சென்னை : தமிழக அரசின் மெத்தனம் காரணமாகவே விரக்தியில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : அரியலூர்மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், கடின உழைப்பால் பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார். அவர் மருத்துவம் படிக்க தகுதி பெற்றிருந்தும், நீட் தேர்வு அடிப்படையில் அவருக்கு வாய்ப்பு …
Read More »கொன்னே போட்டுட்டீங்களேய்யா…. வயிறு எரிகிறது
சென்னை: மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து அனிதாவை கொன்றுவிட்டதாக நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கொந்தளித்துள்ளார். அனிதாவின் தற்கொலை இந்தியாவையே உலுக்கியிருக்கிறது. தொடர்ந்து அனிதாவின் தற்கொலைக்கு காரணமான மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. https://www.youtube.com/watch?v=MmELB4zk5-Q https://www.youtube.com/watch?v=MmELB4zk5-Q
Read More »ப்ளு வேல் விவகாரம்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரணை
புளூ வேல் கேம் விபரீதம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்துள்ளது. புளூவேல் கேம் விளையாட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் ஒருவர் மதுரையில் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விளையாட்டில் தமிழக இளைஞர்கள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க அரசும் காவல்துறையினரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. …
Read More »அசல் ஓட்டுநர் உரிம விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
வாகன ஓட்டிகளிடம் அசல் ஓட்டுநர் உரிமத்தை கேட்பதற்கு, வரும் செவ்வாய்க்கிழமை வரை சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இன்று முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்ற, தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் சுகுமார் தாக்கல் செய்த மனு, நீதிபதி துரைசாமி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டத்தின் …
Read More »திருமண விழாவில் ஆவேசமாக அரசியல் பேசிய கமல்..!
கோவையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பல அரசியல் கருத்துக்களை நடிகர் கமல் ஆவேசமாக பகிர்ந்துகொண்டார். கோவையில் ஈச்சனாரியில் நடிகர் கமல்ஹாசன் ரசிகர் மன்றத்தின் அகில இந்திய பொருளாளர் தங்கவேல் வீட்டு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய கமல், “என்னை பார்த்து இந்த சமூகத்தில் என்ன செய்தீர்கள் என்று கேட்டால் எனக்கு கோபம் வரும். நாம் நமது வேலையை செய்வோம், தேவை வரும் போது கோட்டை நோக்கி …
Read More »அரசியல் சுற்றுலா மேற்கொண்டுள்ள நடிகர் கமல்ஹாசன்!
நடிகர் கமல்ஹாசன் கேரள மாநிலத்திற்கு அரசியல் குறித்து தெரிந்து கொள்ள கல்விசுற்றுலா மேற்கொண்டுள்ளதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக அவருடைய ட்விட்டர் பக்கத்திலும், அவர் பங்கேற்கும் பொதுநிகழ்ச்சிகளிலும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பரபரப்பான கருத்துக்கள் தெரிவித்துவந்தார். குறிப்பாக ஆளும் அதிமுக அரசை ஊழல் அரசு என மிக கடுமையாக விமர்சித்துவந்தார். இந்நிலையில் ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டிற்கு சென்றுள்ளார் …
Read More »பாஜக அமைச்சரவையில் அதிமுக இணைகிறது ?
மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜிவ் பிரதாப் ரூடி, ஃபாகன் சிங் குலஸ்தி, உமா பாரதி, மகேந்திர பாண்டே உள்ளிட்டோர் ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ராஜினாமாக்களை அடுத்து, மத்திய அமைச்சரவை நாளை மாற்றி அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 2014ம் ஆண்டு பாஜக ஆட்சியில் அமர்ந்த பிறகுமத்திய அமைச்சரவையை பெரிய அளவில் மாற்றி அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், புதிய அமைச்சரவையில் பாஜகவைச் சேர்ந்த புபேந்திர யாதவ், பிரகலாத் …
Read More »பாஜகவின் சூழ்ச்சிக்கு அதிமுக இரையாகக் கூடாது
தமிழக அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தோழமை கட்சி எம்எல்ஏக்களான மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமூன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு மற்றும் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் கருணாஸ் ஆகியோர் இன்று கூட்டாக ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்த அவர்கள், தினகரனை ஒதுக்கி வைத்து விட்டு நல்லாட்சி தர முடியாது என்று தெரிவித்தனர். மேலும் தினகரன் தரப்பு எம்எல்ஏக்களை அழைத்துப் பேச …
Read More »அதிமுகவின் பிரச்னைகளை சரி செய்யும் மருத்துவர் டி.டி.வி தினகரன்
சென்னையில், டிடிவி தினகரனை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவின் உயிருக்கு ஆபத்து வரும்போதெல்லாம், அவரை பாதுகாத்தவர்கள், சசிகலா குடும்பத்தினர்தான் என கூறினார். எடப்பாடி பழனிசாமியையோ, ஓ. பன்னீர் செல்வத்தையோ தலைவர்களாக ஏற்க முடியாது எனக் குறிப்பிட்ட நடிகர் செந்தில், தேர்தலைச் சந்தித்து முதலமைச்சரானால் மட்டுமே அவர்களை ஏற்க முடியும் என்றும் தெரிவித்தார். தனக்குப் பிறகும் 100 ஆண்டுகளைக் கடந்தும் அதிமுக மக்கள் நலனுக்காகப் பாடுபடும் இயக்கமாகத் திகழும் …
Read More »அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை
அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை எச்சரித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை மறுநாள் முதல் வாகன ஓட்டிகள் அசல் உரிமம் வைத்திருக்காவிட்டால் 3 மாதம் சிறை தண்டைன அல்லது 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீருடை அணிந்த எந்த காவல்துறை அதிகாரியும் வாகன ஓட்டுநர்களின் அசல் உரிமத்தை கேட்கும் போது …
Read More »