கா.கலைக்கோட்டுதயம் சீமான் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கா.கலைக்கோட்டுதயம் இன்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆர்.கே.நகர் தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில், தமிழன் தொலைக்காட்சியின் நிறுவனர் கா.கலைக்கோட்டுதயம் போட்டியிடுகிறார். அவர் இன்று தனது வேட்பு மனுவை தண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில், தேர்தல் […]
தமிழ்நாடு செய்திகள்
சசிகலாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு: பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க கோரிக்கை
சசிகலாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு: பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க கோரிக்கை ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக கடந்த டிசம்பர் 29-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அவரது தோழி சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பிறகு அவர் 31-ந்தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்திற்கு வந்து பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றார். இது தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் 5-ந்தேதி முதல்- […]
டெல்லியில் 6வது நாளாக போராடிவரும் விவசாயிகளை சந்தித்து கனிமொழி ஆதரவு!
டெல்லியில் 6வது நாளாக போராடிவரும் விவசாயிகளை சந்தித்து கனிமொழி ஆதரவு! டெல்லி ஜந்தர் மந்தரில் 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தமிழகத்தில் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 6வது நாளாக விவசாயிகள் நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் தமிழகத்தில் வறட்சியால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு […]
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் நீடித்த கடும் வறட்சியால் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 100 கன அடிக்கும் குறைவான அளவே தண்ணீர் வந்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து 30 அடிக்கும் கீழாக குறைந்தது. பல மாதங்களுக்கு பிறகு கடந்த 2 நாட்களாக தமிழக எல்லையில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு […]
ஜெயலலிதா மரணம் பற்றிய வழக்கு: கைதான பெண் ஜாமீன் மனு தாக்கல்
ஜெயலலிதா மரணம் பற்றிய வழக்கு: கைதான பெண் ஜாமீன் மனு தாக்கல் சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் ராமசீதா. இவர், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் அலுவலகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், தான் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை செய்வதாகவும், ஜெயலலிதா இறந்த நிலையில் தான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார் என்றும் பேசினார். மேலும், இந்த உண்மையை மறைத்ததால், அப்பல்லோ ஆஸ்பத்திரியில் செய்த வேலையை ராஜினாமா செய்து விட்டதாகவும் கூறினார். இவரது […]
ஜாமீனில் வெளியே வருவோர் கருவேல மரங்களை அகற்றவேண்டும்: அரியலூர் கோர்ட்டு உத்தரவு
ஜாமீனில் வெளியே வருவோர் கருவேல மரங்களை அகற்றவேண்டும்: அரியலூர் கோர்ட்டு உத்தரவு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சீமை கருவேலமரங்கள் வளர்ந்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதால் அதனை அகற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. மேலும் மரம் அகற்றும் பணியை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தர விடப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சீமை கருவேலமரங்கள் அகற்றும் […]
அமைச்சர்கள் பேச்சு வார்த்தை தோல்வி: நாகை மீனவர்கள் உண்ணாவிரதம் நீடிப்பு
அமைச்சர்கள் பேச்சு வார்த்தை தோல்வி: நாகை மீனவர்கள் உண்ணாவிரதம் நீடிப்பு ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து நாகை தலைமை தபால் நிலையம் முன் நாகை மாவட்ட மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், ஓ.எஸ். மணியன் கலெக்டர் பழனிச்சாமி, எம்.எல்.ஏ.க்கள் பவுன்ராஜ், தமிமுன் அன்சாரி ஆகியோர் வந்தனர். அப்போது அமைச்சர்களை மீனவ பெண்கள் முற்றுகையிட்டு […]
புதுக்கோட்டை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 15 குழந்தைகள் காயம்
புதுக்கோட்டை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 15 குழந்தைகள் காயம் புதுக்கோட்டை மாவட் டம், திருக்கட்டளை பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் புதுக்கோட்டை பகுதியில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். அவர்கள் தனியார் வேன் மூலம் பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று காலை 15-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வேனில் சென்றனர். வேனை மேட்டுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் ஓட்டினார். திருக்கட்டளை மெயின் ரோட்டில் செல்லும் […]
தமிழக இளைஞர்கள் மத்தியில் மோடி அலை வீசுகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழக இளைஞர்கள் மத்தியில் மோடி அலை வீசுகிறது: பொன்.ராதாகிருஷ்ணன் குடியாத்தத்திற்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றிடம் காணப்படுகிறது. கடந்த 50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் எந்த வளர்ச்சியும் இல்லை. அதிருப்தியே உள்ளது. மக்களின் புதிய தேடலாக பா.ஜ.க உள்ளது. வடமாநிலங்களில் பெற்ற தேர்தல் வெற்றி, பிரதமர் மோடியின் ஆளுமை […]
சைதாப்பேட்டையில் இந்தியன் வங்கி ஏ.டி.எம். தீப்பிடித்து கருகியது பணம் எரிந்ததா?
சைதாப்பேட்டையில் இந்தியன் வங்கி ஏ.டி.எம். தீப்பிடித்து கருகியது பணம் எரிந்ததா? சென்னை சைதாப்பேட்டை கலைஞர் வளைவு அருகே இந்தியன் வங்கிக்கு சொந்தமான ஒரு ஏ.டி.எம். உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த ஏ.டி.எம்.மில் நேற்று மாலை வழக்கத்தை விட அதிகமாகவே மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் பொதுமக்கள் பணம் எடுத்து கொண்டு இருந்தபோது அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரத்தின் பின்பக்கத்தில் இருந்து திடீரென கரும் […]





