தமிழகத்தில் 2 கோடிக்கும் அதிகமான ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் போலி அட்டைகளும் இடம்பெற்றுள்ளன. எலெக்ட்ரானிக் பதிவுகளின் அடிப்படையில் ஸ்மார்ட் ரேஷன் அட்டைகளை வழங்கினால் போலி அட்டைகள் தானாக ஒழிந்துவிடும் என்று கணக்கிட்டு, ஸ்மார்ட் ரேஷன் அட்டை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதன் பின்னர் ரேஷன் அட்டைகளை ஆதார் தகவலுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரேஷன் அட்டைகளுக்கான ஆதார் பதிவு தகவல்களும் பெறப்பட்டுவிட்டன. 99 சதவீதம் […]
தமிழ்நாடு செய்திகள்
இன்சூரன்ஸ், மதிப்பு கூட்டு வரி உயர்வை கண்டித்து தென்னிந்தியா முழுவதும் 30 லட்சம் லாரிகள் ஓடாததால் ரூ.1500 கோடி சரக்குகள் தேக்கம்
இன்சூரன்ஸ், மதிப்பு கூட்டு வரி உயர்வை கண்டித்து தென்னிந்தியா முழுவதும் 30 லட்சம் லாரிகள் ஓடாததால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் தொகையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை அழிக்கவும் உத்தரவிட்டது. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான ‘வாட்’ வரியை உயர்த்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக் நடைபெறுகிறது. மத்திய, மாநில அரசுகள் […]
தி.மு.க. தான் எங்களின் பிரதான எதிரி – அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள் – ஜெ.தீபா பேட்டி
‘தி.மு.க. தான் எங்களுக்கு பிரதான எதிரி’ என்றும், ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்களை எதிர்க்கும் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள்’ என்றும் ஜெ.தீபா கூறினார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட புது வண்ணாரப்பேட்டையில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தேர்தல் பணிமனையை பேரவையின் பொது செயலாளர் ஜெ.தீபா திறந்து வைத்தார். இந்த விழாவில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் வக்கீல் தொண்டன் சுப்பிரமணி, மாவட்ட பொறுப்பாளர்கள் குமரி செந்தில்குமரன், கடலூர் செல்வவிநாயகம், மற்றும் செல்வராஜாமணி […]
ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக ரூ. 50 கோடி பணம் – தேர்தல் ஆணையம் அதிர்ச்சி
ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக ரூ. 50 கோடி பணம் தயாராக இருப்பதும், கொட்டப்போகிறது பண மழை என்ற ரகசிய தகவலும் தேர்தல் ஆணையத்துக்கு தெரிய வந்துள்ளது. இடைத்தேர்தல் என்றாலே பணம்தான் என்று சொல்லும் அளவுக்கு ஓட்டுக்கள் விலை பேசப்படுவது தெரிந்ததுதான். பிரபலமாக பேசப்படும் திருமங்கலம் பார்முலாதான் பண விநியோகத்தை பரவலாக்கியது. அதன் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம் என்று விலை கூடுதலாகவே நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. ஓட்டுக்கு பணம் […]
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று பத்திரப்பதிவு தடையை ஐகோட்டு தளர்த்தியது
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று பத்திரப்பதிவு தடையை ஐகோட்டு தளர்த்தி உள்ளது. இதன் மூலம் அக்டோபர் 20-ந்தேதிக்கு முன் வாங்கிய நிலத்தை பதிவு செய்யலாம். சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் யானை ராஜேந்திரன் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். ‘தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் அனைத்தும் சட்டவிரோதமாக வீட்டு மனையாக மாற்றப்படுகிறது. இதனால், விவசாயமும், விவசாய நிலங்களும் அழிந்து வருகின்றன. விவசாய நிலத்தில் வீட்டு மனைகள் அமைக்க சட்டப்படி அனுமதி […]
மீனவ சமுதாயத்திற்காக கச்சத்தீவை மீட்க போராடுவேன் என்று ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தீபா தேர்தல் வாக்குறுதி
‘மீனவ சமுதாயத்திற்காக கச்சத்தீவை மீட்க போராடுவேன்’ என்று ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தீபா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மீனவ சமுதாயத்தின் மீது அதிகமான நம்பிக்கை வைத்திருந்தார். அவர் மறைவுக்கு பின் அவரது அரசியல் வாரிசும் எனது அத்தையுமான அம்மா கோட்டையில் சுதந்திர […]
நடிகர் ரஜினியின் இலங்கை பயணம் ரத்து: எங்களுக்கு எதிராக தமிழர்களை திசை திருப்பி விடுகிறார்கள் – விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்
நடிகர் ரஜினியின் இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எங்களுக்கு எதிராக தமிழர்களை திசை திருப்பி விடுவதாக தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் இலங்கையில் லைக்கா நிறுவனம் சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கும் விழாவில் பங்கேற்க செல்ல இருந்தார். அவரது இலங்கை பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டவர்கள் கூறினர். […]
ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் ஆதரவாளர்கள் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக தேர்தல் கமிஷனிடம் ஓ.பி.எஸ். அணியினர் மனு
ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் ஆதரவாளர்கள் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக டெல்லியில் தேர்தல் கமிஷனிடம் ஓ.பி.எஸ். அணியினர் மனு கொடுத்தனர். ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.இங்கு அ.தி.மு.க. இரு அணிகளாக போட்டியிடுகிறது. சசிகலா அணியின் சார்பாக டி.டி.வி. தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பாக மதுசூதனனும் போட்டியிடுகிறார்கள். ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் அணியினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக ஓ.பி.எஸ்.அணியினர் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். […]
சின்னத்தால் சின்னாபின்னமான இரு பிரிவுகள் …மாற்றி மாற்றி மரண கலாய்
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுகவுக்கும், அதிமுக அம்மா கட்சிக்கும் அல்லது திமுகவுக்கும் அதிமுக புரட்சி தலைவி அம்மா கட்சிக்கும் கூட இவ்வளவு போட்டி இல்லை, ஆனால் அதிமுக அம்மா கட்சிக்கும், அதிமுக புரட்சி தலைவி அம்மா கட்சிக்கும் நடுவே பெரும் ரகளை ஓடிக் கொண்டுள்ளது. ஜெயிக்கிறோமோ இல்லையோ முடிந்த அளவுக்கு ஒரு தரப்பை இன்னொரு தரப்பு அசிங்கப்படுத்தி பிரசாரம் செய்ய வேண்டும் என்பதில் டிடிவி தினகரன் மற்றும் மதுசூதனன் தரப்பு […]
ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வீதிவீதியாக தீவிர பிரச்சாரம்
கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் வகையில் ஆர்.கே.நகர் தொகுதியில் தன்னுடைய வெற்றி இருக்கும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் அதிமுக அம்மா அணி சார்பில் போட்டியிடும் டிடிவி.தினகரன் மூன்றாவது நாளாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, ஏராளமான பொதுமக்கள் திரண்டு, அவருக்கு ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாக […]





