புதுடில்லி: ”தேவை இல்லாத விஷயங்களை பேச வேண்டாம்,” என, பா.ஜ.,வை சேர்ந்த சர்ச்சைக்குரிய தலைவர்களுக்கு, பிரதமர், நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். சர்ச்சையாக பேசுவதால், ஊடகங்களுக்கு தேவை யான, மசாலாக்களை நாம் அள்ளித் தருகிறோம். சிறந்த சமூக விஞ்ஞானிகள்,நிபுணர்களாக நினைத்து, கேமராக்கள் முன், நீங்கள் பேசும் வார்த்தைகள், கடும் விமர்சனத்துக்கு ஆளாகின்றன. இதனால், கட்சியின் புகழுக்கு பாதிப்புஏற்படுகிறது. இத்தகைய பேச்சுக்களை, பா.ஜ., – எம்.பி.,க்கள், தலைவர்கள் தவிர்க்க வேண்டும். ஊடகங்களில், அங்கீகாரம் […]
அரசியல்
அரசியல்
சீன மாணவர்கள் இந்தியும் இந்திய மாணவர்கள் மாண்டரின் மொழியையும் கற்றுக்கொள்வது அவசியம் – சுஷ்மா சுவராஜ்
‘ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு’ நாடுகளின் மாநாடு சீனாவின் குயிங்டோ நகரில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை மந்திரிகள் பங்கேற்கும் மாநாடு பீஜிங்கில் நடைபெற உள்ளது. இதில், கலந்து கொள்வதற்காக வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் 4 நாள் பயணமாக சீனா சென்றுள்ளார். இந்தநிலையில்,பீஜிங்கில் நடைபெற்ற இந்திய சீனாவிற்கு இடையே ஹிந்தி பங்களிப்பு குறித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: […]
கர்நாடக அரசியலை கலக்கும் நடிகைகள்
தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி ஆகிய படங்களில் நடித்துள்ள கன்னட நடிகை ரம்யா கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2013-ல் மாண்டியா நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு அதே தொகுதியில் நடந்த நாடாளுமன்ற பொது தேர்தலில் தோல்வி அடைந்தார். தற்போது காங்கிரஸ் தொழில் நுட்ப பிரிவில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். பிரபு சாலமன் இயக்கிய கொக்கி […]
‘தமிழகம் ஆபத்தான நிலையில் இருக்கிறது’
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ‘யூ-டியூப்’ மூலம் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இணையதளம் மூலம் அனுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:- கேள்வி: நமது அரசியல் ஆக்கபூர்வமான செயலை நோக்கியா? அல்லது அதிகாரத்தை மட்டும் நோக்கியா? பதில்: அதிகாரத்தை மட்டும் நோக்கி செல்வது ஒரு அரசன் செய்யும் வேலை. அதிகாரத்தை மட்டும் நோக்கி சென்று என்ன செய்வது? அது மக்களுக்காக செய்யும் விஷயம் கிடையாது. நல்ல […]
தொழில் அதிபரிடம் ரூ.1½ லட்சம் லஞ்சம்- ஜிஎஸ்டி கமிஷனர் மீது குற்றப்பத்திரிகை
உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி கமிஷனராக பணியாற்றி வந்தவர் சன்சார் சந்த். இவரது மனைவி அவினாஷ் கவுர். 1986-ம் ஆண்டின் இந்திய வருவாய்ப் பணி (ஐ.ஆர்.எஸ்.) தொகுப்பை சேர்ந்த இவர், கான்பூரின் முதல் ஜி.எஸ்.டி. கமிஷனராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் கான்பூரில் தொழில் அதிபரிடம், அவருக்கு சாதகமாக நடந்து கொள்வதற்கு ரூ.1½ லட்சம் லஞ்சம் பெற்றார் என குற்றச்சாட்டு எழுந்து, […]
ஏமனில் சவுதி கூட்டுப்படையினரின் விமான தாக்குதலில் 20 அப்பாவி பொதுமக்கள் பலி
ஏமன் நாட்டின் டைஸ் பகுதியில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய விமானத் தாக்குதலில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பலப்பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்கள் வைத்து அந்த பகுதிகைளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர். சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான […]
ஜெர்மனி பயணத்தை முடித்துகொண்டு இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி
ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி அந்நாட்டின் வேந்தர் ஏஞ்சலா மெர்கெலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி முடித்த பின்னர் இந்தியாவுக்கு புறப்பட்டார். காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு லண்டன் பங்கிங்காம் அரண்மனையில் நேற்று தொடங்கியது. பிரிட்டன் ராணி எலிசபெத் மாநாட்டை தொடங்கி வைத்தார். காமன்வெல்த் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள 53 நாடுகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் பிரதமர் மோடி மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாட்டில் 91 […]
சுவீடன் நாட்டிலிருந்து பிரிட்டன் சென்றார் பிரதமர் மோடி
5 நாள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி சுவீடன் பயணத்தை முடித்துகொண்டு பிரிட்டன் வந்தடைந்தார். பிரதமர் நரேந்திர மோடி தனது 5 நாள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக நேற்று முன்தினம் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் போய்ச் சேர்ந்தார். அவரை அந்த நாட்டின் பிரதமர் ஸ்டீபன் லோப்வென், விமான நிலையத்துக்கு சென்று நேரில் வரவேற்றார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, சுவீடன் நாட்டின் மன்னர் 16-ம் காரல் […]
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மனைவி மரணம்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபுல்யூ. புஷ்சின் மனைவியும், ஜார்ஜ் டபுல்யூ. புஷ்சின் தாயாருமான பார்பரா புஷ் தனது 92வது வயதில் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பார்பரா புஷ் உடல் நலம் பாதிப்பு அடைந்துள்ளதாக ஹூஸ்டனில் உள்ள முன்னாள் அதிபரின் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது. மேலும் அந்த அறிக்கையில், உடல்நலம் பாதிப்பு அடைந்துள்ள பார்பரா புஷ் விரைவில் நலம்பெற வேண்டும் என பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டது. […]
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து – ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் 40 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா?
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 40 எம்.எல்.ஏ.க்களையும் ராஜினாமா செய்ய வைக்க ஜெகன்மோகன் ரெட்டி ஆலோசித்து வருகிறார். ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதால் வருவாய் இழப்பை ஈடு செய்ய, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. சிறப்பு அந்தஸ்து வழங்க, முதலில் சம்மதித்த மத்திய அரசு, பிறகு அதற்கு மறுத்து விட்டது. சுமார் 30 தடவை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு […]





