கோவையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பல அரசியல் கருத்துக்களை நடிகர் கமல் ஆவேசமாக பகிர்ந்துகொண்டார். கோவையில் ஈச்சனாரியில் நடிகர் கமல்ஹாசன் ரசிகர் மன்றத்தின் அகில இந்திய பொருளாளர் தங்கவேல் வீட்டு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய கமல், “என்னை பார்த்து இந்த சமூகத்தில் என்ன செய்தீர்கள் என்று கேட்டால் எனக்கு கோபம் வரும். நாம் நமது வேலையை செய்வோம், தேவை வரும் போது கோட்டை நோக்கி […]
தமிழ்நாடு செய்திகள்
அரசியல் சுற்றுலா மேற்கொண்டுள்ள நடிகர் கமல்ஹாசன்!
நடிகர் கமல்ஹாசன் கேரள மாநிலத்திற்கு அரசியல் குறித்து தெரிந்து கொள்ள கல்விசுற்றுலா மேற்கொண்டுள்ளதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக அவருடைய ட்விட்டர் பக்கத்திலும், அவர் பங்கேற்கும் பொதுநிகழ்ச்சிகளிலும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பரபரப்பான கருத்துக்கள் தெரிவித்துவந்தார். குறிப்பாக ஆளும் அதிமுக அரசை ஊழல் அரசு என மிக கடுமையாக விமர்சித்துவந்தார். இந்நிலையில் ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டிற்கு சென்றுள்ளார் […]
பாஜக அமைச்சரவையில் அதிமுக இணைகிறது ?
மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜிவ் பிரதாப் ரூடி, ஃபாகன் சிங் குலஸ்தி, உமா பாரதி, மகேந்திர பாண்டே உள்ளிட்டோர் ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ராஜினாமாக்களை அடுத்து, மத்திய அமைச்சரவை நாளை மாற்றி அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 2014ம் ஆண்டு பாஜக ஆட்சியில் அமர்ந்த பிறகுமத்திய அமைச்சரவையை பெரிய அளவில் மாற்றி அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், புதிய அமைச்சரவையில் பாஜகவைச் சேர்ந்த புபேந்திர யாதவ், பிரகலாத் […]
பாஜகவின் சூழ்ச்சிக்கு அதிமுக இரையாகக் கூடாது
தமிழக அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக தோழமை கட்சி எம்எல்ஏக்களான மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமூன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு மற்றும் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் கருணாஸ் ஆகியோர் இன்று கூட்டாக ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்த அவர்கள், தினகரனை ஒதுக்கி வைத்து விட்டு நல்லாட்சி தர முடியாது என்று தெரிவித்தனர். மேலும் தினகரன் தரப்பு எம்எல்ஏக்களை அழைத்துப் பேச […]
அதிமுகவின் பிரச்னைகளை சரி செய்யும் மருத்துவர் டி.டி.வி தினகரன்
சென்னையில், டிடிவி தினகரனை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவின் உயிருக்கு ஆபத்து வரும்போதெல்லாம், அவரை பாதுகாத்தவர்கள், சசிகலா குடும்பத்தினர்தான் என கூறினார். எடப்பாடி பழனிசாமியையோ, ஓ. பன்னீர் செல்வத்தையோ தலைவர்களாக ஏற்க முடியாது எனக் குறிப்பிட்ட நடிகர் செந்தில், தேர்தலைச் சந்தித்து முதலமைச்சரானால் மட்டுமே அவர்களை ஏற்க முடியும் என்றும் தெரிவித்தார். தனக்குப் பிறகும் 100 ஆண்டுகளைக் கடந்தும் அதிமுக மக்கள் நலனுக்காகப் பாடுபடும் இயக்கமாகத் திகழும் […]
அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை
அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை எச்சரித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை மறுநாள் முதல் வாகன ஓட்டிகள் அசல் உரிமம் வைத்திருக்காவிட்டால் 3 மாதம் சிறை தண்டைன அல்லது 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீருடை அணிந்த எந்த காவல்துறை அதிகாரியும் வாகன ஓட்டுநர்களின் அசல் உரிமத்தை கேட்கும் போது […]
டெல்லியில் எலும்புகளை தின்று போராடும் தமிழக விவசாயிகள்
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள், மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகளை தின்று, இன்று போராட்டம் நடத்தினர். வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில், தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக விவசாயிகளின் போராட்டம் 44ஆவது நாளாக இன்று நீடிக்கிறது. நாள்தோறும் பல்வேறு விதமாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள், மனித […]
என் சாதி இருக்கும் தெருவில் நுழையாதே ?
வேறு சமூகத்தினரின் தெருவில் இருச்சக்கர வாகனத்தில் சென்றதற்காக, தலித் இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் புதன்சந்தை அருகே அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் தீரஜ்குமார். இவர் கடந்த 22-ம் தேதி மற்றொரு சமூகத்தினர் அதிகம் வசிக்கும் தெரு வழியாக, வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றதாக தெரிகிறது. அப்போது அப்பகுதியைச் சேர்ந்த நாகுல், பொம்மாயி ஆகியோர், தீரஜ்குமாரை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் […]
பத்திரிக்கை வைப்பது போல் நடித்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி கொள்ளை
நெல்லை சந்திப்பு பகுதியில், ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு, 37 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதி மக்களை பெரும் அச்சமடைய வைத்துள்ளது. நெல்லை சந்திப்பு செல்வி நகர் பகுதியை சேர்ந்தவர் வல்லவன். இவரது மனைவி கோமதி. நேற்று இவர் வீட்டில் தனியாக இருந்தபோது, திருமண பத்திரிக்கை வைப்பது போல் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் 3 பேர், கோமதியை கட்டையால் தாக்கினர். பின்னர் வீட்டிலிருந்த […]
ஜெயலலிதா இருந்தபோது ஊழல் பற்றி கருத்து கூறாதவர் கமல்
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது ஊழல் பற்றி கருத்து கூறாத கமல்ஹாசன், தற்போது ஏன் விமர்சித்து வருகிறார் என நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். சேலம் கோட்டை மைதானத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் 11-ம் ஆண்டு துவக்க விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழகத்தில் பாஜக வளர முதன்முதலில் பிரசாரம் செய்தேன் என்று குறிப்பிட்ட அவர், ஜெயலலிதா […]





