எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு வரத்தயாராக இருந்த எம்எல்ஏக்களை கடத்திச் சென்று ஒளித்து வைத்தவர்கள் ஒழிக்கப்படுவார்கள் என அம்மா அணியின் துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டி உள்ளார். மதுரை மாவட்டம் மேலூரில் அதிமுக அம்மா அணி சார்பில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய டிடிவி தினகரன் ‘இது நமது ஆட்சி. இந்த ஆட்சிக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் பங்கம் வராது. ஆட்சி செய்பவர்களுக்கு மடியிலே கணம் உள்ளது. ராணுவ …
Read More »ஜெயலலிதா மரணத்தில் நீதிவிசாரணை தேவை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும் என அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார். மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், தர்மத்தோடு யுத்தம் நடத்துபவர்கள் தர்மயுத்தம் நடத்துவதாக சொல்கிறார்கள். அம்மா அவர்கள் மருத்துவமனையில் இருந்தபோது அவர்கள்தான் முக்கியமான பொறுப்பில் இருந்தவர்கள். அம்மா அவர்களின் மரணம் குறித்து அவர்களிடம்தான் நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும். …
Read More »ரஜினி, கமல் செய்தது என்ன?
மக்கள் துன்பப்படும்போது ரஜினி, கமல் ஆகியோர் என்ன உதவி செய்தார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை அமைச்சர் செல்லூர் ராஜு குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும் ஆனால் மக்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கை இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், எம்.ஜி.ஆரை …
Read More »மதிப்பிழந்து வருகிறதா பொறியியல் படிப்பு?
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றதாக அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 523 பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு, அண்ணா பல்கலைகழகத்தில் கடந்த மாதம் 23ம் தேதி துவங்கியது. பொறியியல் பல்கலைக்கழகங்களில் மொத்தம் உள்ள 1 லட்சத்து 70 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் மட்டுமே அழைக்கப்பட்டனர். இவர்கள் தரவரிசை பட்டியலில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில் 86ஆயிரத்து 355 இடங்கள் மட்டுமே நிரம்பின. கலந்தாய்வில் …
Read More »மாணவர்களுக்கு தமிழக அரசு துரோகம் இழைத்துவிட்டது!
நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெறுவதில் தோல்வியடைந்த தமிழக அரசு மாணவர்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்திருப்பதாகப் பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெறும் மசோதாவுக்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறத் தமிழக ஆட்சியாளர்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்விலிருந்து விலக்கு அளித்தல், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் ஆகிய கோரிக்கைகளைக் குடியரசுத் தலைவர் தேர்தலின்போது வலியுறுத்தவும் …
Read More »டிடிவி தினகரன் நியமனம் செல்லாது!
டிடிவி தினகரன் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக அம்மா அணி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீண்டும் கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வரும் டிடிவி தினகரன் சமீபத்தில் அதிமுக அம்மா அணியில் 67 கட்சிப் பதவிகளுக்கு புதிதாக நியமனங்களை மேற்கொண்டார். இந்த நியமனம் முதலமைச்சர் எடப்பாடிபழனிச்சாமி அணியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. டிடிவி தினகரன் மீண்டும் கட்சி பணிகளில் ஈடுபடுவதற்கு …
Read More »மூக்குப்பொடி சாமியாரிடம் ஆசிர்வாதம் வாங்கிய தினகரன்
அதிமுகவை வலுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக டிடிவி தினகரன் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இன்று திருவண்ணாமலையிலுள்ள மூக்குப்பொடி சாமியார் என்பவரிடம் டிடிவி தினகரன் ஆசிர்வாதம் வாங்கியது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, டிடிவி தினகரனின் அறிவிப்புகள் எதுவும் அதிமுக அம்மா அணியினரை கட்டுப்படுத்தாது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Read More »அதிமுகவில் உச்சக்கட்ட உட்கட்சிப் பூசல்
அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தில் நடைபெற்றுவருவது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “டிடிவி தினகரனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது அதிமுகவின் உட்கட்சி பூசல். அவரை நீக்குவதும், சேர்ப்பதும் அவர்கள் உரிமை” என்று தெரிவித்தார். இதுதொடர்பாக பேசிய விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், “அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது” என்றார். தினகரனின் நியமனம் செல்லாது என இபிஎஸ் அணியினர் …
Read More »பிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடவடிக்கை எடுக்க யாருக்கு உரிமை ?
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது என மத்திய அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் ஆபாசமாக இருப்பதாகக் கூறி அதனை தடை செய்ய சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் …
Read More »நம்பிக்கையில்லா தீர்மானம்: ஸ்டாலின் மிரட்டல்
தேவைப்பட்டால், தமிழக அரசுக்கு எதிராக, மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்,” என, தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார். தி.மு.க. மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில், நேற்று நடந்தது. கூட்டம் முடிந்ததும், ஸ்டாலின் அளித்த பேட்டி: முதல்வர் பழனிசாமி அணி, பன்னீர்செல்வம் அணி, தினகரன் அணி என, அ.தி.மு.க., பிரிந்ததிலிருந்து, தமிழகத்தில், அசாதாரண சூழல் நிலவுகிறது. இப்படிப்பட்ட நிலையில், தமிழக மக்கள் பல்வேறு துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் தொடர்ந்து …
Read More »