முக்கிய செய்திகள்

Head News

2018 புத்தாண்டுத்தினக்கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள்.சென்னை போலீசார் அதிரடி.

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தன்று சிறப்பான கொண்டாட்டம் நடைபெறும். குறிப்பாக மெரீனா அருகே உள்ள காமராஜர் சாலை, அண்ணா சாலை, பெசண்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் மிக அதிக அளவில் கூட்டம் காணப்படும். இந்த நிலையில் இந்த ஆண்டு சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பல கட்டுப்பாடுகளை சென்னை போலீசார் அறிவித்துள்ளனர். புத்தாண்டு தினத்தில் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க சுமார் 3500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனதாகவும், […]

கருடனை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்

கருடனை வணங்கினால் பகவானை வணங்கிய பலன் கிடைக்கும். கருடனின் நல்ல, அழகான இறக்கைகள் யக்ஞங்கள் என்றும், காயத்ரி மகாமந்திரமே அவனுடைய கண்கள் என்றும், தோத்திர மந்திரங்கள் அவனுடைய தலை என்றும், சாம வேதமே அவனுடைய உடல் என்றும் வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது. கருடனை ஞாயிற்றுக் கிழமைகளில் தரிசனம் செய்தால் நோய்கள் நீங்கும். திங்கட்கிழமை தரிசிக்க சுகங்கள் கிடைக்கும். துன்பங்களும் துயரங்களும் விலகும். செவ்வாய் கிழமையில் தரிசிக்க துணிவையும், மகிழ்ச்சியையும் அளிக்கும். புதன் […]

சசிகலா மௌன விரதம்

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்ற டிடிவி தினகரன் சசிகலாவை சந்தித்து ஆசி பெற பெங்களூர் சிறைக்கு இன்று சென்றார். ஆர்கே நகர் தேர்தலில் வெற்றி பெற்றதின் மூலம் எம்எல்ஏவாக உள்ள டிடிவி தினகரன் தேர்தல் வெற்றிக்கு பின்னர் சசிகலாவை சந்திக்க பெங்களூர் சிறைக்கு இன்று சென்றார். இந்த சந்திப்பின் போது சசிகலா மௌன விரதம் இருந்ததாக தினகரன் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் நினைவு தினத்தில் இருந்து சசிகலா சிறையில் […]

சசிகலாவை சந்திக்காமல் பீலா விட்டாரா தினகரன்?

ஆர்கே நகர் தொகுதியில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் தனது சித்தி சசிகலாவை பெங்களூர் சிறைக்கு சென்று இன்று சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியும் அளித்தார் அவர். தினகரன் தனது பேட்டியில் சசிகலா தன்னிடம் எதுவும் பேசவில்லை எனவும், ஜெயலலிதாவின் நினைவு தினத்துக்கு பின்னர் மௌன விரதம் இருந்து வரும் அவர், நான் கூறியதை மட்டும் கேட்டுவிட்டு சரி என தலையை ஆட்டியதாக கூறினார். ஆனால் சசிகலாவை […]

இன்றைய ராசிபலன் I 28.12.2018 I

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலர் உங்களை விமர்சிப்பார்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். அசுவனி நட்சத்திரக்காரர்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம் ரிஷபம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். விலை உயர்ந்தப் பொருட்களை […]

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக ஆக்கவேண்டும்

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் போர் தொடுத்து, அந்த நாட்டை நான்கு துண்டுகளாக ஆக்கவேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார். இந்திய கடற்படையின் முன்னாள் வீரர் குல்புஷன் ஜாதவை பாகிஸ்தான் அரசு உளவு வேலை பார்த்ததாக இஸ்லாமாபாத் சிறையில் அடைத்துள்ளது. அவரை அவரது தாயும், மனைவியும் கிறித்துமஸ் தினத்தன்று சிறையில் சென்று சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது அவர்களின் தாலி, வளையல்கள் மற்றும் பொட்டையும் சிறை […]

திமுகவை ம.ந.கூட்டணியாக மாற்றிய திருமா

நடந்து முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக தோல்வியடைந்தது மட்டுமல்லாமல் படுதோல்வியடைந்து டெப்பாசிட் தொகையை இழந்தது. திமுகவின் இந்த தோல்வி அரசியல் வட்டாரத்தில் யாரும் எதிர்பார்க்காதது. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகள் என பல கட்சிகள் ஆதரவு தெரிவித்தது. இருந்தாலும் திமுகவால் டெப்பாசிட்டை கூட தக்கவைக்க முடியவில்லை. இந்நிலையில் திருமாவளவன் திமுக கூட்டணியில் இணைந்ததால் அது மக்கள் நல கூட்டணியை போல தோல்வி […]

ரஜினியின் அதிரடி முடிவு?

டிசம்பர் 31-ஆம் தேதி தான் அரசியலில் என்ன முடிவு எடுக்கப்போகிறேன் என்பதை அறிவிக்க உள்ளதாக ரஜினி கூறியதை அடுத்து அவரது ரசிகர்கள் 31-ஆம் தேதியை எதிர்நோக்கியுள்ளனர். இந்த முறை ஏமாற்றாமல் அவர் அரசியல் கட்சி குறித்து அறிவிக்க வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் இந்தமுறையும் அவர்களுக்கு ஏம்மாற்றம் தான் என்கிறது ரஜினி வட்டார தகவல்கள். அரசியல் கட்சி தொடங்குவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல என்பதை இவ்வளவு நான் ஆராய்ந்து […]

சசிகலாவை சந்திக்க எம்எல்ஏவாக செல்லும் தினகரன்!

ஆர்கே நகர் தேர்தலில் வெற்றி பெற்றதின் மூலம் எம்எல்ஏவாக உள்ள டிடிவி தினகரன் தேர்தல் வெற்றிக்கு பின்னர் சசிகலாவை சந்திக்க செல்லவில்லை. காரணம் சசிகலாவை தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறை தான் சந்திக்க சிறைத்துறை அனுமதிக்கிறது. இதனையடுத்து தினகரன் வரும் 29-ஆம் தேதி பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது தினகரன் சட்டசபையில் எப்படி செயலாற்ற வேண்டும், எடப்பாடி, ஓபிஎஸ் அணியினரை […]

மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை திமுக தேறாது – மீண்டும் மு.க. அழகிரி

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மதுசூதனன் 24,651 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததோடு டெபாசிட் இழந்துள்ளார். பிரதான எதிர்கட்சியான திமுக தோல்வி அடைந்தது திமுகவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுபற்றி தொலைக்காட்சி ஒன்றில் கருத்து முன்னாள் மத்திய அமைச்சர் தெரிவித்த அழகிரி “செயல் தலைவராக ஸ்டாலின் உள்ளவரை திமுக தேறாது. வேனில் சுற்றி வந்து பேசினால் மட்டும் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள். களப்பணி ஆற்ற […]