­டில் ஏற்­பட்­டுள்ள கடு­மை­யான நிதி நெருக்­க­டிக்­குத் தீர்­வு­காண நாடா­ளு­மன்­றத்தை உட­ன­டி­யா­கக் கூட்­டு­மாறு சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரி­ய­வி­டம் மகிந்த அணி­யான கூட்டு எதி­ரணி கோரிக்கை விடுத்­துள்­ளது. நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பந்­துல குண­வர்­த­னவே சபா­நா­ய­க­ரி­டம் இவ்­வாறு கோரிக்கை விடுத்­துள்­ளார். கடந்த வாரம் முதல் நாட்­டில் கடு­மை­யான நிதி­நெ­ருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது. நிதி மூல­தன சந்­தை­யும் வீழ்ச்­சியை நோக்கி நகர்ந்து செல்­கி­றது. அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­வுக்கு வழங்­கி­ய­தால் பெற்­றுக்­கொண்ட 292 மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர்­கள் இன்­ன­மும் […]

ஆரவ்வை அலறவைத்த ஹரிஷ் கல்யாண்! என்ன நடந்தது தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் ஆரவ் மற்றும் ஹரிஷ். இதில் ஆரவ் போட்டியில் வென்று டைட்டிலை கைப்பற்றினார். அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களானார்கள். நிகழ்ச்சிக்கு பிறகு பல நேர்காணல்கள், பார்ட்டிகள், ட்ரீட்கள் என கொண்டாட்டம். அடிக்கடி எல்லோரும் சந்தித்துக்கொள்வார்கள். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஹரிஷ்க்கு ஒரு டாஸ்க் கொடுத்தார்கள். ஆரவ்க்கு போன் கால் செய்து பிராங்க் செய்ய வேண்டும் என்பது தான். ஹரிஷ் போன் செய்து கார் […]

பெரிய பாண்டியனை சுட்டது முனிசேகர்தான்

சென்னை கொளத்தூரை சேர்ந்த காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனை, அவருடன் சென்ற முனிசேகர் தவறுதலாக சுட்டது உறுதியாகியுள்ளது. சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற சென்னை காவல்துறை ஆணையாளர் பெரியபாண்டி சுட்டு கொல்லப்பட்டப்பட்டார். அவருடன் சென்ற முனிசேகர் காயமைடந்தார். தினேஷ் சவுத்ரி, நாதுராம் ஆகிய கொள்ளையர்களும் பெரிய பாண்டியை சுட்டுக் கொன்று விட்டு தப்பி விட்டதாக முதலில் செய்திகள் வெளியானது. ஆனால், பெரிய பாண்டியனுடன் சென்ற […]

இன்றைய ராசிபலன் 27.12.2017

மேஷம்: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தாழ்வுமனப் பான்மை வரக்கூடும். வழக்கில் நிதானம் அவசியம். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோ கத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து விலகும். இரவு 8.39 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் போராடி வெல்லும் நாள். ரிஷபம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். மனைவிவழியில் ஆதரவு கிட்டும். […]

அதிமுக கூட்டத்தில் பங்கேற்காத 5 அமைச்சர்கள்

அதிமுக நடத்திய கூட்டத்தில் 5 அமைச்சர்கள் பங்கேற்காத விவகாரம் அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆர்.கே.நகரில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட 40,707 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இது, எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் தரப்பினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதேபோல், இந்த தோல்வியை அடுத்து, நிர்வாகிகளின் ஆதரவும், மக்களின் ஆதரவும் தங்கள் பக்கம் இருப்பதாக தினகரன் தரப்பு கூறி வருகிறது. மேலும், […]

ஓரை அறிந்து நடந்தால் வெற்றி கிடைக்கும்; சித்தர்கள் கூறுவதென்ன…!

ஓரை அறிந்து நடப்பவனை யாரும் ஜெயிக்க முடியாது என்பது சித்தர்கள் வாக்கு. ஒன்பது கிரகங்களில் ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரை உண்டு. ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஓரை கிடையாது. பூமத்திய ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை நமது முன்னோர்கள் எப்படி உருவாக்கினார்களோ அதேபோல்தான் ஓரைகளும் உருவாக்கப்பட்டன. சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள், தொலைவில் இருக்கக் கூடிய […]

ஆர்.கே.நகர் தேர்தல் : எங்கே நடந்தது தவறு?

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 24,651 வாக்குகள் மட்டுமே வாங்கி டெபாசிட் இழந்து தோல்வியை சந்தித்தது திமுகவின் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் அதிமுகவில் பலமான ஒற்றைத் தலைமை இல்லை. எடப்பாடி – ஓபிஎஸ்- தினகரன் என மூன்று தலைமைகளாக அதிமுக பிரிந்தது. அதன்பின் எடப்பாடி – ஓபிஎஸ் அணி ஒன்றாக சேர்ந்தது. ஆனால், தினகரன் தனி அணியாக பிரிந்தார். இந்த நிலையில்தான் ஆர்.கே.நகர் […]

இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் பலி

கடந்த வாரம் பாகிஸ்தான் நடந்ததிய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தற்பொழுது இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் இறந்துள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது அத்துமீறி இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் சார்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ மேஜர் உள்பட […]

தினகரனுக்கு வாழ்த்து கூறிய அமைச்சர்கள்?

ஆர்.கே.நகரில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரனுக்கு ஆளும் தரப்பு அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் வாழ்த்து கூறியதாகவும், இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சமி அதிர்ச்சியானதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. சென்னை ஆர்.கே.நகரில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட 40,707 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இது, எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் தரப்பினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதேபோல், இந்த தோல்வியை அடுத்து, நிர்வாகிகளின் ஆதரவும், […]