அமைச்சர்கள் பேச்சு வார்த்தை தோல்வி: நாகை மீனவர்கள் உண்ணாவிரதம் நீடிப்பு ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து நாகை தலைமை தபால் நிலையம் முன் நாகை மாவட்ட மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், ஓ.எஸ். மணியன் கலெக்டர் பழனிச்சாமி, எம்.எல்.ஏ.க்கள் பவுன்ராஜ், தமிமுன் அன்சாரி ஆகியோர் வந்தனர். அப்போது அமைச்சர்களை மீனவ பெண்கள் முற்றுகையிட்டு …
Read More »புதுக்கோட்டை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 15 குழந்தைகள் காயம்
புதுக்கோட்டை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 15 குழந்தைகள் காயம் புதுக்கோட்டை மாவட் டம், திருக்கட்டளை பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் புதுக்கோட்டை பகுதியில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். அவர்கள் தனியார் வேன் மூலம் பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று காலை 15-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வேனில் சென்றனர். வேனை மேட்டுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் ஓட்டினார். திருக்கட்டளை மெயின் ரோட்டில் செல்லும் …
Read More »தமிழக இளைஞர்கள் மத்தியில் மோடி அலை வீசுகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழக இளைஞர்கள் மத்தியில் மோடி அலை வீசுகிறது: பொன்.ராதாகிருஷ்ணன் குடியாத்தத்திற்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றிடம் காணப்படுகிறது. கடந்த 50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் எந்த வளர்ச்சியும் இல்லை. அதிருப்தியே உள்ளது. மக்களின் புதிய தேடலாக பா.ஜ.க உள்ளது. வடமாநிலங்களில் பெற்ற தேர்தல் வெற்றி, பிரதமர் மோடியின் ஆளுமை …
Read More »சைதாப்பேட்டையில் இந்தியன் வங்கி ஏ.டி.எம். தீப்பிடித்து கருகியது பணம் எரிந்ததா?
சைதாப்பேட்டையில் இந்தியன் வங்கி ஏ.டி.எம். தீப்பிடித்து கருகியது பணம் எரிந்ததா? சென்னை சைதாப்பேட்டை கலைஞர் வளைவு அருகே இந்தியன் வங்கிக்கு சொந்தமான ஒரு ஏ.டி.எம். உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த ஏ.டி.எம்.மில் நேற்று மாலை வழக்கத்தை விட அதிகமாகவே மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் பொதுமக்கள் பணம் எடுத்து கொண்டு இருந்தபோது அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரத்தின் பின்பக்கத்தில் இருந்து திடீரென கரும் …
Read More »கச்சத்தீவை தாரை வார்க்க இந்திரா காந்தியிடம் பணம் பெற்றவர் கருணாநிதி சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு
கச்சத்தீவை தாரை வார்க்க இந்திரா காந்தியிடம் பணம் பெற்றவர் கருணாநிதி சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலும், செய்தியாளர் சந்திப்பிலும் கூறி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அண்மையில் ஜல்லிக்கட்டு போரட்டத்தில் ஈடுபட்டவர்களை பொறுக்கிகள் என சுப்பிரமணியன் சுவாமி கூறியது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கச்சத்தீவை …
Read More »சசிகலா பொதுச் செயலாளர் பதவி தேர்தல் கமிஷனிடம் ஓ.பி.எஸ். அணி 61 பக்க மனு தாக்கல்
சசிகலா பொதுச் செயலாளர் பதவி தேர்தல் கமிஷனிடம் ஓ.பி.எஸ். அணி 61 பக்க மனு தாக்கல் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்து எடுக்கப்பட்டது கட்சியின் சட்ட விதிகளின் படி செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனிடம் பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த எம்.பி.க்கள் புகார் மனு கொடுத்தனர். இதையடுத்து சிறையில் உள்ள சசிகலாவுக்கு தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. …
Read More »டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையின் தமிழக மாணவர் மரணத்தில் மர்மம்!
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையின் தமிழக மாணவர் மரணத்தில் மர்மம்! டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த முத்துகிருஷ்ணன் (எ) ரஜினி கிருஷ் என்ற தலித் மாணவர், திங்கள்கிழமை மாலை தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். சேலத்தைச் சேர்ந்த அந்த மாணவர், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வந்தார். திங்கள்கிழமை பிற்பகல் முனிர்காவில் உள்ள தனது நண்பரின் அறைக்குச் சென்ற அவர், அங்கு …
Read More »ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் – ஓ. பன்னீர்செல்வம் நம்பிக்கை
ஆர்.கே. நகர் தொகுத்திக்கான இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் – ஓ. பன்னீர்செல்வம் நம்பிக்கை ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க கட்சியில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது. இந்நிலையில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என …
Read More »ஏற்காட்டில் 2-வது நாளாக இடி-மின்னலுடன் பலத்த மழை
ஏற்காட்டில் 2-வது நாளாக இடி-மின்னலுடன் பலத்த மழை தமிழகத்தில் பருவ மழை பொய்த்து போனதால் ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் தண்ணீர் இல்லாமல் மிகவும் வறட்சியுடன் காணப்படுகிறது. தமிழகத்தில் கோடைக்கு முன்பே வெயில் கொளுத்தி வருகிறது. அவ்வப்போது வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த 4 மற்றும் 5-ந் தேதி முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. ஏற்காட்டில் நேற்று முன்தினம் மழை பெய்தது. …
Read More »தங்கச்சிமடத்தில் 4-வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம்
தங்கச்சிமடத்தில் 4-வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம் இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூட்டில் பலியான தங்கச்சி மடம் மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து தங்கச்சிமடத்தில் உள்ள தேவாலயத்தில் மீனவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் 4-வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்களிடம் மாவட்ட கலெக்டர் நடராஜ், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மற்றும் அதிகாரிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பயனும் ஏற்படவில்லை. மீனவரை சுட்டுக்கொன்ற …
Read More »