தமிழ்நாடு செய்திகள்

மோடியை திருமணம் செய்ய ராஜஸ்தான் பெண் தர்ணா

புதுடில்லி, பிரதமர் மோடியை திருமணம் செய்வதற்காக, ராஜஸ்தானை சேர்ந்த பெண், டில்லியில், ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார். டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்தவர், ஓம் சாந்தி சர்மா, ௪௦. பிரதமர் மோடியை திருமணம் செய்ய விரும்பி, டில்லி ஜந்தர் மந்தரில், ஒரு மாதத்துக்கும் மேலாக, தர்ணா போராட்டம் நடத்திவருகிறார்.இது பற்றி, சாந்தி சர்மா கூறியதாவது: […]

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- (அடைப்புக்குறிக்குள் இருப்பது பழைய பதவி) கவிதா ராமு – அருங்காட்சியகங்கள் இயக்குனர் – (தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழக பொது மேலாளர்). டி.அன்பழகன் – ஆவணக் காப்பக இயக்குனர் – (எல்காட் பொது மேலாளர்). எஸ்.சிவராசு – கோயம்புத்தூர் வணிக வரிகள் (அமலாக்கம்) இணை கமிஷனர் – (திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர்). எஸ்.பி.அம்ரித் […]

சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார் சசிகலா !!!

சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. இதற்கிடையே தனது கணவரை பார்ப்பதற்காக […]

தமிழக புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் இன்று(அக்.,5) சென்னை வருகிறார்.

தமிழக கவர்னராக இருந்த ரோசையாவின் பதவிக்காலம் முடிந்த பின், மஹாராஷ்டிர மாநிலம் கவர்னராக இருந்து வந்த வித்யாசாகர் ராவ் தமிழக பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழகத்தின் புதிய கவர்னராக பன்வாரிலால் புரோஹித்தை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 30ம் தேதி(செப்.,30) உத்தரவு பிறப்பித்தார்.  இந்நிலையில், புதிய கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று(அக்.,5) பிற்பகல் சென்னை வருகிறார். கிண்டி ராஜ்பவனில் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும் விழாவில், […]

மோடி மீது நடிகர் பிரகாஷ்ராஜ் ஆவேசம்

பிரபல கர்நாடக பத்திரிகையாளரான கவுரி லங்கேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பிரகாஷ்ராஜ் பேசுகையில், லங்கேஷ் கொலையை பிரதமரின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். அவர்களின் செயல்பாடுகள் குறித்து, மவுனமாக இருப்பதன் மூலம் தன்னைவிட மிகச்சிறந்த நடிகர் என்பதை பிரதமர் நிரூபித்திருப்பதாக விமர்சித்துள்ளார். […]

அரசியலில் வெற்றி பெறும் சூட்சமங்கள் கமலுக்கு மட்டுமே தெரியும்!

நடிகர் திலகம், செவாலியே சிவாஜி என தமிழ் சினிமாவில் ஒப்பற்றவராக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். அவரின் மணி மண்டபம் இன்று சென்னை அடையாறில் திறக்கப்பட்டது. இவ்விழாவில் அரசியல் பிரமுகர்கள், நடிகர், நடிகைகள் என பலர் பங்கேற்றனர். நடிகர் சங்கம் சார்பாகவும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் கமல் பேசிய போது எத்தனை தடைகள் இருந்தாலும், ஒரு ரசிகனாக இங்கு வந்திருப்பேன். இந்நிகழ்விற்கு என்னை அழைத்த கலைத்துறைக்கும், தமிழக அரசுக்கும், அரசியல்லுக்கும் நன்றி […]

அரசியலுக்கு வர என்ன தகுதி வேண்டும் என தெரியவில்லை..! புலம்பும் ரஜினி…!!

சென்னை அடையாறில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜிகணேசன் மணி மண்டப திறப்பு விழா நடந்தது. இதில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் திறந்து வைத்தார். இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது,இந்த விழாவில் கலந்து கொண்டுள்ள ஓபிஎஸ் அதிர்ஷ்டசாலி. இது பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு சிலை வைக்கும் பாக்கியம் பலகோடி பேர்களில் ஒருவருக்குதான் அமையும். அது […]

ஜெயலலிதா எனக்கு இட்லி ஊட்டிவிட்டாங்க: நடிகை கஸ்தூரி

ஜெயலலிதா கனவில் வந்து தனக்கு இட்லி ஊட்டிவிட்டதாக நடிகை கஸ்தூரி டுவிட்டரில் கூறியுள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் இருந்து வருகிறது. ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது, அவர் உடல்நலம் தேறி இட்லி சாப்பிட்டார் என அதிமுக-வின் முக்கிய பிரமுகர்கள் பேட்டியளித்தனர். ஆனால் அவர் உயிரிந்த பின்னர் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக நாங்கள் பொய் சொன்னோம், நாங்கள் அவரை பார்க்கவே […]

கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த திருமுருகன் காந்தி கைது

சென்னை: இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்றதாக மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். ஜெனீவாவில் வைகோ மீது சிங்களர்கள் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் எதிரே தமிழ் புலிகள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி ஆதரவு தெரிவித்தார். ஆதரவு தெரிவித்துவிட்டு திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் […]

ஸ்டாலின் பதவி ஆசை இல்லாத துறவியா: அமைச்சர் சண்முகம் கேள்வி

புதுடில்லி: தமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகம் அளித்த பேட்டி: ஸ்டாலின் பதவி ஆசை இல்லாத துறவியா? ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் கேட்டவர் ஸ்டாலின் தான். சிபிஐ மீது நம்பிக்கை உள்ளதாக கூறும் ஸ்டாலின், 2ஜி ஊழலில் சி.பி.ஐ., விசாரணை முடிவை ஏற்பாரா? இவ்வாறு அவர் கூறினார்.