சென்னை: மாணவி அனிதா சாவுக்கு நீதி கேட்டும், நீட் தேர்வு முறையை ரத்து செய்ய கோரியும், திமுக சார்பில் திருச்சியில் இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நீட் தொடர்பான போராட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இன்று தடை விதித்தது. பல ஆயிரம் தொண்டர்களும், மாணவர் அமைப்பினரும் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த பிறகு, கூட்டத்தை ரத்து செய்வது சரியா …
Read More »திமுக கூட்டத்திற்கு தடை விதிங்க!
சென்னை: உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் திருச்சியில் திமுகவினர் நடத்தும் கண்டன பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜ ராஜன் கூறியுள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. போராட்டம் நடத்துவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து கூறியுள்ளனர். இதனையடுத்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் திருச்சியில் நடத்தும் கண்டன பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று …
Read More »நீட் தேர்வுக்கு எதிரான தமிழக போராட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை
டெல்லி: நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு தகர்ந்து போனது. இதனால் அரியலூர் அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் தற்கொலை தமிழகத்தை கொந்தளிக்க வைத்துள்ளது. கடந்த ஒருவாரமாக தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் உக்கிரமடைந்துள்ளது. இந்த போராட்டங்களுக்கு தடை கோரியும் அனிதாவின் தற்கொலை குறித்து விசாரிக்க வலியுறுத்தியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் மணி என்பவர் …
Read More »நானும் வருகிறேன் நீட் போராட்டத்துக்கு: சசிகலாவின் அண்ணி மகள்
சென்னை : சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா தனது அறக்கட்டளையின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வருகிற 10ம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்துள்ளார். இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா தனது பெயரில் கிருஷ்ணப்ரியா ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் நீட் தேர்வை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதிமுக அம்மா அணியின் தணை பொதுச்செயலளார் டிடிவி. தினகரனும் நீட் தேர்வை எதிர்த்து …
Read More »மன உளைச்சலைக் கொடுக்காதீர்கள்.. கிருஷ்ணசாமிக்கு அனிதாவின் அண்ணன் வேண்டுகோள்
சென்னை: ஏற்கனவே மன வலியுடன் இருக்கும் எங்களுக்கு மன உளைச்சலைக் கொடுக்காதீர்கள் என்று டாக்டர் கிருஷ்ணசாமிக்கு அனிதாவின் அண்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அனிதாவின் மரணம் குறித்து டாக்டர் கிருஷ்ணசாமி சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தொடர்ந்து கூறி வருகிறார். அனிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறி வருகிறார். இந்த நிலையில் அனிதாவின் அண்ணன் மணிரத்தினம் தனது முகநூலில் ஒரு பதிவு போட்டுள்ளார். ஒரு ஏழை மாணவி …
Read More »ஜக்கையன் ரிட்டர்ன் வெறும் ட்ரைலர்தான்… எடப்பாடி அணியின் திடீர் உற்சாகம்!
சென்னை: தினகரன் அணியில் இருந்த கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் தங்களது முகாமுக்கு வந்ததில் எடப்பாடி தரப்பு மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறதாம். இது ட்ரைலர்தான்.. மெயின் பிக்சர் இனிமேதான் என உற்சாகமாக இருக்கிறதாம் எடப்பாடி தரப்பு. தினகரனுக்கு எதிராக அடுத்தடுத்த திட்டங்களை அதிரடியாகச் செயல்படுத்தி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. பொதுக்குழுவுக்கு முன்னதாக, ஆட்சிக்கான பெரும்பான்மையை நிரூபித்துவிடும் முடிவில் இருக்கிறதாம் எடப்பாடி தரப்பு. தினகரன் அணியை உடைப்பதில் எந்தவித சிக்கலும் இல்லை. …
Read More »நீட்டுக்கு நிரந்தரமாக வேட்டு… ரயில் மறியல் செய்ய முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது
சென்னை : நீர் தேர்விற்கு நிரந்தரமாக தடை கேட்ட நாம் தமிழர் கட்சியினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், ஆவடியில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சயினிர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் செப்டம்பர் 10ம் தேதி முதல் 16ம் தேதி வரை …
Read More »டீச்சர் வராட்டி என்ன… நான் பாடம் எடுக்கிறேன்.. அதிரடி சேலம் கலெக்டர் ரோகினி!
சேலம்: அரசு பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆத்தூரில் உள்ள அரசு பள்ளியில் சேலம் ஆட்சியர் ரோகிணி பாடம் நடத்தினார். ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும். தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை …
Read More »நம்ப வைத்து கழுத்தறுத்த மத்திய அரசு !
அரியலூர்: நீட்’ தேர்வில் விலக்கு வரும் என, மத்திய அரசு நம்பவைத்து கழுத்தறுத்துவிட்டது’ என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். அரியலூர் மாவட்டம் குழுமூரில், ‛நீட்’ காரணமாக டாக்டர் சீட் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் தந்தை மற்றும் சகோதரரை ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: நாடு முழுவதும் ஒரே கல்வி கொள்கை என்பது சாத்தியம் இல்லாதது. …
Read More »பா.ஜ., தலைவர் தமிழிசைக்கு காங்., – எம்.எல்.ஏ., கேள்வி
சென்னை: ‘நீட்’ தேர்வு தொடர்பாக, மூன்று கேள்விகளை எழுப்பிய, பா.ஜ., மாநிலத் தலைவர் தமிழிசைக்கு, காங்., – எம்.எல்.ஏ., விஜயதரணி, மூன்று கேள்விகளை எழுப்பி உள்ளார். ‘நீட்’ தேர்வுக்கு, விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள, காங்., தலைவர்களுக்கு, தமிழிசை சமூக வலைதளங்களில், மூன்று கேள்விகளை எழுப்பினார். ‘நாடு முழுவதும், நீட் தேர்வு என்ற கொள்கை முடிவை, முதன் முதலில் கொண்டு வந்தது யார்; நீட் தேர்வுக்கு ஆதரவாக …
Read More »