தமிழ்நாடு செய்திகள்

அமைச்சர் ஜெயக்குமார்

‘தினகரன் ஒரு திருடன்’: ஜெயகுமார் ஆவேசம்

சென்னை: ”தினகரன் ஒரு திருடன்; அவரது வித்தையை மக்கள் ஏற்க மாட்டார்கள்,” என, அமைச்சர் ஜெயகுமார் கூறினார். சென்னை விமான நிலையத்தில் அவரது பேட்டி: ‘ஊரின் நிலை தெரிந்து உடும்பை தோளில் போட்டானாம் ஒருத்தன்’ என்ற பழமொழி, தமிழக மக்களுக்கு தெரியும். இதற்கு, மதில் ஏறி திருட வந்தவன், மக்களை பார்த்ததும், தான் திருடன் இல்லை எனக்காட்ட, தோளில் கிடந்த உடும்பை காட்டி, வித்தை காட்டினானாம். அது போன்றவர் தினகரன். […]

ஜெ., சிகிச்சை போட்டோ வெளியிட தினகரன் திட்டம்

‘ஜெயலலிதா மரணத்திற்கு, சசிகலா குடும்பமே காரணம்’ என, அமைச்சர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டி வரும் நிலையில், சிசிச்சை தொடர்பான போட்டோக்களை வெளியிட தினகரன் திட்டமிட்டுள்ளார். அ.தி.மு.க.,வின் இரு அணிகள் இணைந்த பின், தினகரன் மீது, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சரமாரியாக குற்றம் சாட்டி வருகின்றனர். செப்., 15ல், வடசென்னையில் நடந்த பொதுகூட்டத்தில், ‘தினகரன், மாமியார் வீட்டிற்கு செல்வார்’ என, முதல்வர் பழனிசாமி ஆவேசமாக பேசினார். அவரைத் தொடர்ந்து, ‘தினகரன் கதை, […]

இம்மாத இறுதிக்குள் எடப்பாடி ஆட்சி காலி

திண்டிவனம்: ”18 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்துள்ளதன் மூலம், சபாநாயகர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு வரும்” என்று தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் அ.தி.மு.க., (அம்மா) சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, சென்னையிலிருந்து காரில் சென்ற தினகரனுக்கு, விழுப்புரம் மாவட்ட எல்லையான ஓங்கூர் டோல்கேட்டில் நேற்று காலை மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் தலைமையில் கட்சியினர் வரவேற்பு கொடுத்தனர். அப்போது தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது: எங்கள் அணியில் 21 எம்.எல்.ஏ.,க்கள் […]

கல்லூரி கட்டின ஸ்டாலின் தண்ணீருக்காக அணைகள் கட்டினாரா?

சென்னை : மத்திய அரசை குறை கூறும் தமிழக அரசியல் கட்சி தலைவர்களை தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக தாக்கி, விமர்சித்துள்ளார். திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு அடுக்கடுக்காக அவர் பல கேள்விகளையும் முன் வைத்துள்ளார். தமிழிசை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திமுக ஆட்சியில் ஸ்டாலின் தனியார் ஆங்கில பள்ளி கட்டினீர். பொறியியல், மருத்துவக் கல்லூரி கட்டினீர். தண்ணீருக்காக அணைகள் கட்டினீரா? மோடி அரசுக்கு எதிராக கீழடி […]

கைது செய்ய செந்தில் பாலாஜியை தேடும் தமிழக போலீஸ்

குடகு : சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தங்கி உள்ள கர்நாடகா மாநிலம், குடகு சொகு ரிசார்ட்டில் முகாமிட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்வதற்காக அவர்கள் குடகு விரைந்துள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.4.25 கோடி அளவிற்கு லஞ்சம் பெற்றதாக செந்தில் பாலாஜி மீது புகார் […]

கமல்ஹாசனின் அமைச்சரவை: வைரலாகும் புகைப்படம்!!

