திருவாரூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு தின விழாவில் பங்கேற்க சென்ற அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை ஜெயலலிதா கண்ணை இமை காப்பதைப்போல காத்து வந்தார். தொடர்ந்து தமிழக மக்களுக்கு தனது ஆட்சியில் ஏராளமான திட்டங்களையும், நலன்களையும் அளித்து வந்தார். அவர் விட்டுச் சென்ற ஆட்சி சிறப்பாக வழி நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இடையிலே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இப்போது பேச்சுவார்த்தைகள் மூலமாக சரி […]
தமிழ்நாடு செய்திகள்
Big Boss’-ஐ மிஞ்சிய அதிமுக அணிகள் இணைப்பு
அதிமுகவில், அணிகள் இணைப்பு பிக்பாஸ் நிகழ்ச்சியையே மிஞ்சிவிட்டதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர் இதைக் கூறினார்.
நெடுவாசல் மக்கள் சுதந்திர தினத்தில் உண்ணாவிரதம் ?
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நெடுவாசல் பகுதி மக்கள் 126வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதியில் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வாணக்கன்காடு, கோட்டைக்காடு உள்ளிட்ட கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சுதந்திர தினமான […]
தினகரன் நிதானத்தை இழந்து கருத்து தெரிவிக்க கூடாது
தமிழக அரசை கவிழ்க்க நினைப்பது பெரும் துரோகம் எனக் கூறியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், தினகரன் எப்போதும் நிதானத்தை இழந்து கருத்து தெரிவிக்க கூடாது என தெரிவித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “அரசை கவிழ்க்க நினைப்பது பெரும் துரோகம் அதை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். நிதானத்தை இழந்து கருத்து தெரிவிக்கக் கூடாது. எந்த சூழ்நிலையிலும் டிடிவி தினகரன் நிதானத்தை இழந்துவிடக்கூடாது. தினகரனின் குடும்ப […]
எடப்பாடி முதலமைச்சரானது ஒரு விபத்து
எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர் அமர்ந்திருந்த முதலமைச்சர் பதவியில், எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருப்பது ஒரு விபத்து என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பதவி இருக்கும் காரணத்தால், சிலர் ஆடுவதாக கூறிய அவர், அவர்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார். அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் தலைமையில், மதுரையில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மதுரையில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மதுரையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் […]
சசிகலா நினைத்திருந்தால் டிசம்பர் 5ம் தேதியே முதல்வராகி இருப்பார்
மதுரை மாவட்டம் மேலூரில் அதிமுக அம்மா அணி சார்பில் டிடிவி தினகரன் தலைமையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி உள்ளிட்ட 14 எம்எல்ஏக்களும், நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட 5 எம்பிகளும் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய டிடிவி தினகரன், 1977ஆம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டால் கருணாநிதியால் எம்ஜிஆர் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார். ஆனால் அதன்பிறகு மக்கள் கருணாநிதியை ஒதுக்கி வைத்தனர். ஏழை எளிய […]
எம்எல்ஏக்களை ஒளித்து வைப்பவர்கள் ஒழிக்கப்படுவார்கள்
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு வரத்தயாராக இருந்த எம்எல்ஏக்களை கடத்திச் சென்று ஒளித்து வைத்தவர்கள் ஒழிக்கப்படுவார்கள் என அம்மா அணியின் துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டி உள்ளார். மதுரை மாவட்டம் மேலூரில் அதிமுக அம்மா அணி சார்பில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய டிடிவி தினகரன் ‘இது நமது ஆட்சி. இந்த ஆட்சிக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் பங்கம் வராது. ஆட்சி செய்பவர்களுக்கு மடியிலே கணம் உள்ளது. ராணுவ […]
ஜெயலலிதா மரணத்தில் நீதிவிசாரணை தேவை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும் என அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார். மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், தர்மத்தோடு யுத்தம் நடத்துபவர்கள் தர்மயுத்தம் நடத்துவதாக சொல்கிறார்கள். அம்மா அவர்கள் மருத்துவமனையில் இருந்தபோது அவர்கள்தான் முக்கியமான பொறுப்பில் இருந்தவர்கள். அம்மா அவர்களின் மரணம் குறித்து அவர்களிடம்தான் நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும். […]
ரஜினி, கமல் செய்தது என்ன?
மக்கள் துன்பப்படும்போது ரஜினி, கமல் ஆகியோர் என்ன உதவி செய்தார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை அமைச்சர் செல்லூர் ராஜு குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும் ஆனால் மக்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கை இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், எம்.ஜி.ஆரை […]
மதிப்பிழந்து வருகிறதா பொறியியல் படிப்பு?
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றதாக அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 523 பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு, அண்ணா பல்கலைகழகத்தில் கடந்த மாதம் 23ம் தேதி துவங்கியது. பொறியியல் பல்கலைக்கழகங்களில் மொத்தம் உள்ள 1 லட்சத்து 70 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் மட்டுமே அழைக்கப்பட்டனர். இவர்கள் தரவரிசை பட்டியலில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில் 86ஆயிரத்து 355 இடங்கள் மட்டுமே நிரம்பின. கலந்தாய்வில் […]





