தமிழ்நாடு செய்திகள்

எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடக்கோரி வழக்கு

ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்துள்ள நிலையில், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 19 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குப் தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய பின், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். முதல்வருக்கான […]

ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படாது

பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினார். தலைமைச் செயலகத்தில் நடந்த சந்திப்பின்போது, அரசியல் குறித்துப் பேசவில்லை என்று ஹெச்.ராஜா தெரிவித்தார். டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர், ஆளுநரிடம் புகார் அளித்திருப்பதால், ஆட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, “முதலமைச்சரையும், புதிதாக பொறுப்பேற்றுள்ள துணை முதல்வர் ஓபிஎஸ் […]

அ.தி.மு.க.வில் எந்த அணியிலும் இல்லை

அதிமுகவில், எடப்பாடி பழனிசாமி இருந்தவர், அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ ரத்தின சபாபதி. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்த பி.கே. வைரமுத்துவை பதவியில் இருந்து டி.டி.வி.தினகரன் நேற்று விடுவித்து அறிவிப்பு வெளியிட்டார். அவருக்கு பதிலாக புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பதவி, மணல்மேல்குடி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதியின் சகோதரர். இந் நிலையில் எடப்பாடி அணிக்கு ஆதரவு அளித்த […]

உரிய நேரத்தில் முடிவெடுப்போம்

தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், தமிழக ஆட்சி நிர்வாகத்தில் மத்திய அரசு செய்து வரும் வரம்பு மீறிய தலையீடுகள், தமிழகத்தில் நிலவும் குழப்பத்துக்குக் காரணம் என அறிவதாகக் கூறியுள்ளனர். தற்போது உருவாகியிருக்கும் அரசியல் நெருக்கடிகளை தமிழக கொங்கு இளைஞர் பேரவை, மனித நேய ஜனநாயகக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை ஆகியவை உன்னிப்பாக கவனித்து வருகின்றன என்றும் அவர்கள் கூறியுள்ளனர். தமிழகத்தின் நலன் கருதி தங்களது அரசியல் […]

டிடிவி தினகரன் அணியில் 40 எம்.எல்.ஏ.க்கள்

சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தலைமையில் விரைவில் புதிய அரசு அமையும் என்று, அ.தி.மு.க. அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை கூட்டியிருக்கிறது. கடந்த 18 ஆம் தேதி புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த திவாகரன், 26 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறியிருந்தார். தற்போது, கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிடிவி தினகரனுக்கு 40 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமியின் மைனாரிட்டி […]

ஒரு தலை குல்லாவா?:தமிழிசை கேள்வி

தமிழக அரசியல் தொடர்பாக அடிக்கடி ட்விட்டரில் கருத்து பதிவிடுவது நடிகர் கமல்ஹாசனின் வழக்கம். அதிமுக அணிகள் நேற்று இணைந்த போது ட்விட்டரில் பதிவிட்டிருந்த கமல்ஹசான், “காந்திக்குல்லா! காவிக்குல்லா! கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில். போதுமா? இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா” எனக் கூறியிருந்தார். இந்நிலையில் ட்விட்டரில் கமல்ஹாசனை மறைமுகமாக சாடியுள்ள தமிழிசை சவுந்தரராஜன், “காந்தி குல்லாவையும் காவி குல்லாவையும் முந்திக் கொண்டு அவசரமாக போட்டவர்கள் முத்தலாக் தீர்ப்பு […]

கருணாநிதி ஒவ்வொரு நாளும் கனவில் வருகிறார்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக வைகோ இன்று கோபாலபுரம் இல்லம் சென்றார். அவரை ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். வைகோ கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். பின்னர் வெளியே வந்த வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திமுகவுடனும் கருணாநிதியுடனும் தனக்கு ஏற்பட்ட நெருக்கத்தையும் கட்சிப் பணியாற்றிய வரலாற்றையும் சுருக்கமாகவும் நெகிழ்ச்சியோடும் பேசினார். கருணாநிதிக்காக தான் மெய்க்காப்பாளர் படை அமைத்ததாக வைகோ […]

ஜெயலலிதாவை பதவி விலக கோரவில்லையே கமல்?

தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டதால் முதலமைச்சர் பழனிசாமி பதவி விலக வேண்டும் என கூறும் நடிகர் கமல்ஹாசன், ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் ஏன் அவ்வாறு கூறவில்லை என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 2008ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாகவே ஊழல் மலிந்து கிடக்கிறது. ஊழல் மலிந்துவிட்டதால் முதலமைச்சர் […]

தமிழகத்தில் ரசாயன மாற்றம் ஏற்படாது

ஓபிஎஸ்- இபிஎஸ் அணிகள் இணைந்தாலும், இணையாவிட்டாலும் தமிழகத்தில் எந்தவித ரசாயன மாற்றமும் ஏற்படப் போவதில்லை என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத், ” 123 எம்எல்ஏ-க்களின் ஆதரவுடன் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்த முதலமைச்சர், இந்த கட்சியையும், ஆட்சியையும் காட்டிக் கொடுத்த துரோகியுடன் இணைய வேண்டிய அவசியம் ஏன் வந்தது? என வினாவியுள்ளார். மேலும் பேசிய அவர் “பால் ஊட்டி வளர்த்த […]

அதிமுக அணிகள் இணைந்தால் என்ன? இணையாவிட்டால் என்ன?

தமிழகம் பல்வேறு முக்கிய பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளபோது, அதிமுக இணைப்பு விவகாரத்தை தாம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இரு அணிகள் இணைப்பு ஒரு பிரச்னையே இல்லை. இது நாட்டின் பெரிய பிரச்னையா? மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டக்கூடாது என போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்ட […]