நடிகர் கமல்ஹாசன் அரசியலில் தனி கட்சி துவங்குவதற்காக அதிக வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. ரசிகர்களும் இதனை மிகவும் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர். கமல் அரசியலுக்கு வந்தால் எப்படி இருப்பார்? அமைச்சரவை எப்படி இருக்கும்? என்பதை இப்பொழுதே கற்பனை செய்து விட்டார்கள் ரசிகர்கள். அதன் வெளிப்பாடாக தற்போது கமல்ஹாசனின் அமைச்சரவை என ஒரு கற்பனை புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகிறது. இந்த புகைப்படத்தில் உள்ள சுவாரஸ்யம் என்னவென்றால் இதில் இருக்கும் […]

மாமியார், வீட்டுக்கு, பல தடவை, சென்றவன் நான்!

சென்னை: ”மாமியார் வீட்டுக்கு, நான் பலமுறை சென்று வந்து விட்டேன். ஆட்சி கலைக்கப்பட்டதும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், மாமியார் வீட்டுக்கு செல்வது உறுதி,” என, தினகரன் தெரிவித்தார். சுதந்திரப் போராட்டத் தியாகி போல அவர் பேசியது, சுற்றி இருந்தவர்களைநகைப்புக்குள்ளாக்கியது. சென்னையில், நேற்று முன்தினம், அ.தி.மு.க., சார்பில் நடந்த, அண்ணாதுரை பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி பேசுகையில், ‘தினகரன், விரைவில் மாமியார் வீட்டுக்கு செல்வார்’ என்றார்.அதற்கு பதில் அளித்து, நேற்று […]

வாகனங்கள் வைத்திருப்போர் பட்டினி கிடக்கவில்லை : அமைச்சர் பேச்சு

திருவனந்தபுரம்: வாகனங்கள் வைத்திருப்போர் யாரும் பட்டினி கிடக்கவில்லை. வசதியுடன் தான் உள்ளனர் என அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தனம் கூறி உள்ளார். பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் விலையை நிர்ணயித்துவருகிறது.இந்த முறைக்கு பல்வேறு எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த விலைமாற்றத்தினால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் என எதிர்கட்சிகள் கூறி வருகின்றன. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிம் பேசிய அல்போன்ஸ் கண்ணந்தனம் வா கனங்கள் வைத்திருப்போர் யாரும் பட்டினியாக […]

தலைவா டைம் டு லீட்…’ – விஜய்யை அரசியலுக்கு அழைக்கிறாரா சாந்தனு?

சென்னை : நடிகர்கள் சாந்தனு பாக்யராஜ், சிபிராஜ் இருவரும் ட்விட்டரில் அரசியல்வாதிகளைச் சாடியுள்ளனர். கார் வாங்குவதற்கே லைசென்ஸ் கட்டாயமாகத் தேவைப்படும்போது அரசியல்வாதிகளுக்கு தகுதி வேண்டாமா எனக் கேள்வி எழுப்பி உள்ளனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என இளம் நடிகர்கள் சிபிராஜ், சாந்தனு ஆகியோர் மறைமுகமாக ட்விட்டரில் அழைப்பு விடுத்திருப்பதாக ரசிகர்கள் உற்சாகமாகிறார்கள்.  

தமிழ்ராக்கர்ஸ், தமிழ்கன் அட்மின் படங்களை வெளியிட்டது தயாரிப்பாளர் சங்கம்!!

சென்னை : தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் ஆகிய இரு இணைய தளங்களின் நிர்வாகிகள் என்று கூறி இரு நபர்களின் படங்களை தயாரிப்பாளர் சங்கம் இன்று வெளியிட்டுள்ளது. இவர்களைப் பற்றி தகவல் தருமாறும் அச் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. தமிழில் வெளியாகும் புதிய படங்களை உடனுக்குடன் இணையத்தில் பதிவேற்றி, திரைத் தொழிலை சிதைப்பதாக இந்த இணைய தளங்களின் மீது குற்றச்சாட்டு வைத்துள்ள தயாரிப்பாளர் சங்கம், அண்மையில் வேலூர் அருகே […]